512 கொழுப்பு அமிலங்கள்
512 கொழுப்பு அமிலங்கள் சாற்றுக் குழாய்க் கற்றைகள் (vascular tubes) குறைந்த அளவிலும், அதற்கு எதிர்த்திசையில் அவை பெருமளவிலும் இருப்பதைக் காணலாம். பிற தாவரங்களை விடப் பற்றி ஏறும் கொடிகளில் உள்ள டிரக்கீடுகள், நார்ச்செல்கள், காற்றுக்குழாய் கள் படிமலர்ச்சியின் மேல் நிலையில் உள்ளதைக் காணலாம். எ.கா.படர்கொடிப் பேரினங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட குகர்பிட்டேசி மெனிஸ்பெர்மேசி முதலிய குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் பாஹினியா வாஹ்லி, என்டாடா ஸ்காண்டன்ஸ், விதை மூடாத் தாவரமான நீட்டம் போன்ற பெருங்கொடிகளில் இயல்பிற்கு மாறான குறுக்கு வளர்ச்சி இருப்பதைக் காணலாம். கொழுகொம்புத் தாவரங்கள் பற்றிப் படரும் கொடிகளைத் தாங்கி நிற்கக்கூடிய வலிமைபெற்றவை யா சு இருக்கவேண்டும். மிகச்சிறிய கொடிகள் படர்வதற்கு மிகச்சிறிய நிமிர் தண்டு உடைய சிறிய செடிகளே போதும். பெருங்கொடிகளைத் தாங்கு வதற்கே பெரிய கொழுகொம்புத் தாவரங்கள் தேவைப்படுகின்றன. கொழுகொம்புத் தாவரங் களுக்கும், அவற்றின் மேல் படரும் கொடிகளுக்கும் உள்ள உறவு முறை ஆய்வுக்குரியது. இயல்பாக இரு தாவரங்களுக்கும் எவ்விதத் தாக்கமும் ஏற்படும் தில்லை. + கொழுகொம்புத் தாவரங்கள் கொடிகள் படர் வதற்கு ஏற்ற இடத்தை மட்டுமே அளிக்கின்றன. உணவு தயாரித்தல், நீரையும் கனிமப் பொருள் களையும் உறிஞ்சுதல் போன்றவற்றில் இரு தாவரங் களும் தன்னிச்சையாகவே செயல்படுகின்றன. ஆனால் சிலசமயங்களில் படர் கொடிகளுக்கும் கொழுகொம் புத் தாவரங்களுக்கும் உள்ள உறவுமுறை ஒன்றை மற்றொன்று தாக்கும் வகையில் உள்ளது. பெருங் கொடிகள் பெரிய மரங்களின் மேல் படரும்போது எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் பெருங்கொடிகளின் இலைகள் கொழுகொம்புத் கிடைக்க வேண்டிய தாவரங்களுக்குக் சூரிய ஒளி காற்று முதலியவை இயல்பான அளவிற்குக் கிடைக் காமல் அவற்றின் உணவு தயாரித்தலும், ஒளிச் சேர்க்கையும், வளர்ச்சியும் தாக்கமுறுகின்றன. கஸ்குடா போன்ற ஒட்டுண்ணித் தாவரங்கள் கொழுகொம்புத் தாவரங்களின் மேல் படரும்போது முதலில் கொழுகொம்புத் தாவரங்களுக்குப் பெரு பளவில் தாக்கம் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணிகள் தம் உறிஞ்சு உறுப்பைக் கொழுகொம்புத் தாவரங் களில் செலுத்தி, அவற்றிலிருந்து நீரையும், உணவுப் பொருள்களையும் உறிஞ்சி வாழ்வதால், நாளடைவில் ஒட்டுண்ணிகள் அளவு மிகும்போது கொழுகொம்புத் தாவரங்களின் வளர்ச்சி குன்றி, இறுதியாக அவை லாழ முடியாமல் பட்டுப்போகின்றன. ஆனால் இது ஒரு நிலையில்லா நிலையே ஆகும். இந்நிலை பெரும் பாலான கொழுகொம்புத் தாவரங்களுக்கு ஏற்படுவ தில்லை. கொழுப்பு கே.ஆர். பாலச்சந்திரகணேசன் இது உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத தாகும். கொழுப்பு இயற்கையாகவே கிடைக்கும் வழவழப்பான பொருள். பொதுவாக நீரில் இது கரையும் தன்மை கொண்டதன்று. ஆனால் கொழுப் பைக் கரைக்கும் நீர்மங்களான ஆல்கஹால். ஈதர் முதலியவற்றில் இது எளிதில் கரையும். பால் முட்டை, இறைச்சி, கல்லீரல், மீன், எண்ணெய் முதலியவற்றில் கொழுப்பு மிகுந்துள்ளது. வகைப்பாடு சாதாரண கொழுப்புகள். இவை ஆல்கஹாலும் கொழுப்பு அமிலங்களும் சேர்ந்த கூட்டுப்பொருளா கும். எ.கா. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மணிலா எண்ணெய், வெண்ணெய், மீன் எண்ணெய், முட்டை முதலியன. கூட்டுக் கொழுப்புகள். இதில் ஆல்கஹால், கொழுப்பு அமிலம் முதலியவற்றுடன் வேறு சில வேதியியல் பொருள்களும் இருக்கும். எ.கா. லெசித் தின், கொழுப்புப் புரதங்கள் (lipoproteins). கொழுப்பு வழிவந்தவை. இவை மேற்கூறிய கொழுப்பு வகைகளிலிருந்து நீராற்பகுத்தல் (hydro- lysis) மூலம் கிடைக்கின்றன. எ . கா : ஒலியீக் அமிலம், அரச்சிடானிக் அமிலம் முதலியன. கொழுப்பைச் சார்ந்தவை. வைட்டமின், A, D, EK மற்றும் ஸ்டீராய்டுகள். உயிரியியலில் கொழுப்பின் காழுப்பின் பங்கு. கொழுப் பிலிருந்து உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து, வெப்பம் முதலியன கிடைக்கின்றன. கொ வளர்சிதை மாற்றத்திலிருந்து கிடைக்கும் வேதிப் பொருள்கள், ஸ்டீராய்டு, பால்வினைஹார்மோன்கள் காலஸ்ட்ரால் பயன்படுகின்றன. உற்பத்திக்குப் இவை லினோலியீக் அமிலம், இன்றியமையாக் கொழுப்பு அமிலங்கள் தயாரிக்கத் தேவைப்படு கின்றன. தோலின்கீழ் உள்ள கொழுப்புப் படலங் கள், உடலை மிக அதிகமான வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாக்கின்றன. கொழுப்பு அமிலங்கள் ஆதித்தன் கரிமச் சேர்மங்களை, அவற்றிலுள்ள வினைப்படு தொகுதிகளுக்கேற்றவாறு பல பிரிவுகளாக வகைப்