பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 கொழுப்புகளும்‌ எண்ணெய்களும்‌

5/6 கொழுப்புகளும் எண்ணெய்களும் இரத்தத்தில் குறைந்து, கொழுப்புச் சத்து ஈரலை அடைந்து சர்க்கரைப் பொருளாக மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்படும்பொழுது கொழுப்புச் சத்து ஈரலில் மிகுதியாகச் சேர இந்நோய் வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஓரளவு இந்நிலையே ஏற்படுகிறது. புரதப் பொருளும் வைட்டமின்களும் உணவில் குறைந்து இருப்பதால், உடல் அணுக்கள் வளர்ச்சி பெற ஓர் அளவுக்குக் கொழுப்புச் சத்து அதிகரிப் பதால், கொழுப்பு ஈரல் நோய் வருகிறது. நுண்ணுயிரி களால் ஈரல் அணுக்கள் பாதிக்கப்பட்டு, ஈரலில் கொழுப்பு அதிகரிக்கிறது. நிலையில் நோயின் அறிகுறிகள். தொடக்க உள்ளவர்களுக்கு, எவ்வித இடர்ப்பாடும் தோன்றுவ தில்லை. அதிகமாகக் கொழுப்பு அடைதலுக்கு உட் பட்டவர்களுக்கு வயிற்றுவலி, கொழுப்பு உணவில் வெறுப்பு ஏற்படும். ஈரல் பெரிதாகும். மது அருந்து பவர்கள் உள்ளிட்ட சிலருக்குக் காமாலை நோயும் ஏற்படலாம். நோய் முற்றியிருந்தால் ஈரல் அணுக் கள் இறந்து, அவ்விடத்தில் நார்ப் பொருள் வளர்ந்து (fibrosis) இரத்த ஓட்டத் தடை ஏற்பட்டு மண்ணீரல் பெரியதாகி. நாளடைவில் வயிற்றில் நீர் தேங்கி மகோதர நோயாக மாறலாம். ஈரலில் ஒரு சிறு பகுதியை ஊசி போட்டு எடுத்து ஆய்ந்து எவ்வளவு போயுள்ளன என்று கண்டுபிடித்தல், கொழுப்புச் சத்து எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடித்தல், ஈரல் இயங்கும் நிலையைப் பல இரத்த ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ளல் என்பவை நோய்காணும் வழி முறைகள் ஆகும். ஈரல் அணுக்கள் கெட்டுப் நோய் தவிர்க்கும் முறைகள். உணவில் அதிக மாகக் கொழுப்புச் சேராமல் இருக்க முட்டையின் மஞ்சள் கரு, இலைக்கோஸ், காரட், ஆட்டு மூளை, கடலை எண்ணெய், நெய், வெண்ணெய் முதலிய வற்றை நீக்கிவிட வேண்டும். புரதப் பொருள், சர்க்கரைப் பொருள் இவற்றை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளுதலும், மதுவருந்தலும் தவிர்க்கப் பட வேண்டும். மருந்துகள். கோலின், டெக்கோ ஸ்டீரால் (dechosterol), வைட்டமின் B ஆகியவை. 6 சோ. நடராஜன் நூலோதி. I.R. Anderson, Muir's Text Book of Pathology, Eleventh Edition. The English Language Book Society and Edward Publishers Limited, London, 1980. கொழுப்புகளும் எண்ணெய்களும் Arnold இவை விலங்குகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங் கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இயற்கைப் பொருள்களாகும். கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவற்றைப் போலவே கொழுப்புகளும் உணவில் இருக்க வேண்டிய இன்றியமையாத பொருள் களாகும். இவை ஊட்டந்தரும் ஆற்றல் மிக்க உணவுப் பொருள்களாக விளங்குகின்றன. சோப்புத் தயாரித்தல், வண்ணங்கள், மெருகெண்ணெய் தயாரித்தல், விளக்கெரித்தல், மருத்துவம், நெசவு. தோல் பதனிடல், உயவிடல் போன்ற பல தொழில் களிலும் பயன்படுகின்றன. இவை தொடுவதற்கு வழுவழுப்பானவை; நீரில் கரையாதவை; எளிதில் ஆவியாகாதவை. சாதாரண எ.கா. வெப்பநிலையில் உள்ளவை திண்ம கொழுப்புகள் நிலையில் எனப்படும். ஆட்டிறைச்சிக் கொழுப்பு, வெண்ணெய்க் கொழுப்பு. எண்ணெய் என்பது சாதாரண வெப்பநிலைகளில் நீர்ம நிலையில் காணப் படுவது. எ.கா. தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண் ணெய். போதுமான குறைந்த வெப்பநிலைகளில் அனைத்து எண்ணெய்களும் திண்மமாகும் இயல் புடையன. அவ்வாறே உயர் வெப்ப நிலைகளில் கொழுப்புகள் அனைத்தும் நீர்மமாகும் தன்மையன. விலங்குக் கொழுப்பு. ஆடு மாடுகளினின்றும் பன்றி களினின்றும் கொழுப்புகளைப் பெறலாம். விலங்கு களின் திசுக்களில் கொழுப்புகள் நுண்ணிய உருண்டை களாக உள்ளன. உடல் வெப்பநிலையில் இவை எண் ணெய்த் துளிகளுடன் விரவி உள்ளன. விலங்கினம் இறந்த பின் இவை கட்டியாகிவிடுகின்றன. மனித உடலின் எடையில் சுமார் 12% கொழுப்புப் பொருள் உள்ளது. வெண்ணெய், நெய் ஆகியவை பாலிலிருந்து எடுக்கப்படும் சிறப்புவகைக் கொழுப்புப் பொருள் களாகும்.

  • எண்ணெய்கள்

இயற்கையில் கிடைக்கும் எண்ணெய்கள் வகைப்படும். பல கொழுப்பு எண்ணெய்கள். இவை விலங்குகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றி லிருந்து கிடைக்கின்றன. தாவர எண்ணெய்கள். பெரும்பாலும் தாவரங் களின் விதைகளிலும், கொட்டைகளிலும் காணப்படு கின்றன. நிலக்கடலை, எள், கடுகு, தேங்காய், சோயா அவரை, சூரியகாந்தி விதை ஆகியவை எண்ணெய்ச் சத்து நிரம்பிய விதைகளாகும். இவை உண்ாகப் பயன்படுவன. இவற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய் கள் உண்ணத்தக்க எண்ணெய்கள் (edible oils) எனப் படும். உண்ணத்தக்க எண்ணெய்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவும், மணமாகவும் இருத்தல் வேண்டும். பருத்தி விதை, ஆளி விதை. ஆமணக்குக் கொட்ை டை கியவை உணவாகப் பயன்படாத விதைகளாகும்.