பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 கொழுப்புத்‌ தடுக்கைக்‌ நோயியம்‌

522 கொழுப்புத் தடுக்கைக் நோயியம் அல்லது ஆளிவிதை எண்ணெய்கள் பயன்படுகின்றன. ஒரே எண்ணெயை மட்டும் கொண்ட சோப்பைவிடப் பல எண்ணெய்களின் கலப்பைக் கொண்ட சோப்பே சிறந்தது. மலிவான சோப்புகளில் சோடியம் சிலிக் கேட், சோடா உப்பு, மாக்கல் போன்ற நிரப்பிகள் (fillers) மிகுந்து இருக்கும். மெருகெண்ணெய். வண்ணம், அச்சு மை எண்ணெய்த்துணி ஆகியவற்றைத் தயாரிப்பதில் கொழுப்புகள் பயன்படுகின்றன. ஆளிவிதை, சோயா, அவரை எண்ணெய் முதலியவை காற்றுப்படுமாறு நெடுநேரம் சூடேற்றப்பட்டால் அல்லது குறைந்த சூட்டில் இவற்றின் வழியே காற்றைச் செலுத்தினால் இவை கட்டியாகிவிடும்; எண்ணெய் ஆக்சிஜனேற்ற மடைந்து உருமாறிய நிறமுடைய எண்ணெய் தோன்றும். தகுந்த கரைப்பான்களில் கரைக்கப்பட்டு இலேசாகப் பூசப்பெற்றால் விரைவில் உலரும் நல்ல பூச்சாகிறது. ஆளிவிதை எண்ணெய், இயற்கைப் பிசின்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளி ஊடுரு வும் மெருகு பூச்சுகள் தயாரிக்கப்படுகின்றன. உயவூட்டும் பொருள்களாகவும், நெசவு, மருத் துவம், தோல் பதனிடல் போன்ற தொழில்களிலும் கொழுப்புகளும் எண்ணெய்களும் பெரிதும் பயன்படு கின்றன. தேனடையிலிருந்து பெறும் தேன்மெழுகு, திமிங்கிலத்திலிருந்து கிடைக்கும் மெழுகு போன்ற பொருள்கள் மெழுகுவத்தி, மெழுகு, ஈரம்படாமல் தடுக்கும் பூச்சு ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன் படுகின்றன. இவை அழகு பொருள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. லக்குமணன் . யம் (fat embolism syndrome) தோன்ற இரு கார ணங்கள் உண்டு. ஒன்று நீண்ட எலும்பு முறிவால், எலும்பு மஜ்ஜையில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் சேர்வது. மற்றொன்று விபத்துகளில் இரத்தத்தில் வேதி மாற்றத்தால் தனிக்கொழுப்பு அமிலம் கூடுவ தாகும். நுரையீரல் தந்துகிகள் அடைப்பட்டு நலிவு டன் இரத்தப்பெருக்கைத்தோற்றுவித்து. ஆக்சிஜன் மாற்றத்தைத் தடுக்கும் என மெய்ப்பிக்கப்பட் டுள்ளது. நோயறிதல். இந்நோயியத்தில் பாதிக்கப்பட்ட நுரையீரல், மூளை, தோல் இவற்றில் நோய்க்குறி களைத் தோற்றுவிக்கும். ஆக்சிஜன் குறைவு மனக்குழப்பம், தோலில் தந்துகிகள் பாதிப்பால் ஏற்படும் நிறமாற்றம், நுரையீரல் பாதிப்பு இவற் றுடன் சுவாச விகிதம் கூடுவதால் இதயத்துடிப்பும் கூடும். சுவாசத்தடை ஊதாநிற மாற்றம் நகங்களில் காணப்படும். மூளைப்பாதிப்பு மனக்குழப்பமாகத் தொடங்கி, பின் மூளை கலங்கி அடக்கமுடியா நிலைக்குச் (delirium) சென்று முடிவாக ஆழ் மயக்க நிலை ஏற்படும். மார்பு, கை கால்களிலும், கண்விழிவெண்படலத்திலும், மேல் அண்ணத்திலும் விபத்து நேர்ந்து சுமார் 48-72 மணி நேரத்தில் இந்நோய்க்குறி தோன்றும். . ஆய்வு. மார்பு எக்ஸ்கதிர்ப் படம், இதய மின் வரைபடம், சிறுநீரில் கொழுப்புத் துகள்கள், எச்சிலில் கொழுப்புப் பகுதி முதலியவை உதவினாலும், இரத்தத்தில் லைப்பேஸ், டிரைபுடிரினேஸ் அளவு கூடிக் காணப்படும். திரோம்போசைட் குறைவு ஃபைபிரினோஜன் அளவு குறைவு பகுதி திரோம்போப் பிளாஸ்டின் நேரம் மிகுந்து காணப்படும். கொழுப்புத் தடுக்கை நோயியம் கடுமையான காயங்களின் பின்விளைவால் வரும் நுரையீரல் சிக்கல்களுக்குக் காரணம் கொழுப்புத் தடுக்கையே எனச் செங்கர் என்பார் முதன்முதலில் குறிப்பிட்டார். ஆனால் பெர்க்மான் என்பார் நீண்ட எலும்பு முறிவிற்குப் பின்வரும் இந்நோயின் குறி களாகிய மனக்குழப்பம், சுவாசத்தடை, தோலில் உண்டாகும் சிறு சிறு சிவப்பு நிறமாற்றம் (petechial) பற்றி விளக்கியுள்ளார். ஹெர்மன் என்பார் 1932 இல் இந்நோய்க்கு மருத்துவமாக 5% எத்தில் ஆல்கஹால் 5% குளூக்கோஸ் கொடுக்கலாம் என்று கூறினார் விபத்து நேர்ந்து மூன்று மணி நேரத்தில் நோயாளி இறந்தால் அது விபத்து அதிர்ச்சியால் என்றும் 3 நாள் சென்றபின் இறந்தால் கொழுப்புத் தடுக்கையால் என்றும் 3 வாரம் சென்று இறந்தால் அது நுரையீரல் தடுக்கையால் என்றும் கொள்ளலாம். நோய்க்குறியியல். கொழுப்புத் தடுக்கைக் நோயி மருத்துவம். விபத்தால் உண்டாகும் அதிர்ச் சிக்குக் குளூக்கோஸ், இரத்தம், பிளாஸ்மா முதலீ யவை கொடுத்து இரத்த ஓட்டத்தையும் முறிந்த எலும்பையும் சீராக்கலாம். கார்ட்டிசோன் மருந்து, சோலு மெட்ரால் (solu medrol) 30 மி.கி/கி.கி. [] கி. கிராமுக்கு 30 மி.கி. வீதம்) 24 மணி நேரத் தில் கொடுப்பதால் தனிக் கொழுப்பு அமிலத்தின் நச்சுத்தன்மை மாறும். செயற்கை முறையில் சுவாசத் தைக் கருவி மூலம் செலுத்த நுரையீரல் செயல் பாதிப் புக் குறைவதுடன் மரணத்தின் வீதமும் குறையும், -மா. ஜெ. ஃபிரெடரிக் ஜோசப் கொழுப்புத் துகளடைப்பு பெரிய காயங்கள். எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் உடனடியாக இரத்தக் குழாய்களில் இந்நிலை