பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 கொள்ளு

526 கொள்ளு கொள்ளு இந்தியாவில் மிகப் பழங்காலம் தொட்டுச் சிற்றூர் மக்கள் பயன்படுத்தி வரும் பயறு வகைகளுள் கொள்ளு மிகவும் இன்றியமையாதது. வெப்ப மண்டலத் தாவரமான இது இந்தியாவில் எங்கும் பயிரிடப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, மலேயா, மொரிஷியஸ், பர்மா முதலிய இடங்களில் சுமார் 1000 மீ. உயரம் வரை கொள்ளு பயிரிடப்படுகிறது. இதன் தாயகம் வெப்ப மண்டல ஆசியா, ஆஃப்ரிக்கா என்று தெரிகிறது. இதன் தாவரவியல் பெயர் டாலிக்கஸ் பைஃபு ளோரஸ் லின் (Dolichos biflorus, linm) எனப்படும். பாபிலயனேடே என்ற துணைக் குடும்பத்திலும் லெகுமினோசி என்ற குடும்பத்திலும் அடங்கும். இக் குடும்பம் இருவித்திலைத் தாவர வகுப்பில் அல்லி இணையாதவை என்ற துணை வகுப்பினுள்,கலிசிஃபு ளோரே என்ற வரிசையில், ரோஸேல்ஸ் என்ற துறையினுள் அமைந்துள்ளது. இது நலிந்த தண்டு உடைய பின்னல்கொடி. கொடியின் தண்டு,கிளை, லை, இலைக்காம்பு முதலிய உறுப்புகளில் மென்மை யான தூவிகள் உள்ளன. கொடிகள் 1 மீ வளரும். இலைகள் கூட்டிலைகள்; பொதுவாக 3 சிற்றிலை கொண்டவை; சிற்றிலைகளின் விளிம்பு ஒழுங் சவ்வு போன்றது; சிற்றிலைகள் முட்டை கள் கானது; வடிவானவை; கூர் நுனி கொண்டவை; ஓரிரு அங்குல நீளமும் 1 அங்குல அகலமும் உடையவை; இலைப் பரப்பிலும் தூவிகள் உள்ளன. மஞ்சரி. நுனி வளர் மஞ்சரி இலைக்கோணத்தில் தோன்றும்; 1-3 மஞ்சள் நிறப் பூக்கள் இருக்கும். இருபால் பூக்கள், முழுப்பூ, இருபக்கச் சமச்சீர் உடை யவை; பூக்காம்புச் செதில்களும், பூவடிச் செதில் களும் உடையவை. அல்லி வட்டம், 5 அல்லி இதழ்கள், இணையா தவை. வண்ணத்துப் பூச்சி அல்லி வட்டம்; அச்சு அண்மையில் உள்ள அல்லி பெரியது. வண்ணம் கொண்ட பதாகை அல்லி, பூச்சிகளைக் கவர உதவு கிறது. பக்கவாட்டு இரு சிறகு அல்லி இதழ்கள் பூச்சி கள் வந்து உட்கார வாய்ப்பாகின்றன. அச்சு எதிரில் உள்ள இணைந்த இரு படகு அல்லிகளும் மகரந்தத் தாள் வட்டமும் குலக வட்டமும் பாதுகாப்பாக அமைந்துள்ளன. கீழிறங்கு ஒழுங்கு அடுக்கு இதழ் புல்லி வட்டம். 5 புல்லி இதழ்கள்: இணைந்தவை. பசுமை நிறம் கொண்டவை; நுனியில் ஈட்டி போன்ற நீண்ட பற்களைப் போலப் பிரிந்திருக்கும். மகரந்தத்தாள் வட்டம். 10 மகரந்தத்தாள்கள் உள்ளன. அவற்றுள் g மகரந்தத்தாள்கள் ஒரு கற்றையிலும், மற்றொன்று தனியாகவும் உள்ளன; மெல்லிய மகரந்தக் கம்பிகள்: இரு அறைகள் கொண்ட மகரந்தப்பைகள் காணப்படும். சூலகம்: மேல்மட்டச் சூல்பை, ஒரு சூலக இலை யால் ஆனது; ஒரு சூல் அறை: பல சூல்கள் விளிம்புச் சூல் அமைவில் இணைந்திருக்கும்; சூலகத் தண்டு கனியிலும் நிலைத்தது. கனி. இருபுற வெடிகனி 5-6 விதைகள் விதை கெட்டியான விதைத்தோல் உள்ளன. உடையது; முளைசூழ்தசை (endosperm) இல்லை. பயிரிடுமுறை. கொள்ளு ஒரு புன்செய்ப் பயிரா கும். ஆண்டு மழை அளவு 35 அங்குலத்திற்கு மிகவும் குறைவாக உள்ள வறள் நிலங்களில் இது பயிரிடப்படும். பெருமழை பொழியும் இடங்களில் மழைக்காலம் முடிந்த பிறகு இது விதைக்கப்படு கிறது; மண்ணில் எஞ்சியுள்ள ஈரமே இதற்குப் போது மானது; சிற்சில பகுதியில் பனி ஈரத்தாலேயே முளைத்து வளரும். தமிழக. ஆந்திர. கர்நாடக மாநிலங்களில் பயறு, உளுந்து பயிராகும் நிலங்களில் பாதி அளவு நிலங்களில் கொள்ளு பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த நிலப்பகுதியில் 90% இம்மாநிலங்களில் விளைகிறது. தமிழ்நாட்டில் சோளம், கம்பு போன்ற தானியங்களுடன் ஊடு பயிராகக் கொள்ளு பயிரிடப் படுகிறது. இப்பயிர்கள் விளையும் நிலங்களில் கொள்ளு பயிரிட்டால் இது மண்ணை மூடி நிரப்பி, மண் ஈரம் ஆவியாகாமல் பாதுகாக்கும் பயிர் ஆகிறது. இத்துடன் பயறு, தட்டைப் பயறு, உளுந்து ஆகிய பயறு வகைகளும் கலந்து பயிரிடப்படும். காரம் அற்ற எல்லா மண் வகையிலும் கொள்ளு சாகுபடி செய்யப்படுகிறது. குயின்ஸ்லாந்தில் கொள்ளு யற்கை வாழ் னமாகக் காணப்படு கிறது. சத்து மிகுதியும் இல்லாத பரல் கற்கள் நிறைந்த பாசன வசதியற்ற மண்ணிலும் கொள்ளு நன்கு விளையும். நல்ல திண் சிவப்பு வண்டல் மண், கரிசல் மண், களிமண், பரல் கற்கள் உடைய மேட்டுப்பாங்கான நிலம், காட்டை அழித்து உண்டாக்கிய புதிய நிலத்தில் உள்ள மண் இவை கொள்ளு பயிரிட ஏற்ற மண் வகைகள் ஆகும். புதிய நிலத்தில் எந்தப் பயிரும் பயிரிடுவதற்கு கொள்ளைப் பயிரிடலாம். . முன் இதன் வேர்களில் காணப்படும் முண்டுகளில் உள்ள பாக்டீரியாக்கள் வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனைத் தக்க வைக்கும் ஆற்றல் பெற்றவை; இதனால் விளைச்சல் முடிந்து நிலத்தின் மேற்பகுதி யில் உள்ள செடிகளைப் பிடுங்கிய பிறகும் நிலத் திற்கு அடியில் உள்ள வேர்கள் நிலத்தில் வளத்தைப் பெருக்குகின்றன. இதனால் தானியப் பயிர்களையும் கொள்ளையும் பயிர்ச் சுழற்சி முறையில் பயிரிட லாம்; பயிரிடும் பருவத்தில் வேறு பயிரைப் பயிரிடாத பொழுதும் கொள்ளைப் பயிரிடலாம். பொ துலாக, கொள்ளு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைக்கப்படுகிறது. ஜுன், ஆகஸ்ட்,