பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளுஞ்சி 527

நவம்பர் மாதங்களில் கால்நடைத் தீவனத்திற்காக விதைப்பர். ஒரே நிலத்தில் ஒரே ஆண்டில் மூன்று முறை பயிரிடப்படுகிறது. டிசம்பர், ஜனவரியில் அறுவடை நடைபெறுகிறது. கொள்ளு வரிசையாக அல்லது பிற தானியங்களுடன் கலந்து பரவலாக விதைக்கப்படுகிறது. வரிசையாக விதைக்கும் பொழுது 9 அங்குல இடைவெளி வேண்டும். பயிர் வளர்த்து சுளைகள் நீக்கப்படுகின்றன. செடிகள் மெல்லிய லைகளைக் கொண்டு புதர் போல 30 செ.மீ. உயரம் உள்ள பின்னுங் கொடிகளாக நிலத்தை மூடிய வண்ணம் உள்ளன. கனிகள் முதிர்ச்சி அடையும்போது, இலைகள் வறண்டு நிலத்தில் உதிர்ந்துவிடும். முழுச் செடிகளை வேருடன் பறித்து அறுவடை செய்வர். அவற்றை ஒரு வாரம் அடுக்கி வைத்துப் பிறகு போர் அடித்துத் தனியாகப் பிரித்தெடுப்பர், கொள்ளு பந்தயக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும். கொள்ளுப் பயிரை நோய்கள் பெரி தும் தாக்குவதில்லை; கம்பளிப்புழுவும்,, வெட்டுக் கிளியும் செடிகளைப் பாதிக்கின்றன. இதற்கு RHC, 005%மருந்து பயன்தருகிறது. வேர் அழுகல் நோய், இலைத்துரு நோய் போன்றவையும் விளைச்சலைப் பாதிக்கக்கூடும். பயன்கள். அரிசியும், கொள்ளும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியைக் குடித்து வந்தால், மிகு பசி, உடல்வன்மை, வீரியப்பெருக்கம் வை உண்டாகும். சூடான கொள்ளுச் சாற்றால் இளைத்த உடல் பருத்து வலிமையடையும். வாததோடம், கோபம், சிரகணி, குன்மம், சுரம், இளைப்பு, கண் நோய்கள் ஆகியவை நீங்கும். பித்த இலையைப் பிழிந்து, 12 கிராம் சாறெடுத்து 3 கிராம் காசுக்கட்டிச் சேர்த்துக் குழைத்து நாளும் 3 வேளை கொடுத்து வர, கழிச்சல் நீங்கும். 350 கிராம் கொள்ளு, நாலு அல்லது ஐந்து முந்திரிப் பருப்பு இவற்றைச் சேர்த்து 280 கிராம் நீர் விட்டுக் கலந்து இரத்த பேதிக்குக் கொடுக்கலாம். 1 பங்கு கொள்ளுக்கு 30 பங்கு நீர் கலந்து அத்துடன் 1.3 கிராம் இந்துப்புச் சேர்த்துக் கொடுக்க, இருமல், உள்ளுறுப்புக்களில் சேர்கின்ற சேர்கின்ற கற்கள் கற்கள் இவற்றைப் போக்கும். I-க்கு 10 பங்கு நீர் விட்டுப் பெருக்கிய குடிநீர். பேறுகால அழுக்கை நீக்கும்; இக்குடிநீரோடு பெருங் காயம், சுக்கு முதலியவற்றைச் சேர்த்துச் சாப்பிடக் குன்மம் குணமாகும். விதையைத் தூள் செய்து கற் பூரங்கூட்டி மேலுக்குத் தடவிவர வியர்வை நீங்கும். கருங்கொள்ளை, காவிக்கல், காந்தக் கல், புற்றுமண் முதலியவற்றோடு சேர்த்து முட்டை வெண்கருவால் அரைத்து யானைக்காலுக்கும், வீக்கம், கட்டி முதலிய வற்றிற்கும் பற்றிடலாம். கே.ஆர். பாலச்சந்திரகணேசன் சே.பிரேமா கொளுஞ்சி 527 நூலோதி. முருகேச முதலியார், குணபாடம் (மூலிகை வகுப்பு), அரசினர் அச்சகம், சென்னை. 1951. கொளுஞ்சி இதன் தாயகம் ஆசியாவாகும். இது தற்போது உல செங்கும் வளர்கிறது. குறிப்பாசு, ஜாவா கடற்கரை. மலேய ஆர்ச்சிபெலாகோ தீவுகளில் கடல் மட்டத்தி லிருந்து 1650 மீட்டர் உயரம் வரை உள்ள இடங் களில் கொளுஞ்சி (Tephrosia, pers) செழித்து வளர்கிறது. வளரியல்பு. லெகுமினேசி பெருங்குடும்பத்துள் பாபிலியோனேசி துணைக் குடும்பத்தைச் சார்ந்த இப்பேரினம் 1.5 2.5மீ வளரும். வலிமையான பல கிளைகளைக் கொண்டு வளரும் இச்சிறுமரம் சில சமயங்களில் குறுஞ்செடிகளாகவும் காணப்படும். கூட மிகவும் கேடு அடைந்த மண் வகைகளில் இத்தாவரம் நன்கு செழித்து வளர்கிறது. இச்சிற்றி னங்களின் வேர்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் கூட்டுயிரியால் தோற்றுவிக்கப்பட்ட வேர் முண்டுகள் (root nodules) பெருமளவில் காணப்படும். இலைகள். ஒரு சிற்றிலையில் முடியும் இறகு வடிவக் கூட்டிலைகள் தண்டின் மீது மாற்றடுக்கத்தில் அமைந்திருக்கும். சிலசமயங்களில், கூட்டிலைகளின் எண்ணிக்கை மிகக்குறைந்த தனிச் சிற்றிலையாகக் காணப்படும். கூட்டிலையில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்றிலையும் இணைப்போக்கு நரம்பமைப்பைக் கொண்டது. பொதுவாக, இலையின் அடிப்புறத்தில் பட்டுப் போன்ற மென்மையான மயிரிழைகள் அடர்ந்திருக்கும். சிற்றிலைகள் யாவும் அடிச்செதில் களுடையவை. இச்செதில்களில் எப்போதும் இலைக் காம்புகள் பருத்திருக்கும். இலைகள் அம்பு வடிவ மாகவோ குத்தூசி வடிவிலோ காணப்படும். சில சமயங்களில், இச்சிற்றிலைகளே முள்களாகக் குறைந் திருக்கும். மஞ்சரி. அடி முதல் நுனி நோக்கி மலரக்கூடிய மலர்களைக் கொண்ட மஞ்சரி (raceme), வரை யறுக்கப்படாத வளர்ச்சியைக் கொண்டது. து, தண்டின் நுனியிலோ இலைக் கோணத்திலோ அமைந்திருக்கும். அரிதாகத் தனிமலர்கள் காணப் படும். மலர்கள். ஒழுங்கற்ற, இருபால் தன்மை கொண்ட இருபக்கச் சமச்சீரான (zygomorphic) மலர்கள் கருஞ்சிவப்பு, சிவப்பு அல்லது வெண்மையானவை; ஐந்தங்க மலர்கள். பூவடிச் செதில்கள் உண்டு.