பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 கொளுஞ்சி

528 கொளுஞ்சி 63 டெட்ரோசியாகேன்டிடாவின் கிளை 1. இளமையான மலர் 2. கனி 3. மஞ்சரித்தண்டு 4. ஒரு சிற்றிலையின் முடிவுறும் சிறகு வடிவக் கூட்டிலை. புல்லிவட்டம், புல்லி இதழ்கள் 5, இணைந்து மணி வடிவப் புல்லிவட்டக் குழலை உருவாக்கும். குழலின் விளிம்புகள் யாவும் இணையற்றவை; அதாவது, மேலும் கீழுமாக இருக்கும். கீழே இருக்கும் இரு புல்லி இதழ்கள் நீளமாகவும், மேலிருப் பவை இணைந்துமிருக்கும். தொடு இதழ் ஒழுங் கமைப்புக் கொண்டவை. அல்லிவட்டம். அல்லி இதழ்கள் 5, காம்புடை யவை, பிரித்தவை. அளவிலும், அமைப்பிலும் வேறு பட்டவை. தனி அல்லி ஏனைய தாவரக் குடும்பங் களில் காணப்படுவது போலன்றி எப்போதும் பெரிய தாகவும், பிற அல்லி இதழ்களுக்கு வெளிப்புறமாகவும், மலரின் மேல்பக்கமாகவும் அமைந்திருக்கும். அல்லி அழகிய வண்ணத்துடனுமிருக்கும். இதைக் கொடி அல்லி என்பர். பகட்டான இவ்வல்லியிதழ், பூச்சி களைக் கவர்ந்திழுப்பதால் இம்மலரில் பூச்சிகளால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. இவ்வல்லி இதழ், தான் இருக்கும் நிலையாலும், அளவாலும், வடிவத்தாலும் மலர் முழுமைக்கும் எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது. இதற்குக் கீழ்ப்புறமாக இரு அல்லிகள் பக்கவாட்டில் உள்ளன. இவற்றிற்கு, இறக்கை அல்லிகள் (alac) என்று பெயர். மலரின் மைய அச்சுக்கு இரு புறங்களிலும் இறக்கை போன்றுள்ள இவ்வல்லிகள் மலரை நாடி வரும் பூச்சிகள் அமர்ந்து தேனை அருந்த ஏதுவாக உள்ளன. கீழ்ப்புறத்தில், இரு சிறிய அல்லி இதழ்கள் அடிப் புறத்தில் இணைந்திருக்கும். இவற்றைப் படகு அல்லிகள் (carina) என்பர். மேற்கூறிய, ஏனைய அல்லிகளுக்கு உட்புறமாக