பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 கோகோ

534 கோகோ இவற்றில் இரட்டைச்சிப்பிகளைக் கொண்ட முழுமையான தொல்லுயிரெச்சங்கள் சிறிதளவும் தேய்மானம் அடையாமலும் உடையாமலும் முழுவடி வத்துடன் பாதுகாக்கப்பட்டிருக்கும். இப்பாறைகள் கட்டடக் கற்களாகவும், சாலைக் சுற்களாகவும் வேதியியல் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகின்றன. இரா. இராமசாமி நூலோதி. F.J, Pettijohn, Sedimentary Rocks, Harper & Brothers, New York, 1949. காப இை கோகோ இதன் தாவரவியல் பெயர் தியோபிரோமா கோகோ (Theobroma Coco). இது இருவித்திலைத் தாவர வகுப்பினுள், அல்லி இணையாதவை என்ற துணை வகுப்பினுள் மால்வேசி என்ற துறையினுள் ஸ்டெர்குலியேசி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலையின் கிழக்குப் பகுதிச் சரிவுகளில் இருந்து கோகோ மரம் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இது மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ முதலிய பகுதிகளில் 2000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வந்துள்ளது. கோகோ இங்கிருந்து ஆஃப்ரிக்கா. தென்கிழக்கு ஆசியா,நியூகினியா, ஆஸ்திரேலியா முதலிய நாடு களுக்குப் பரவியது. கோகோவின் தாயகமான தென் அமெரிக்காவில் கோகோ, மாறாப்பசுமை கொண்ட வெப்ப மண்டல மழைக்காடுகளின் இறுதி வரிசையில் அமைந்துள்ள சிறிய மரமாகும். இது நதிக் கரை யோரங்களில் காணப்படும். பொதுவாகச் சமவெளி களிலும், மலைப் பகுதிகளில் 1300 மீ. உயரம் வரை யிலும் பயிரிடப்படும். 21 - 32C வெப்பநிலையிலும் 40 -100 அங்குல ஆண்டு மழையளவு உள்ள பகுதி களிலும் பயிரிடலாம். நிழல் பகுதிகளிலும் தரை களிலும் நன்றாக வளர்கிறது. வளரியல்பு. இது 6 - 8 மீட்டர் உயரம் உள்ள சிறிய மரம். அடி மரமும் ஆணிவேரும் சேரும் இடத்தில் ஒரு புடைப்பு உள்ளது. இதிலிருந்து இரண்டாம் நிலை வேர்கள் உண்டாகின்றன. வேர்கள் வேர்ப்பூசணத்துடன் காணப்படலாம். நாற்று வளர்த்து 14 மாதங்களுக்குள் 1.5. மீ. வளரும். பிறகு நுனிமொட்டு. பல பகுதிகளாகப் பிரித்து விசிறி போன்ற கிளைகளைக் கொடுக்கும். பிறகு ஒரு கோண மொட்டால் செங்குத்துத் தண்டு வளர்ச்சியடையத் தொடங்கும். அதிலிருந்து விசிறி போன்ற கிளைகள் தோன்றுகின்றன. தண்டின் புறணியிலும் மையப்பகுதியிலும் வழுக்கை காணப்படுகிறது. பல் இலைகள். தனி இலைகள்: பெரியவை; மென்மை யானவை; தூவிகள் கொண்டவை. அடிக்காம்பு கிஎ கேரகோ மரம் புடைப்பு உடையது. இலையடிச் செதில்கள் ஈட்டி போன்றவை. லைத்தூள் நீள்முட்டை வடிவில் பளப் பளப்பானது: ஒழுங்கான விளிம்பு; கூர் நுனி; மைய நரம்பு தடித்தது. 9-12 பக்க நரம்புகள் உள்ளன. மஞ்சரி, பெரிய தண்டிலிருந்து நேரிடையாகத் தோன்றும்; நுனி வளரா மஞ்சரி. ஒரு தனி மஞ்சரியில் 50 பூக்கள் வரை காணப்படும். மலர்கள். இருபால் பூக்கள்: முழுப்பூ: ஒழுங் கானவை; ஆரச் சமச்சீர் உடையவை; ஐந்தங்க மலர். பூக்காம்பு நீளமானது. பச்சை, வெள்ளை அல்லது சிவப்பு நிறமானது. அல்லிவட்டம். புல்லி இதழ்களைவிடச் சிறியலை; கோப்பை வடிவப் பைகள் கொண்டவை. அல்லி இதழ் நுனி கரண்டி போன்றது; மஞ்சள் நிறம்: உள்நோக்கி அல்லது வெளிநோக்கி வளைந்திருக்கும். புல்லிவட்டம். 5 புல்லி இதழ்கள்; முக்கோண வடிவமானவை; சதைப்பற்றுள்ளவை; தொடு இதழ் ஒழுங்கு: அடிப்பகுதியில் இணைந்தவை.