536 கோங்கு
536 கோங்கு இல்லாத பழுப்பு நிறம் கொண்ட சுருங்காத விதை களில் இருந்து வித்திலைகளைப் பிரித்தெடுத்து வறுக்கும்போது அவற்றிலிருந்து சாக்லேட் மணம் வெளியாகிறது. இவற்றில் 55% கொழுப்பு இருக்கும். உண் நோய்கள். ஃபைடாஃப்தோரா பாமிவோரா என்ற பூசணம் கனித் தோலில் தடிப்புகளை டாக்கிக் கனிகளை அழுகச் செய்யும். இந்நோயைச் செம்பு தூவுவதன் மூலம் தடுக்கலாம். மராஸ்மியஸ் பெரினிஷியோசஸ் என்ற பூசணத்தால் மஞ்சரி இலை, கிளையாக மாறுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி களை நீக்கி இந்நோயைத் தடுக்கலாம். நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு. துத்தநாகக் குறைவாலும் மரங்கள் தாக்கப்படும். பொருளாதார மருத்துவப் பயன்கள். கோகோ விதையில் 1% க்குக் குறைவான தியோபிரோமின் என்ற ஆல்கலாய்டும் கேஃபீனும் கலந்திருப்பதால் கோகோப் பானம் அருந்தியவர்களுக்கு உற்சாகம் பிறக்கிறது. கோகோ விதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கோகோ கனிகள் அறுவடை முடிந்ததும் பெட்டிகளில் வைத்துக் காடியாக்கப்படும். இந்தச் சமயத்தில் வெப்பநிலை 50°C க்கு மேல் போகலாம். சூட்டினால் விதையின் உயிர்ப் பகுதி கொல்லப்படு கிறது. அதிக வெப்பத்தால் நொதிகள் செயல்பட்டு பல வேதி மாறுதல்களுக்குப் பிறகு சாக்லேட் முடைய முன்னோடிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. விதைகளை சாக்லேட் வறுக்கும்போது வெளிப்படும். வறுப்பதற்கு முன் சிவப்பு நிறமாக இருந்த விதை, வறுத்த பிறகு பழுப்பு நிறம் பெறு கிறது. விதை ஓடு வித்திலையினின்று பிரிகிறது. காடியாதலுக்குப் பிறகு விதைகளை வெயிலில் உலர வைத்துக் கோணிப்பைகளில் கட்டுவர். விதை ஓட்டுடன் உள்ளது. மண மணம் சாக்லேட் தயாரிக்கும் முறை, முதலில் விதைகள் தூய்மை செய்யப்படுகின்றன வறுக்கும்போது ஓடு தனியாகிறது. விதையில் உள்ள ஈரம் 1.2% ஆகக் குறைகிறது. வறுக்கும்போது விதைகள் 146°C வெப்பநிலையில் உள்ளன. வறுத்த பிறகு விதை ஓடுகள் உடைக்கப்படுகின்றன. பிறகு வித்திலைத் துண்டுகளில் காரம் சேர்க்கப்படுகிறது. இதனால் இயற்கையாக உள்ள அமிலங்கள் நடுநிலையாக்கப் படும். காரம், நீரில் கரைக்கப்பட்டு அதில் வித்திலை கள் ஊற வைக்கப்படும். போதிய கால இடை வெளிக்குப் பிறகு வித்திலைத் துண்டுகள் உலர வைத்து வறுக்கப்படுகின்றன. இவ்விதத் தயாரிப்பிற்கு டச்சுச் செயல் முறை என்று பெயர். இதை அரைத்துச் சாக்லேட் தயாரிப்பர். வித்திலைகளை அரைக்கும்பொழுது வெளி யாகும் நீர்மம் சாக்லேட் நீர்மம் எனப்படும். இதைக் கசப்புச் சாக்லேட் என்றும் கூறுவர். சாக்லேட் நீர்மம் உணவுப் பொருள்களுக்கு மணம் ஊட்டவும். கோகோப்பொடி. இனிப்புச் சாக்லேட், பால் சாக்லேட் தயாரிக்கவும் பயன்படுகிறது. பல கோகோப் பொடி தயாரிப்பு. சாக்லேட் நீர்மம் வடிகட்டிகள் மூலம் பாய்ச்சப்பட்டு, எஞ்சிய கொழுப்பு தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. இதை அரைத்துக் கோகோப்பொடி செய்வர். கோகோப்பொடி குளிர்ச்சியான அல்லது சூடான கோகோ பானமாக மக்களால் விரும்பி அருந்தப்படு கிறது. இனிப்புக் குச்சி, ரொட்டி, கேக், பனிக் குழைவு (ice cream), பழரசப் பானங்கள் தயாரிப்பி லும் கோகோப்பொடியைப் பயன்படுத்துகின்றனர். கோகோ வெண்ணெய். தூய்மை செய்யப்பட்ட கொழுப்பு கோகோ வெண்ணெய் எனப்படும். தன் உருகு வெப்பம் 33°-34°C ஆக உள்ளது. இது மஞ்சள் நிறமானது. இதில் சிறிது சாக்லேட் மணம் உள்ளது. முகப் பூச்சு, மருந்து, பால். இனிப்புச் சாக்லேட் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. இனிப்புச் சாக்லேட், சாக்லேட் நீர்மத்துடன் சர்க் கரை, கோகோ வெண்ணெய் கலந்து அரைக்கப்பட்டு, சாக்லேட் பட்டை, மிட்டாய், கேக் போன்றவை தயாரிக்கப்படும். பால் சாக்லேட் இனிப்புச்சாக்லேட்டு டன் உலர்ந்த பால் கட்டிகள் சேர்த்துச் செய்யப் படும். கோகோ வெண்ணெய் மணப் பொருள், மணத் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது. விதையின் தோல் அல்லது விதை ஓடு பானங்கள், சாக்லேட், நடைத் தீவனம் இவற்றிற்குப் பயன்படுகிறது. கே.ஆர்.பாலச்சந்திரகணேசன் கால் நூலோதி. J.W, Purseglove, Tropical Crops- Dicotyledons. The English Language Book Society and Longman, London, 1975. கோங்கு இது ஹோபியா பார்விஃப்ளோரா பெட் (Hopea Parviflora Bedd) என்ற தாவரப் பெயரால் குறிக்கப் படுகிறது. கோங்கு டிப்டிரோகார்பேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இக் குடும்பம் இருவித் திலைத் தாவர வகுப்பினுள் அல்வி இணையாதவை என்ற துணை வகுப்பினுள், தலாமிஃபுளோரே என்ற வரி ை சையில் கட்டிஃபெரேல்ஸ் என்ற துறையினுள் அமைந்துள்ளது. கோங்கு, மேற்குத் தொடர்ச்சி மலையில் 1000மீ. உயரத்திற்குக் கீழே உள்ள இடங் களில் இயற்கையாகக் காணப்படும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும், கேரள மாநிலத்தில் திருவாங்கூர் மலைப்பகுதி களிலும், கர்நாடக மாநிலத்திலும் இம்மரம் வளர்ந்துள்ளது. இதை நீர்க்கோங்கு என்ற பெயரால்