கோசைட் 537
கோசைட் 537 கோங்கு 1.கிளை 2. வெடிகனி 3. மொட்டு - கெட்டியாக 4-6. புல்லிகள்? - 9. மகரந்தங்கள் 10.மசுரந்தங்சுரும் சூலகமும் 11, 12, 13. சூலகம் முழுமையானது, நீள் வெட்டுத்தோற்றம், குறுக்குவெட்டுத்தோற்றம்1 4 அல்லிகள் குறிப்பிடுவர். இதன் மரம் மிகவும் இருப்பதால் கேரள மாநிலத்தவர் இதை இரும் போகம் அல்லது இரும்பு மரம் என்கின்றனர். இது மலைப் பகுதிகளிலும். நதிக்கரையோரங்களிலும் காணப்படும். இப்பெரிய அழகான மரத்தின் கட்டை வெண் பழுப்பு நிறமானது; கெட்டியானது; நெருக்க மான வரிகளைக் கொண்டது. பல சிறு குழாய்கள் ஒரு வளையத்தில் அமைந்துள்ளன. மையக் கதிர் ஓரளவு அகலம் கொண்டது; தெளிவானது; வளைந்து துறைகளைத் தொட்டுக்' கொண்டிருக்கும்; ஒரே விதமாகச் சமதொலைவில் அமைந்திருக்கும். கட்டை திருவாங்கூர், திருநெல்வேலி, கர்நாடகத்திலுள்ள தன் கன்னட மாவட்டங்களில் தன் கோயில்கள் கட்ட உதவுகிறது. இது கால் மரத்தை விட வழவழப்பான கட்டை உடையது. இதன் கட்டை எடை மிகுந்து கெட்டியான மரமாக இருப்ப தால் இருப்புப் பாதைத் தண்டவாளங்களுக்குக் கீழே போடப் பயன்படுகிறது. கோங்குக் கட்டையில் பிசின் உள்ளது. சிறு கிளைகள் கறுப்பு நிறமானவை; இலை களின் இரு புறங்களும் பளப்பளப்பாக இருக்கும்; 4 × 14 அங்குல நீள, அகலம் கொண்டவை; நீள் முட்டைவடிவ இலைகள்; இலைவிளிம்பு ஒழுங்கானது இலை நுனி வட்டம் அல்லது சிறிது கூர் நுனியாக இருக்கும்; மைய நரம்பிலிருந்து பிரிந்து செல்லும் பக்க நரம்புகளில் 8-12 இரட்டைகள் காணப்படும்; நரம்புகள் சாய்ந்து வளைந்து விளிம்பிற்கு இணை யாகச் செல்லும்; வலைப்பின்னல் நரம்பு அமைப்பு; இலையடிச்செதில்கள் சிறியவை; எளிதில் உதிர்ந்து விடும். . மஞ்சரி. நுனிவளர் கிளை மஞ்சரி, தூவிகளைக் கொண்டது; பூக்கள் அரை அங்குல நீளக் காம்பு உடையவை; பூவடிச் செதில்கள் இல்லை; பல விரிந்த பூக்கள் உண்டு; பூக்கள் இருபால் ஆரச்சமச்சீர் உடையவை; பூவடிச் செதில் அற்றவை. அல்வி வட்டம், 5. அல்லி இதழ்கள் பளபளப் பானவை, இணையாதவை, மகரந்தத்தாள் வட்டம் பொதுவாக 15; அரிதாக 10; அடிப்பகுதியில் மட்டும் இணைந்தவை: மெல்லிய மகரந்தக் கம்பிகள்: முட்டை வடிவ இரு அறைகள் கொண்ட மகரந்தப் பைசுள்; ணைக்கும் கொக்கி நீண்டுள்ளது. புல்லி வட்டம். புல்லி இதழ்கள் 5; இணை யாதவை; அடிப்பகுதியில் மட்டும் ணைந்தவை, வட்ட வடிவானவை. அடுக்கு இதழ் ஒழுங்கு கனி யிலும் காணப்படும். சூலகம். மேல் மட்டச் சூல்பை, 3 சூலக இலைகள் இணைந்திருக்கும், 3 சூல்பைகள். ஒவ்வொரு சூல் பையிலும் இரு சூல்கள் உள்ளன. சூலகத் தண்டு குட்டையானது, அடியிலிருந்து குறுகலானது. நுனி வரை கனி. கொட்டை வகைக் கனி, வெடியாக்கனி. புல்லி இதழ்கள் சுனியைச் சுற்றிலும் காணப்படும். இரு புல்லி இதழ்கள் சிறகுகளாக மாறி உள்ளன, சிறகுகள் 24 அங்குல நீளமும் நிமிர்ந்த வளர்ச்சியும் கொண்டவை. விதை வித்திலைகள் சமமற்றவை. சதைப்பற்று உடையவை. இவை முளை வேரை மூடிக் கொண்டிருக்கும். கருங்கோங்கு (ஹோபியா மலபாரிகா) மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள காடுகளிலும். தென் கன்னடம், திருவாங்கூர் மலைப் பகுதிகளிலும் 1000 மீட்டருக்குக் கீழே காணப்படும் மரம். இதன் கட்டை மிகவும் உறுதியானது. பழுப்பு நிறமானது, ஹோபியா வைடியானா எனப்படும் இளம் உள்ளது. ஹோபியா கோங்கு பயனுள்ளதாக டரேடா என்ற மணமுள்ள கோங்கு மரம் இந்தோ சீனா முதல் மலேஷியா வரை காணப்படும். ஈரமான இலையுதிர் காடுகளில் காணப்படும் இதன் கோந்து மணம் உடையது; மருந்தாகவும் சாம்பிராணியாகவும் பயன்படும். ஈறைக் கெட்டிப்படுத்திப் பற்களை உறுதியாக்கும். சீரான சிறுநீர்ப் போக்கை உண்டாக் கவும் உதவுகிறது. கே.ஆர். பாலச்சந்திரகணேசன் நூலோதி. D. Brandis, Indian Trees, Periodical Experts Book Company, Vivek Vihar, Delhi, 1978. கோசைட் சிலிக்காவின் (SiO,) பல்லுருவப்படிகளில் ஒன்றாகக் கோசைட் (coesite) கனிமம் உண்டாகிறது. இது மிக உயர்ந்த அழுத்த நிலைகளில் படிசுமாகிறது. இயற்கை யான கோசைட் கனிமத்தை அமெரிக்காவைச் சார்ந்த