கோசைட் 539
கோசைட் தி39 அறிஞர்களால் இக்கனிமம் அப்பாறைகளில் இருப் பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனியாகப் பிரித்துப் பகுக்கப்பட்ட படிகங்களைக் கொண்டே கோசைட் இயல்புகளைக் கண்டறிய முடிந்தது. கோசைட் நிறமற்றது. பளிங்குமிளிர்வு கொண்டது. இதில் கனிமப் பிளவுகளில்லை. இதன் ஒப்படர்த்தி 2.915 + 0.015. கடினத்தன்மை 8. இது இரண்டு ஒளி அச்சுகளை உடையது. ஒளி அச்சுக்கோணம் 64. ஒளிவிலகல் எண் = 1.5940; 8 1.5955: Y = 1.5970 ± 0.0005. கிடையான நிறப்பீரிதலை ஆகும். உடையது. யன். செயற்கைக்கனிமம் முழுப் படிகவுருவிலிருந்து வளர்ந்துள்ள அரைகுறையாக அறுபக்கத் தட்டு களாகக் காணப்படும். நீண்டபடிகங்கள் மெதுவான ஒளிப்பரவலைக் கொண்ட நேரியல் நீட்சியை உடை எளிய இரட்டுறல் படிகங்களாக (021) தளத் தில் வளர்கின்றன. இத்தளம் இரட்டைப் படிகத் தளமாகவும், ஒட்டுத்தளமாகவும் அமைகிறது. இக் கனிமத்தின் பொதுவான ஒளிவிலக்க எண் 1.595 + 0.002. இக்கனிமம் ஒற்றைச்சரிவுப் படிகத் தொகுதியைச் சார்ந்தது. a = 7.16A ; b=12.89A: C = 7. 16A . அறை வெப்பநிலையில் 5% ஹைட்ரோ புளூரிக் அமிலத்தில் கரையாது. ஆனால் அடர் ஹைட்ரோபுளூரிக் அமிலத்தில் உயர் வெப்பநிலை உள்ளபோது எளிதில் சுரையும். கோசைட் ஒரு நிலையற்ற கனிமம். 130°C வெப்பநிலைக்கு மேல் இக்கனிமத்தைச் சூடேற்றிப் பதப்படுத்தினால் இக்கனிமம் நிலைமாறும். இவ் வெப்பநிலைக்குக் கீழாக இக்கனிமம் ஓரளவு நிலை பெறும். இவ்வாறாக 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உண்டான விண்வீழ் கற்குழியிலிருந்து எடுக்கப்பட்ட கோசைட் கனிமம் மாற்றமடை ந் துள்ளது. எனினும் அதன் வளர் மரபைக் கொண்டும் உயர்ந்த ஒளிவிலக்க எண்ணைக் கொண்டும் இக்கனி மத்தை இனங் காணலாம். இக்கனிமத்தை X கதிர்ச் சிதறலை கொண்டு உறுதியாக இனங்காணலாம். பில்லை. கோசைட் தொழில்துறையில் இன்னும் பயன் படுத்தப்படவில்லை. ஆதலால் இதற்கு வணிக மதிப் கோசைட் பாறைகளில் கிடைப்பதைக் கொண்டு அப்பாறையின் முந்தைய வரலாற்றை அறியலாம். இதனால் அப்பாறை மிகுந்த அழுத்த விசையால் தாக்கப்பட்டிருப்பது புலனாகும். குறைந்த அடர்த்தியுள்ள ஒரு பொருள் எவ்வாறு அதிர்ச்சி யக்கத்தால் உயரடைவுள்ள பொருளாக மாறுகிறது என்பதை விண்வீழ்கற்குழியில் கிடைக்கும் கனிமங் களைக் கொண்டு அறியலாம். அரிசோனாவிலும். அரேபியாவிலும் இரும்பு விண்வீழ்கற்களின் மிகு வேக விசையால் தாக்கப்பட்ட சிலிக்கா மிகு பாறைகளில் உண்டான விண்வீழ்கற்குழிகளும், கோசைட் கனிமங் களும் அதிர்ச்சியலைத் தாக்குதவால் உண்டாகி யுள்ளன என்று அறியலாம். இவ்விடங்களில் வேறு எந்தவிதமான எரிமலை இயக்கமோ புவியழுத்த அசைவுகளோ தோன்றி இக்கனிமங்களை உண்டாக்க வில்லை. 0.1.மி. டீ படம் 2. இயற்கையான கோசைட்டுடன் சிறிது குவார்ட்ஸ் காணப்படுகிறது