பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 கோட்டம்‌

540 கோட்டம் உண்டாக்கிய மோதல் குழிகளின் இயல்பு பற்றி அறிய முடியும். நூலோதி. இரா. இராமசாமி Aman M. Bareman. Economic Mineral Deposits, Second Edition, John Wiley & Sons. New York, 1956, (அ) படம் 3.X-கதிரால் எடுக்கப்பட்ட கோசைட்டின் ஒளிப்படம்.(அ) சிறிது குவார்ட்சுடன் உள்ள இயற்கை யான கோசைட் (ஆ) செயற்கைக் கோசைட் 500,000 டன் நிறையுள்ள TNT வெடிமருந்து வெடிக்கப்பட்ட வெடிகுண்டுக் கிடங்குகளில் கோசைட் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே எரிமலை வெடிப்புகளிலும், ஆழ்நிலைப் புவியியக்க அசைவுப் பகுதிகளிலும் கோசைட் கனியத் தேட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. கோசைட் கிடைக்கும் விண்வீழ்கற்குழிகளை ஆராய்வதால் புவி. நிலவு மற்றும் பிறகோள்களில் காணப்படும் விண்லீழ்கற்கள் கோட்டம் இதற்குக் கோஷ்டம், குரா, ஒலி என்னும் பெயர் களுமுண்டு. கோட்டத்தின் தாவரப் பெயர் காஸ்டஸ் ஸ்பீசியோசஸ்(Costus speciosus) ஆகும். இது சிஞ்சிபெரேசியா குடும்பத்தைச் சேர்ந்தது: இந்தோ-மலேயாப்பகுதியில் தோன்றியது. ஸ்டீராய்டு ஹார்மோன்களை வணிக முறையில் தயார் செய் வதற்கு டயோஸ்ஜெனின் பயன்படுகிறது. டயோஸ் ஜெனின் பெரும்பாலும் டயோஸ்கொரியா டெல்டாய் டியா (Dioscorea deltaidea)என்னும் செடியிலிருந்தே பெறப்படுகிறது. ஆனால் 1974ஆம் ஆண்டி டயோஸ்ஜெனின், கோட்டச்செடியின் கிழங்கில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோட்டத்தில் இரண்டு வகை உண்டு. காஸ்டஸ் ஸ்பீசியோசஸ் வகை நேபாலென்சிஸ்(Costus speciosus var nepalensis) வகையை நேபாளம், அருணாசலப் பிரதேசங்களில் காணவாம். காஸ்டஸ் ஸ்பீயோசஸ் வகை ஆர்கைரோஃபில்லஸ் ( Costus speciosus var argyrophyllus) வகையை அருணாசலப் பிரதேசம், மேகாலயப் பகுதிகளில் 900-1500 மீ. உயரம் வரை காணலாம். ஈரப்பதமான சிறிதளவு நிழல் சார்ந்த பகுதிகளில் நன்கு வளர்கிறது. சமவெளியில் இது ஒரு களைச் செடியாகப் பழத்தோட்டம், வரப்பு, இருப்புப் பாதை ஓரம், காடு இவற்றில் காணப்படுகிறது. மிதவெப்ப மண்டலங்கள், நீண்ட பருவமழை பெய்யும் இடங்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றவை. து வண்டல் செறிந்த மேல்சுங்கைப் பகுதி. பய மலை அடிவாரம். மேற்குக் கட, ற்கரையோரப் பகுதி களில் காணப்படுகிறது. ஓடை ஓரங்களில் கூட்ட மாகக் காணப்படும். மண்ணின் கார - அமில நிலை இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். களர் மண்ணிலும் வளர்கிறது. அஸ்ஸாமில் சமவெளிப் பகுதி, திரிபுரா, மணிப்பூர், கோவா, கேரளாவில் வளர்ந்துள்ளது. செடி. இச்செடியின் இலைகள் நீள்சதுரமாகவோ ஈட்டி வடிவமாகவோ தலைகீழ் ஈட்டி வடிவமாகவோ காணப்படும். இலைகள் தோல் போன்று இருக்கும். இலையின் அடிப்பரப்பு GLEN & மொசு என்றும் மேல்பரப்பு பளபளப் யுடனும் இருக்கும். இலை காம்பருகு இலைப் பகுதி குறுகியது. இலை நுனி ஓரம் முழுமையானது.