கோட்பாட்டு இயற்பியல் 543
நாளும் மேற் காண்டு, வேளைக்கு 20 மி.லி. வீதம் இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்க கூறிய நோய்கள் நீங்கும். இவற்றுடன் வசம்பு சேர்த்துக் கொடுக்க வெறிநோய் நீங்கும். கோட்டத்தை நாரத்தைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தேன்கூட்டி, முகப்பரு, வங்கு இவற்றில் பூச நலமுண்டாகும். கோட்டம், அதிமதுரம். நெல்லிமுள்ளி, விலாமிச்சம் வேர். வெட்டிலேர். முத்தக்காசு, சந்தனம், நெற்பொரி வகைக்கு 4 கிராம், நீரில் போட்டு 251 மி.லிட்டராக வற்ற வைத்துக் கொடுக்க, தாபசுரம் தீரும். 1லி. கோ. அர்ச்சுணன் சே. பிரேமா நூலோதி. எஸ்.ஏ. சூசைராஜா, கடைச்சரக்கு சைமுறை வைத்தியம், வீரபத்திரர் அச்சகம், சென்னை, 1981. கோட்பாட்டு இயற்பியல் இயற்கை நிகழ்வுகளை, கணித வடிவில் விளக்கு வதே கோட்பாட்டு இயற்பியலாகும். இயற்கையைப் பற்றிய முழு அறிவு ஏற்படக்கோட்பாட்டு ஆய்வும், சோதனை ஆய்வும் ஒருங்கே செய்யப்பட வேண்டும். இதனால் கோட்பாட்டு இயற்பியலைச் செய்முறை இயற்பியலிலிருந்து முழுதும் பிரித்து விட முடியாது. நோக்கங்கள். கோட்பாட்டு இயற்பியலுக்கு இரு முக்கிய நோக்கங்கள் உண்டு. அடிப்படைக் கொள்கை களைக் கண்டுப்பிடிப்பதும், அக்கொள்கைகளில் இருந்து முடிவுகளைப் பெறுவதுமே அந்நோக்கங் களாகும். அடிப்படைக் கொள்கைகளைக் கண்டுபிடித்தல். ஒருங்கமைந்த கொள்கையை உருவாக்குவதற்காக இயற்பியல் வல்லுநர் கொள்கைகளின் எண்ணிக்கை களைக் குறைப்பதில் நோக்கமாக உள்ளனர். அடிப் படைக் கொள்கைகளை அறிந்து கொண்டால், ஓர் இயற்பியல் முறைமையின் தொடக்க நிபந்தனை களிலிருந்து ஏற்படக்கூடிய அடுத்தடுத்த நிகழ்வு களைக் கணிக்க முடியும். சில வேளைகளில் குறிப் பாக, குவாண்டம் கொள்கைக்கு உட்படும் முறைமை களில், நிகழ்ச்சிகளின் நிகழ் தசுவுகளை மட்டுமே கணிக்க முடியும். அடிப்படைக் கொள்கைகளில் இருந்து பெற இருக்கும் முடிவுகள் பலவகைப்படும். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை மெய்ப்பிக்க, புதிய கோட்பாட்டு முடிவுகளைப் பெறலாம். குவாண்டம் இயங்கியல் கொள்கையில் இருந்து ஹைட்ரஜன் அணுவின் நிற கோட்பாட்டு இயற்பியல் 543 இதற்கு மாலை அலைநீளங்களைப் பெறுவதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். பெற்ற அலைநீளங்கள் சரியா என ஆய்வு மூலம் நிறுவுதல் குவாண்டம் இயங்கியல் கொள்கைக்கு ஒரு சிறந்த ஆய்வாகும். சில நேரங்களில் நடத்தப்படும் ஆய்வு முடிவுகள் குறிப்பிட்ட கொள்கைக்கு எதிர் முடிவுகளையும் தரலாம். இது புதுக்கொள்கைகள் பிறப்பதற்கு வழி வகுக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக மைக்கல்சன்- மார்லி ஆய்வைக் கூறலாம். ஒளியின் சார்புத் திசை காணச் செய்யப்பட்ட இவ்வாய்வின் எதிர் சார்பு கொள்கை தோன்றக் வேகம் முடிவுகள் தனிச் காரணமாயின. இயற்பியல் மாறிலிகளைக் காணச் செய்யப்படும் ஆய்வுகளுக்குக் கோட்பாடுகள் தேவைப்படும். பெரும் பாலான இயற்பியல் மாறிலிகளை நேரடியாக நுட்ப மாக அளக்க முடியாது. மறைமுகமான வழிகளில் அவற்றைக் காணச் செய்யப்படும் ஆய்வுகளுக்கு விரிவான கோட்பாடுகள் தேவைப்படும். மில்லிகனின் எண்ணெய்த் துளி ஆய்வு மூலம் எலெக்ட்ராளின் மின்னூட்டத்தைக் கண்டறிவதை இதற்கு எடுத்துக் காட்டாசுக் கூறலாம். இதற்கான கோட்பாட்டில் காற்றின் வழியே ஒரு சிறு எண்ணெய்த் துளி விழுவதற் கான நீர்ம இயக்கவியலின் கொள்கைகள் தேவைப் படும். இயற்பியல் உலகின் கட்டமைப்பை அறிந்து கொள்ள இயற்பியல் நிகழ்வுகளை முன்னெதிர் பார்த்தல் இன்றியமையாதது. மூலகங்களின் மீள் வரிசை அட்டவணை (periodic table) அமைக்கக் காரணமான கோட்பாடுகள், அணுக்கரு மாதிரிக் கொள்கைகள் இவ்வகையைச் சாரும். பிற அறிவியல் பிரிவில் பயன்படும் கொள்கைகளில், எடுத்துக்காட் டாக வேதியியலில் பயன்படும் வேதியல் இணைப்புக் கொள்கைகள், வேதியியல் வினைவேக வீதக்கொள்கை வானியலில் பயன்படும் கோள் இயக்கக் கொள்கைகள், விண்மீன்களின் உள் அமைப்பு ஆற்றல் பற்றிய கொள்கைகள், உயிரியலில் பயன்படும் பல கொள்கைகள் ஆகியவை அடங்கும். கள். பொறியியலின் பல பயன்பாடுகள் அடிப்படை விதிகளில் இருந்து பெறப்படுகின்றன. பொறியியலில் அனைத்துமே இயற்பியல் கொள்கைகளின் பயன்பாடு கள். குறிப்பாக, கணித இயற்பியலின் பயன்பாடுகள் எனலாம் (மீட்சியியல் கோட்பாடுகள், வளிம் இயங்கியல், யின்னியல், காந்தவியல்). மின் காந்த ரேடியோ அலைகளைத் தோற்றுவிப்பதும், பரப்பு வதும் கோட்பாட்டு இயற்பியலின் செயல்முறை வடிவம் ஆகும். கோட்பாட்டு இயற்பியலின் உள்ளடக்கம். கோட் பாட்டு இயற்பியலை அது பயன்படும் விதத்தால் வகைப்படுத்துவது போன்று, அதன் உள்ளடக்கம் கொண்டும் வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாட்டை மூன்று முறைகளைக் கொண்டு வேறுபடுத்தி உணர்