544 கோட்பாட்டு இயற்பியல்
544 கோட்பாட்டு இயற்பியல் ஸாய். அவை விசையின் வகை, இயற்பியல் விளைவின் அளவு வகை, விளைவு வகை எனப்படும். விசை வகைப் பிரிவுகள். இயற்பியலில் நான்கு வகை விசைகள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் நன்கு அறியப்பட்டுள்ள விசைகள் மின் விசையும். காந்த விசையும் ஆகும். இவற்றில் அடிப்படைக் கொள்கை களாக மேக்ஸ்வெல் சமன்பாடுகள் முழுமையாக ஆய்ந்து அறியப்பட்டுள்ளன. குவாண்டம் கொள்கை யால் திருத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றையும் நுட்பமாகக் கணக்கிட முடியும். செயல்முறை புலன்களை நுட்பமாகவும், களுக்கு மின்காந்தப் உறுதியாகவும் நேர்புலன்களில் இருந்து ? - கதிர் புலன்கள் வரை கணக்கிட முடியும். இரண்டாம் வகை. புவிஈர்ப்பு விசை ஆகும். செயல்முறைகளுக்கு நியூட்டனின் தொலைவுகளின் தலைகீழ் இருமடி விதி மூலம் செய்யப்படும் கணக்கீடு கள் போதும். சற்றுச் சிக்கலான நிகழ்வுகளை விளக்க ஐன்ஸ்டைனின் பொதுச் சார்புக் கொள்கை பயன் படுகிறது. இக்கொள்கை சிறந்தது என்றாலும் செயல் முறைச் சான்றுகள் குறைவு. இதனால் பல எதிர்க் கொள்கைகளும் முன்மொழியப்படுகின்றன. இணைக்கும் அணுக்கருத் துகள்களை ஒன்றாக வலிமையான விசை, அடுத்த விசை வகையாகும். முன்கூறிய விசை வகைகளைப் போலில்லாமல் அணுக் கரு விசையின் சில பண்புகளே நன்கு அறியப் பட்டுள்ளன. மின் இயங்கியலில் விசைகளை முதற் கொள்கைகளிலிருந்து பெறுவது போல் அணுக்கரு விசைகளைப் பெற இயலாது. அணுக்கரு விசைகள் பல அடிப்படைத் துகள்களோடு (மெசான்கள்) தொடர்பு கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது. ஆனாலும் இக்கருத்து முழுமையானதன்று. இயற்பிய லார் அறிந்த விசைகளில் அணுக்கரு விசையே மிக வலிய விசை என்றாலும் இது மிகக் குறைந்த தொலைவுக்கே செயல்படும் தன்மையுடையது. அணுக்கரு விசையிலிருந்து மாறுபட்ட பீட்டாச் சிதைவு போன்றவற்றிற்குக் காரணமான மென் விசை கள் மற்றொரு வகையாகும். அணுக்கரு விசை அறிவைவிட, இம்மென் விசைகளைப் பற்றிய அறிவு மிகவும் தெளிவுடையது. இயற்கை விளைவுகள் அளவு கொண்டு வகைப் படுத்தும் பிரிவுகள். அன்றாட வாழ்வில் காணப்படும் பொருள்களின் இயக்க அளவு இயக்கங்களை ஐசக் நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு விளக்கலாம். மிகச் சிறு அளவீடுகளில் உள்ள குறிப்பாக அணுக்கள் அணுக்கருக்கள் ஆகியவற்றின் இயக்கங்களை விளக்க, குவாண்டம் இயக்கவியல் பயன்படுகிறது. நியூட்டன் யக்க விதிகள் குவாண்டம் இயக்கவியல் கொள்கை களின் சிறப்பு நிபந்தனைகளாகப் பெறப்படுகின்றன. தொடர்புடைய பொருள்களின் திசைவேகங் களைப் பொறுத்தும் ஓர் இயற்பியல் விளைவின் விளக்கம் மாறுபடுகிறது. ஒளியின் திசைவேகத்தோடு ஒப்பிடக்கூடிய திசைவேகங்கொண்ட பொருள்களின் இயக்கம் தனிச் சார்பின் கொள்கை கொண்டு விளக்கப்படுகிறது. நியூட்டனின் இயக்க விதிகளைத் தனிச் சார்புக் கொள்கையிலிருந்து நிபந்தனைகள் மூலம் பெறலாம். தனிச் சார்புக் சொள்கையும், குவாண்டம் கொள்கைகளின் படி கொள்கையும் இயங்கியல் தவறு என்று மெய்ப் ஆனால் மலர்ச்சியையே காட்டுகின்றன. க்கொள்கைகள் பழம் இயங்கியல் கொள்கை பிக்கவில்லை; பழமையாகிவிடவும் இல்லை. அவை 1900 ஆம் ஆண்டு வரை மனித அறிவுக்கு எட்டாத புலங்களுக்குப் பழைய இயங்கியலை இழுத்துச் செல்கின்றன என்பதே உண்மை. தற்போது புலக் அறியப்பட்டுள்ள கொள்கைகளில் மிகவும் பொதுவான கொள்கை குவாண்டம் கொள்கை ஆகும். இக்கொள்கை குவாண்டம் கொள்கை, தனிச் சார்புக் கொள்கை ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டிருப்பதோடு துகள்களை ஆக்கவும் அழிக்கவும் முடியும் எனும் கருத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனால் இக் கொள்கையை ஒருங்கமைந்த புலக் கொள்கை (unified field theory) எனலாம். மேலும் பிற ஒருங்கமைந்த கொள்கைகளை உருவாக்க ஆய்வுகள் செய்யப்படுகின்றன. குறிப்பாகப்புவி ஈர்ப்பு. மின் காந்த விசைகளை ஒருங்கடக்கிய புலக் கொள்கைக் கான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இக்கொள்கையே ஒருங்கமைந்த புலக் கொள்கை எனப்படுகிறது. இம்முயற்சியில் போதுமான வெற்றி கிட்டவில்லை. மேலும் இக்கொள்கை மிக வலிமை வாய்ந்த அணுக் கரு விசைகளையும், மென் இடையீடுகளையும் புறக் கணிக்கிறது. நிகழ்வுகளின் வகைகள் கொண்டு பிரித்தல். கோட் பாட்டு இயற்பியலைப் பாகுபடுத்துவதில் நிகழ் வகை களின் பாகுபாடு வழக்கில் உள்ளது. பின்வருவன முக்கிய புலங்கள் ஆகும். இயங்கியல் என்பது கொடுக்கப்பட்ட விசை களுக்கு உட்பட்ட பொருள்களின் இயக்கத்தைக் குறிக்கும். இது பழைய இயங்கியல் கொள்கை, துகள் இயங்கியல், திண் பொருள்களின் இயங்கியல் ஆகிய வற்றைக் கொண்டது. துகள் இயங்கியலில் வான் பொருள் இயக்கவியல் ஒரு முக்கிய துணைப் பிரி வாகும். இதில் கோள்களின் இயக்கம், மூன்று பொருள்களின் இடையீட்டால் ஏற்படும். சிக்கலான பழமையான மூன்று பொருள் சிக்கல்கள் இதில் அடங்கும். மேலும் சிக்கலான வெளிப்புலம் கொண்ட புலம் அல்லாத இயக்கம் ஆகியவையும் இதில் அடங்கும். தொடர் இயங்கியல் (continu mechanics