பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடிக்கரை 547

உண்டு. இது வெப்பத்தைத் தணிக்கும். மேக நோய் காய்ச்சல் இவற்றைப் போக்கும். புண்களைக் குணமாக்கும். மேகத்தால் உண்டான கிரந்திப்புண் கள், அரையாப்பு, லிங்கப்புற்று, யோனிப்புற்று, ஊரல் படை, செம்மேகம், கருமேகம், தொழுநோயில் உண்டான காயம் இவற்றிற்குச் கோடகசாலை சமூலத்தை அரைத்துக் காலையில் சுண்டைக்காயளவு சாப்பிட்டு மோர் அருந்த வேண்டும். இதைப் புண் களுக்கும் வைத்துக் கட்டலாம். இதன் இலையைக் குடிநீரிலிட்டு வாய் கொப்புளிக்க நாக்குப்புண், உதட்டுப்புண் விரைவில் குணமாகும். கோ. அர்ச்சுணன் கோடிக்கரை வனவிலங்குப் புகலரண் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இவ்வன விலங்குப் புகலரண் பெரிய தொன்மையான பறவை கள் புகலரணாகும். வேதாரண்யம் வட்டத்தில் கோடிக்கரை என்னும் கடற்கரையோரச் சிற்றூர் அருகே 25 ச.கி. மீ.பரப்பளவுடைய இப்புகலரணின் கிழக்கு எல்லையாக லங்கக் கடல் உள்ளது. இப் புகலரணில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி,சிற்றூர்க் காடுகள், பொது நிலங்கள் ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. இப்புகலரணில் பல பெரிய உப்பளங்களும் கழிமுகச் சதுப்புப்பகுதிகளும் உள்ளன. இப்பகுதிகளில் தங்குவதற்காகவே பூநாரைகள் போன்ற அரிய பறவைகள் பல இங்கு வருகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கூட்டம் கூட்டமாகப் பூநாரைகளும், திறந்த மூக்கு நாரைகளும்,கரண்டி மூக்கு நாரைகளும், வண்ணநாரைகளும், வசை வரும் ஏனைய பறவைகள் பலவும் இப்புகலரணுக்கு வருகின்றன. இப்புகலரணில் 4250 ஏக்கரில் முட்புதர்களும், 550 ஏக்கரில் குத்துச் செடிகளும், 1180 ஏக்கரில் கடற்கரை மணற்பரப்பும் காணப்படுகின்றன. இப் புகலரணின் தாவர அமைப்பு, புதர்க்காடுகள் வகை யைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்புகலரணின் புதர்கள் தொடர்ச்சியாசுக் காணப்படாமல் ஆங் காங்கே திட்டுத்திட்டாகக் காணப்படுகின்றன. புதர்த்திட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் புல் வெளிகளாகவும், மணற்பரப்புகளாகவும், சதுப்புநிலப் பகுதிகளாகவும் காணப்படுகின்றன. இப்புகலரணில் உள்ள தாவரங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை லையுதிர் பசுமைத் தாவ அ.க.9-35 அ கோடிக்கரை வனவிலங்குப் புகலரண் 547 ரங்கள். சதுப்புநிலத் தாவரங்கள், கடலோரத் தாவ ரங்கள் என்பன. இப்புகலரணில் சுமார் 53 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த 145 சிறப்பினத் தாவரங்கள் உள்ளன. ஏறத்தாழ 175 சிறப்பினங்களைச் சேர்ந்த பறவை வகைகள் இப்புகலரணுக்கு வருவனவாகவும் கணக்கிட்டுள்ளனர். இப்பறவைகளுள் 33%குளிர்கால வலசை வரும் பறவைகளாகும். 22 வகைகள் இடப்பெயர்ச்சிச் செய்பவை. 24% பறவைகள் இப்புக லரணிலேயே வாழ்பவை; 9% இனம்பெருக்க வலசை வருபவையாகும். இவற்றில் நீர்வாழ் பறவைகள், பூச்சியுண்ணிகள், அனைத்துண்ணிகள், ஊனுண்ணி கள், பழமுண்ணிகள் ஆகியவை அடங்கும். இப்புகலரணில் பறவைகள் மிகப் பெருமளவில் நவம்பர் மாதத்தில் காணப்படுகின்றன. இம்மாதத்தில் 10000-30000 பறவைகள் பெரும்கூட்டங்களாகக் காணப்படும். இப்புகலரணில் பூநாரை, செங்கால் நாரை, பச்சைக்கால் நாரை, சிறகி, கடற்காகம், வண்ண நாரை, கரண்டி வாயன், நத்தைக் குத்தி நாரை, புள்ளி மணற் சிறகி, மணற்சிறகி, உப்புக் கொத்தி, ஊசிவால், கர்லியூ, கறுப்பு இறக்கை நாரை, ஊதாக் கானாங்கோழி, நாமக்கோழி, வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, வாத்து, மடையான் போன்றவை காணப்படுகின்றன. பறவைகளைத் தவிர, தற்பொழுது ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட சுருமான் கள் எனப்படும் இந்திய இரலை மான்களும் 500 புள்ளி மான்களும் காணப்படுகின்றன. 200 குரங்கு களும், 50 மட்டக்குதிரைகளும் உள்ளன. குள்ளநரி குழிமுயல், பலவகைப் பட்ட ஊர்வன, பூச்சிப்போன் றவையும் பெரும்பான்மையாகக் காணப்படுகின், ன்றன. பல்வேறுபட்ட வளைதசைப்புழுக்கள் கடல் நண்டு நத்தை வகை முதலியனவும் இப்புகலரணில் காணப் படுகின்றன. இந்திய இரலை மான்கள் பெரும் எண்ணிக்கையில் செழித்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்வது இவ்விலங்குப் புகலரணின் சிறப்பாகும். ஓர் ஆமை வளர்ப்புப் பண்ணையும், ஆமைக் குஞ்சுப்பொரிப்பு மையமும் தமிழக வனத்துறையாலும் பூண்டி புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறையாலும் கூட்டாக நடைபெறுகின்றன. பொரிப்பு மையத்தி லுள்ள மேட்டூர் கெமிக்கல்ஸ் எனும் நிறுவனம் மிகப் பெரிய அளவில் உப்புத் தயாரித்து இந்தியா முழு மைக்கும் அனுப்புகிறது. இதுவே இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்களின் தொழிலாகும். இங்கு வாழும் மக்கள் கோடைக்காலங்களில் உப்பளங்களில் உழைத்தும் மழைக்காலங்களில் மீன்பிடித்துப் பக்குவம் செய்தும் வாழ்கின்றனர். வங்கக் கடலில் வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட, இங்கு ஒரு கலங்கரை விளக்கம் (light house) உள்ளது. . .