550 கோண்டோ விளைவு
550 கோண்டோ விளைவு பகுதி எனவும் கூறப்படும். கோண்டுவானாத் தொகுதி யைச் சேர்ந்த படிவுகளின் மொத்த கனம் 6000-9000 மீ. ஆகும். கீழேயுள்ள முன் - கோண்டுவானாத் தொகுதியைச் சேர்ந்த படிவுகளில் குலோசாப்டரிஸ், சுங்கமாட் டரிஸ், வெர்ட்டிபிரேரியா, கோண்டுவனிடியம் முத லான தாவரங்கள் காணப்படுகின்றன. இவை குலோ சாப்டரிஸ் இனம் என்று கூறப்படும். மேலேயுள்ள பின் கோண்டுவானாத் தொகுதியைச் சேர்ந்த படிவு களில் டில்லோஃபைலம் இனத்தைச் சேர்ந்த தாவரங் களான டில்லோஃபைலம், ஓட்டஸோமைட்டிஸ், பிரேக்கி ஃபைலம், எலக்ட்டோகிளாடஸ் முதலியன காணப்படுகின்றன. கோண்டுவானாத் தொகுதியைச் சேர்ந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையே தொடரிலாப் படிவு அமைப்புக் காணப்படுகிறது. 9 முன் - கோண்டுவானாத் தொகுதியில் டால்ச்சிர், தாமோதர், பாஞ்சட் என்னும் மூன்று வரிசைகள் கீழிருந்து மேலாக உள்ளன. இவற்றில் டால்ச்சிர்- வரிசை கார்ஃபானிஃபெரஸ் காலத்தின் பின்பகுதி யிலும், தாமோதர் வரிசை பெர்மியன் காலத்திலும், பாஞ்சட் வரிசை டிரையாசிக் காலத்தின் முன் பகுதியிலும் தோன்றியவை. பின் - கோண்டுவானாத் தொகுதி மகாதேவா ராஜ்மஹால், ஜபல்பூர் என்னும் மூன்று வரிசைகளை உடையது. இம்மூன்றில் மகாதேவா வரிசையைச் சேர்ந்தவை ஜூராசிக் காலத்தின் முன் மற்றும் இடைப்பகுதியிலும், ஜபல்பூர் வரிசையைச் சேர்ந்தவை ஜூராசிக் காலத்தின் பின் பகுதி முதல் கிரேட்டேசியக் காலத்தின் முன் பகுதி வரையிலும் தோன்றியவையாம். கோண்டு வானாத் தொகுதியைச் சேர்ந்த படிவுகளைச் சிலர் முன், இடை, கடைப் (கீழ், நடு, மேல்) படிவுகள்/ வரிசைகள் என மூன்று பிரிவுகளாகவும் வகைப் படுத்திக் கூறுகின்றனர். கோண்டுவானாப் பாறைகள் இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. அவை கோதாவரிப் பள்ளத்தாக்கு முதல் ராஜ்மஹால் குன்றுகள் வரை யிலும், மகாநதி, தாமோதர், சோன், நர்மதை முதலான ஆறுகளின் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும், ஜபல்பூர், கட்ஜ், சௌராஷ்ட்ரா, திருப்பதி, ராகவ புரம், வேமாவரம், சத்தியவேடு, ஸ்ரீபெரும்புதூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் உள்ளன. இவை வடக்கே இமயமலையில் நேபாளம், பூடான், அஸ்ஸாம், காஷ்மீர், பலுசிஸ்தான் ஆகிய இடங்களிலும் காணப் படுகின்றன. இந்தியாவிலுள்ள நிலக்கரிப் படிவுகளில் பெரும் பாலானவை கோண்டுவானாப் படிவுகளைச் சேர்ந்த வையே ஆகும். கோண்டுவானாப் படிவுகளில் கிடைக் கும் களிமண் படிவுகள் செங்கல். பாண்டங்கள் முதலியன செய்வதற்கு மிகவும் ஏற்றவை. சில தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உவர் மண் எனப்படும் ஒருவகைக் களிமண்ணும் இப்படிவு களிலிருந்து கிடைக்கிறது. இத்தொகுதியைச் சேர்ந்த படிவுகளாகக் கிடைக்கும் மணற்பாறைகள் கட்டடக் கற்களாகப் பயன்படுகின்றன. பூரி, புவனேஸ்வர். கோனராக் முதலிய இடங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களும், சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பல்கலைக்கழகம், அருங்காட்சியகம் ஆகியனவும் கோண்டுவானாக் காலத்து மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ளன. இல.வைத்திலிங்கம் நூலோதி. M. S. Krishnan, Geology of India and Burma, Sixth Edition, CBS Publishers and Distributors, Delhi, 1982. கோண்டோ விளைவு காந்தவியல்பு இல்லாத உலோகங்களுடன் சிறிதளவு உலோகங்களைக் காந்தவியல்புள்ள கலந்து கலவைகளின் மின் வாக்கப்பட்ட சில உலோகக் தடை, வெப்பநிலை குறையும்போது முரண்பட்ட வகையில் பெருமளவில் அதிகரிக்கிறது. கோண்டோ விளைவு (Kondo effect) எனப்படும். பொதுவாக எல்லா அமைப்புகளிலும் வெப்பநிலை குறையும்போது மின் தடை குறையும். சில குறிப் பிட்ட உலோகக் கலவைகளில் கடத்தல் எலெக்ட் ரான்கள், உலோகக் கலவையிலுள்ள காந்தவியல்பு கொண்ட மாசு அணுக்களின் தற்சுழற்சியுடன் இடை யீட்டு வினையை ஏற்படுத்தி மின் கடத்தலைத் தடை செய்கின்றன. இவ்விடையீட்டு வினைகள் ஃபெர்ரோ காந்தங்களில் நிகழ்வதைப் போன்ற பரிமாற்று இடை யீட்டு வினை எனப்படும். கீழ் வெப்பநிலைகளில், வெப்பக்கிளர்ச்சி இத்தகைய இடையீட்டு வினை களை மறைத்துவிடும். ஆய்வுப்பொருளை மேலும் சூடாக்கும்போது, அவற்றின் காரணமாக மின் தடையில் ஏற்படும் அதிகரிப்புக் குறைகிறது. கோண்டோ விளைவு தோன்றத் தாடங்கும் வெப்பநிலை கோண்டோ வெப்பநிலை எனப்படும். இது உலோகக் கலவை யிலுள்ள இருவகை உலோகங்களையும் பொறுத்து அமையும். இதுவரை ஆய்வு செய்யப்பட்ட பொருள் கள் அனைத்திற்கும் கோண்டோ வெப்பநிலைகள் 30 C க்கும் குறைவாகவே உள்ளன எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காந்தவியல்பற்ற ஊடகத்தில், காந்தவியல் புள்ள அணு இருந்தால் அதை அறிய. கோண்டோ விளைவு உதவுகிறது.