பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 கோணம்‌

560 கோணம் களுக்கு இடையேயுள்ள கோணம் எனக் குறிப்பிட லாம். இரு வளைவுகளுக்கு இடையேயுள்ள கோணம். ரு வளைவுகள் (curves) ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் புள்ளி வழியாக அவற்றிற்கு வரையப்படும் தொடு கோடுகளுக்கு இடையேயுள்ள கோணத்தை அவ்விரு வளைவுகளுக்கு இடையேயுள்ள கோணம் எனலாம். ஏற்றக் கோணம் (angie of elevation). ஒரு பார்வையாளர் அவர் கண்ணின் வழியாக வரையப் படும் கிடைமட்டத் தளத்திற்கு மேலே உள்ள ஒரு பொருளை நோக்கும்போது, அப்பொருளையும் அவர் கண்ணையும் சேர்க்கும் பார்வைக் கோட்டிற்கும் அத் தளத்திற்கும் இடையேயுள்ள கோணத்தை அப் பொருளின் ஏற்றக்கோணம் எனலாம். இறக்கக் கோணம் (angle of depression). பார்வையாளர் அவர் கண்ணின் வழியாக வரையப் படும் கிடைமட்டத் தளத்திற்குக் கீழே உள்ள ஒரு பொருளை நோக்கும்போது, அப்பொருளையும் அவர் கண்ணையும் சேர்க்கும் பார்வைக் கோட்டிற்கும் அத்தனத்திற்கும் இடையேயுள்ள கோணத்தை அப் பொருளின் இறக்கக் கோணம் எனலாம். ஏற்றக் கோணம், இறக்கக் கோணங்களைப் பயன்படுத்தி. பொருள்களின் உயரங்களையும் தொலைவுகளையும் கணக்கிடலாம். முதலில் கோணம் என்பது 180° க்குக் குறைவான அளவுள்ளது என்னும் கருத்திலேயே வழங்கப்பட்டது. அறிவியல் வளர்ச்சி யின் காரணமாக 1800 மற்றும் 180° க்கு மிகுதியான அளவுள்ள கோணங்கள் தேவைப்பட்டன. எனவே கோணம் என்னும் சொல்லின் வரையறையைத் திருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. புதிய வரையறை. OA என்பது ஒரு தளத்திலுள்ள நிலையான நேர்கோடு. அத்தளத்தில் OP என்னும் நகரும் நேர்கோடுOA என்ற நிலையிலிருந்து புறப்பட்டு வை மையமாகக் கொண்டு சுழன்று OB என்னும் நிலையை அடையும்போது கோணம் AOB உண்டா கிறது. OA யை அக்கோணத்தின் தொடக்கக்கோடு (initial line) என்றும் OB யை முடிவுக்கோடு (terminal line) என்றும் குறிக்கலாம். OP யின் சுழற்சியின் அளவு அக்கோணத்தின் அளவு ஆகும். OP யின் சுழற்சி கடிகார முள்கள் சுழலும் திசைக்கு எதிர்த் திசையில் இருந்தால் அக்கோணத்தை மிகைக்கோணம் (positive angle) என்றும் கடிகார முள்கள் சுழலும் திசையில் இருந்தால் குறை கோணம் (negative angle) என்றும் குறிப்பிடலாம். ஒரு வளைந்த அம்புக்குறி 315° C 150 A -A B 180° B 750° படம் 6. - 180°