பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பர்‌ நிக்கஸ்‌, நிக்கோலஸ்‌ 565

கோப்பர்நிக்கஸ், நிக்கோலஸ் 565 நன்றாக அரைக்காத மாவை நீரில் ஊறவைத் தால் சாடியாகும். இதில் புளித்த அமில நீர்மத்தை வடிகட்ட வேண்டும். இதைச் சல்லடையில் ஊற்றி, அதிலிருந்து வெளியே வரும் பொருள்களை ஆழ மில்லாப் பாத்திரங்களில் சேர்க்க வேண்டும். இதில் ஸ்டார்ச் படிகிறது: புளிப்பு நீர்மம் மீண்டும் வடி கட்டப்பட்டு, வழுவழுப்பானவை நீக்கப்படுகின்றன: மீண்டும் ஸ்டார்ச் படிகிறது. இவற்றிலிருந்து நீரை வடித்துச் சதுரங்களாக வெட்டிச் செங்கல் மீது வைத்து எஞ்சியுள்ள ஈரமும் உறிஞ்சப்பட்ட பிறகு மெதுவாகச் சூடேற்றி உலர்த்தப்படும். கரைசலை ஸ்டார்ச் அமில, காரத்தன்மை இல்லாமல் நடு நிலையாக உள்ளது. இது அயோடின் நீலநிறமாக்கும். வெள்ளை ஸ்டார்ச் மருந்திற்குப் பயன்படும். இதை 300°C இல் வெப்பமாக்கினால் டெக்ஸ்ட்ரினாக மாறும். இது பிசின் போன்று நீரில் கரையும். இதைப் பிரிட்டானியக் கோந்து என்பர். ஸ்டார்ச்சைப் புண்களுக்கும் வீக்கங்களுக்கும் மருந் தாகப் போடலாம். மலமிளக்கியாகவும் பயன்படும். இது அயோடின் நச்சிற்கு முறிவாகிறது. ஸ்டார்ச், புண் கட்டும் துணிகளை விறைப்பாக்குவதற்குப் பயன்படும். நீலநிற ஸ்டார்ச், துணிகளுக்குக் கஞ்சி போடப் பயன்படும். எனவே, துணி வெளுக்கும் தொழிற்சாலைகளில் இது இடம் பெறுகிறது. கோதுமை உடலுக்கு வலிவு தரும். விந்து, பித்தம் இவற்றைப் பெருக்கும். தனிவாதத்தையும் வெள்ளை யையும் நீக்கும்; கோதுமைக் கஞ்சி வாதக் காய்ச்சல், மூக்கு நீர் வடித்தல், முப்பிணி இவற்றை விலக்கும். குன்ம நோயினருக்கு நாலைந்து நாளான, புளித்த ரொட்டியையேனும், சுட்ட ரொட்டியையேனும் கொடுக்கலாம். வயிற்றில் புளிப்புடையவர்கள், புதிய ரொட்டியையோ, தவிட்டு ரொட்டியையோ உண வாகக் கொள்ளலாம். கபரோகிகளுக்குக் கோதுமைப் பால் அல்லது கோதுமைக் காஃபி மிகவும் குணந் தரும். கோதுமை நொய்க் கஞ்சி, காய்ச்சல் - நோயு டையவர்க களுக்கும், நோய்நிலை நீங்கியவருக்கும், பெரும்பாடுடைய பெண்களுக்கும் மிகுந்த பயன் தருவதாகும். . கோதுமையை வறுத்துத் தேன் சேர்த்துக் கீல் வலி, முதுகுவலி உடையவர்களுக்குக் கொடுக்கலாம். கோதுமை மாவை, அக்கி, தாபிதம் இவற்றில் பூசினாலும், தூவினாலும் எரிச்சல் தணியும். வியர்க் குருவிற்கு இம்மாவைக் காடியிற் கலந்து பூசலாம். கே.ஆர். பாலச்சந்திர கணேசன் சே. பிரேமா நூலோதி. A. F. Hill. Economic Botany. Tata McGraw-Hill Publishing Company Ltd., New Delhi, 1974. கோந்து காண்க : பிசின் கோப்பர்நிக்கஸ் கோட்பாடு வானியல் அறிஞர் கோப்பர்நிக்கஸ் எழுதிய Derevola tionibus என்னும் நூல் தொகுதிகளைக் கொண்டது புனி தன் துருவ அச்சைப் பொறுத்து நாள்தோறும் சுழலுவதால் பிற விண்பொருள்கள் நாள்தோறும் உதித்தலும், மறைதலும் ஏற்படு கின்றன என்ற அவரின் முக்கிய கோட்பாடு முதல் தொகுதியில் அடங்கியுள்ளது. இத்துடன்,சூரியன் தன் தோற்றப்பாதையில் 12 இராசிகளிலும் செல் வதும், பருவகாலங்கள் ஏற்படுவதும் புவி சூரியனைத் தன் துருவ அச்சுக்குச் சாய்வாக உள்ள தளத்தில் ஓராண்டில் சுற்றி வருவதால் ஏற்படுகின்றன என்ற கொள்கை பற்றியும் எழுதியிருக்கிறார். ச10 இரவுப்புள்ளிகளின் (equinoxes) அயனசலனத் தினால் அச்சின் திசையில் ஏற்படும் படிப்படியான மாறுதல்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ரெண்டாம் நூலில் வானியியலின் அடிப்படை உத்திகள். டாலமியின் அட்டவணை மாதிரியில் விண்மீன்களைப் பற்றிய அட்டவணை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் நூல் புவியின் யக்கம் பற்றி விரிவாகக் கூறும். சந்திரனைப் பற்றி நான்காம் நூலிலும், கோள்கள் பற்றி ஐந்து, ஆறாம் தொகுதிகளிலும் தெளிவுபடுத்தியுள்ளார். கோப்பர்நிக்கஸ், காட்சிப் பதிவீடுகளிலிருந்து நன்கு ஆராய்ந்து அறிந்த பின்னரே இந்நூலை எழுதினார், மேலும் முதன்முதலாக, சூரியனுக்கும் பிறகோள்களுக்கும் இடையே புவி உள்ள தொலைவு களையும், கோள்களின் இயக்கத்தையும் கணித்தவர் கோப்பர்நிக்கஸ் ஆவார். இவருக்குப் பின்னர், கெப்ளர், பிராஹியோ ஆகியோர் கோப்பர்நிக்கஸ் தத்துவத்தின் அடிப்படையிலேயே தங்கள் கொள்கை களை விரிவு படுத்தி எழுதினர். கோப்பர்நிக்கஸ், நிக்கோலஸ் பங்கஜம் கணேசன் இவர் இன்றைய வானவியலுக்கு வித்திட்ட போலந்து நாட்டு வானியல் வல்லுநர் ஆவார். கி. பி. 1473 ஆம் ஆண்டு பிபரவரித் திங்கள் 19ஆம் நாள் கிராகவ் என்னும் நகரத்தில் கோப்பர்நிக்கஸ், நிக்கோலஸ் பிறந்தார். உடன் பிறந்தோர் நால் வரில் இவரே இளையவர். இவர் தந்தை இரு