பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோபுரம்‌ 575

நூலோதி. Francis Day, The Fisher of India. Today and Tomorrow's Book Agency, New Delhi, 1981. கோபுர உச்சி ஒளிக்குவி அமைப்பு காண்க: சூரிய வெப்பத்திரட்டிகள் கோபுரம் நீள அகலங்களை விட மிகுதியான உயரம் கொண்டு கற்காரை, உலோகம், மரம் இவற்றால் அமைக்கப் படும் கட்டகம் கோபுரம் (tower) எனப்படும். இவை உயர் அழுத்த மின்கம்பிகளைத் தாங்குதல், வானொலி தொலைக்காட்சி போன்ற தொலைத் தொடர்புக் கருவிகளின் உணர்சட்டங்களைத் (antennas) தாங்கு தல், ஏவூர்தி, ஏவுகணை போன்ற கலங்களைத் தாங்குதல், தொங்குபாலங்களின் வடங்களைத் தாங்கு தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப் படுகின்றன. செலுத்துகைக் கோபுரங்கள். இவை திட்டப்படத் தில் செல்வக வடிவுடன் அமைக்கப்படும். பெரும் பாலும் கீல் இணைப்புகள் கொண்ட சட்டகங்களாக (pin jointed frames) எஃகு போன்ற உலோகங்களால் அமைக்கப்படும். பொதுவாக இவற்றுக்கு இழுவை வடங்கள் (guy wires) அமைக்கப்படுவதில்லை. சில சமயம் கோபுரத்தின் அடிப்பகுதி வலிவூட்டிய கற்காரையால் அமைக்கப்படும். இவற்றின் மீது செயல்படும் விசைகளாவன: தன்னெடை, மின் கடத்திக் கம்பிகள் (தொங்குவதால்) செலுத்தும் இழுவிசை, மின்கடத்திக் கம்பிகளின் மீதும் கோபு ரத்தின் மீதும் செயல்படும் காற்றழுத்தவிசை போன் றவை. கோபுரம் தாங்கும் கடத்திகளில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்பிகள் அறுந்துவிடும் போது தோற்றுவிக்கப்படும் சாய்வு, முறுக்கம் முதலிய விளைவுகளும் கோபுர ஆய்வில் இடம் பெறுகின்றன. தொடு மின்கடத்திக் கோபுரங்கள் மூவகைப்படும். கோபு ரத்தின் இருபுறங்களிலும் இணைக்கப்படும் கடத்தி கள் ஒரே நேர்கோட்டில் அமையின் அவை வரைக் கோபுரங்கள் (tangent towers) எனப்படும். இவற்றில் கம்பிகள் எதுவும் அறுபடா நிலையில் கம்பி இழுப்பின் கிடை விசைகள் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொள்வதால் இவற்றின் வடிவமைப்பு எளியதும், சிக்கனமானதுமாகும். இருபுறங்களிலும் இணைக்கப்படும் கடத்திகள் ஒரே நேர்கோட்டில் அமையப்பெறாத கோபுரங்கள், பாதை மரற்றுக் கோபுரங்கள் (angle towers) எனப்படும். இவ்வகைக் கோபுரம் 575 கோபுரங்களில், பாதை மாற்றுக் கோணத்தின் அளவையொட்டி. முறுக்கத் திருப்புமைக்குள்ளா வதால் இவற்றின் வடிவமைப்பில் சிக்கல் மிகுதி. இவற்றின் எடையும் மிகுதியாகத் தேவைப் படும். ஒரு புறத்தில் மட்டுமே கடத்திகள் இணைக்கப் படும் கோபுரம், பாதை முனைக்கோபுரம் ( deud end tower) எனப்படும். இக்கோபுரங்களில் கம்பிகளின் இழுவிசை ஒரு திசையில் மட்டுமே இருக்குமாதலால் இவை மிகுந்த சாய் திருப்புமைக்கு (overturning moment) உட்படும். ஏனைய ரு வகைளையும் விட இவற்றின் வடிவமைப்பில் மிகு எடையுள்ள கட்டு மானப் பொருள்கள் தேவைப்படும். தொடுவரைக் கோபுரம் படம் - 1 இலும், பாதை முனைக்கோபுரம் படம்-2 இலும் காட்டப்பட்டுள்ளன. அவை . வானொலி, தொலைக்காட்சிக் கோபுரங்கள். இல் வகைக் கோபுரங்கள் இழுவை வடங்களுடனோ. ல்லாத தனி நிலையிலோ அமைக்கப்படு கின்றன. தனி நிலைக் கோபுரங்கள் பெரும்பாலும் திட்டப்படத்தில் செவ்வக வடிவுடனே அமைக்கப்படு கின்றன. இவை தம் எடை, அலைப்பரப்பியின் எடை துணைக் கருவிகளின் எடை ஆகியவற்றோடு காற் றழுத்த விசைகளையும் தாங்கி நிற்க வடிவமைக்கப் படுகின்றன. அலைப்பரப்பிகளின் மீது பனிப்படிலைத் தவிர்க்க இயலாவிடின் பனிச்சுமையும் கணக்கில் கொள்ளப்படும். காற்றழுத்த விசைகளில் பல்வேறு திசை மாற்றங்களும், அளவு மாற்றங்களும் கவன மாசுக் கணக்கில் கொள்ளப்படவேண்டும் (குறிப்பாக இரு செங்குத்துத் திசைகளிலும், மூலைவிட்டத்திசை யிலும் காற்றுவீசும் நிலைகள் கவனத்திற்குரியன). இழுவை வடங்களுடன் அமைக்கப்படும் கோபு ரங்கள் பெரும்பாலும் தரையமைப்பின் முக்கோண வடிவமாக அமைக்கப்படுகின்றன. முக்கோணத்தின் மும்முனைகளிலும் கோபுரத்தின் கால்களாகக் சுருதப் படும் உயர்நிலை உறுப்புகள் வட்டவடிவ (குறுக்கும் பரப்பில்) எஃகு கம்பிகளால் அமைக்கப்பட்டுக் கிடைச் சட்டங்களால் இணைக்கப்படுகின்றன. பிணைப்பிற்கு முன்னரே கோபுர உறுப்புகள் யாவும் துத்தநாகப் பூச்சுடன் அடிநிலை வண்ணப் பூச்சும் பெறுகின்றன. தொலைக்காட்சிக் கோபுரங்கள் மிகவும் உயர மாக அமைக்கப்பட்டால் தான் ஒளிபரப்பு எல்லையை அதிகரிக்க முடியும். இவற்றை அமைப்பதில் மான, எடை குறைவான கட்டுமானங்களே மிகுவலிமை மாசு சிக்கன கொண்ட விளங்குமாகையால் எஃகினால் கோபுர உறுப்புகள் அமைக்கப்படுகின்றன. இணைப்புகளில் நாகப்பூச்சு செய்த மறையாணிகளும் மறைவில்லைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ் வகைக் கோபுரங்கள் குறிப்பிட்ட உயரத்திற்காக அமைக்கப்படும்போதும், பின்னர் உயரத்தை அதிகரிப் பதற்கும் ஏற்ற வகையில் வடிவமைப்புச் செய்யர்