580 கோமாரி
580 கோமாரி இரத்த அழுத்தம், உடலின் வெப்பம் ஆகியவற்றைக் கண்காணித்தல், சிறுநீர் வெளிவர இரப்பர் குழாயை உட்செருகல், குழாய் மூலம் வெளிவரும் சிறுநீரின் அளவைக் கணக்கெடுத்தல், வாய்வழியே குழாயை உட்செலுத்தி நீராகாரம், சத்துணவு, பால், பழச் சாறு, சர்க்கரை நீர் ஆகியவற்றை அளித்தல். முகப் பொடி தடவி ஈரத்துணியால் உடலை நன்றாகத் துடைத்து விடுதல், தோலில் புண் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுதல், ரப்பர் மெத்தை அல்லது மென்மையான பஞ்சு மெத்தையைப் பயன்படுத்தல், வாய். பற்களைத் தூய்மை செய்தல், முடியை எண்ணெய் தடவிச் சீவி விடுதல், மெல்லிய ஆடை கண்ணைத் தூய்மைப்படுத்திக் கண் அணிவித்தல், மருந்து இடுதல் ஆகிய அனைத்தையும் செய்து குறிப்பு களில் இவற்றை நாளும் எழுதி வைக்க வேண்டும். மருத்துவம். காரணத்திற்கு ஏற்றவாறு மருந்து களும் ஊசியும் போட வேண்டும். நோயின் காரணத் தைப் பொறுத்து உயிர் பிரிய நேரிடும். ஆகையால் மருத்துவ முறையை உடனே தொடர்ந்தால் 70% உயிர் பிழைக்க வழியுண்டு. கோமா நிலையைத் தடுக்கவும், தொடக்க நிலையில் மருத்துவரிடம் வந்தால் குணப்படுத்தவும் முடியும். கோமாரி சொ. நடராஜன் இது கால், வாய் நோய்களைக் கால்நடை வாய்ச் சப்பை என்றும். கால்கானை வாய்க்கானை என்றும் நடைமுறையில் கூறுவர். விரைவில் பரவக்கூடிய மிகக்கொடிய தாற்று நோயாகும். நுண்ணுயிரிகளால் இது உண்டாகிறது. வாயிலும், கால்களிலும் இந்த நோய் புண்களை உண்டாக்கும். எல்லாக் கால்நடைகளுக்கும் இது வரக்கூடும்.மாடு,பன்றி, ஆடு ஆகியவை இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கோழியும் மனிதனும் பாதிக்கப்படுவதில்லை. கால், வாய்நோய்கள் எல்லா நாடுகளிலும் உள்ளன. வயதடைந்த கால்நடை களில் 2 சதவீதமும், இளங்கன்றுகளி டையே 20 சத வீதமும் இந்நோயால் இறந்துவிடுகின்றன. நோய் கொடியதாக இருக்குமாயின் இறப்பு எண்ணிக்கை 50 சதவீதத்தையும் எட்டலாம். மேலை நாட்டு னங்களிலும் கலப்பு இனங்களிலும் இறப்பு எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். 1951-52 ஆம் உலகத்தின் ஆண்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இந்நோயால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. நோயின் மூலகாரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். A-வகை, 0-வகை,C-வகை ஆகிய மூன்று முக்கிய நுண்ணுயிரிகளால் நோய் உண்டாகிறது. ம் தவிர SATI, SAT2, SAT3 என்ற வகை உயிரிக களுப் ASIA I என்ற உயிரியும் நோயை உண்டாக்குகின்றன. இருப்பினும் 0 என்ற வகை உயிரியே மிகு அளவில் நோயைத் தோற்றுவிக்கிறது. மாட்டுச் சந்தைக்கு வரும் கால்நடைகள் மூல மாகவும், வணிகர்கள் மூலமாகவும், தீவனம், காற்று ஆகியவற்றின் வழியாகவும் இந்நோய் பரவுகிறது. நோயுள்ள கால்நடைகளின் போக்குவரத்தாலும், நோயுள்ள மனிதர்களாலும், பறவைகளாலும், புலா லாலும் இந்நோய் ஓரிடத்திலிருந்து பிற இடங் களுக்குப் பரவுகிறது. இவ்வுயிரி விரைவில் இரத்தத்திலும், பாலிலும், உமிழ் நீரிலும் வெளிப்படும்.பால்,விந்து,சாணம், சிறுநீர் ஆகிய கழிவுப்பொருள்களிலும் காணப்படும். காலிலும் வாயிலும் உள்ள கொப்புளங்களிலும் மிகு எண்ணிக்கையிலிருக்கும். தசைகளிலும், எலும்புச் சத்துகளிலும், இரத்தக்குழாய்களிலும் நீண்ட நாள் உயிருடனிருக்கும். மூக்கு வறட்சி, அயர்ச்சி, மயிர்ச் சிலிர்ப்பு. பசியின்மை ஆகியவை இந்நோயின் முதல் அறிகுறிகள். உமிழ்நீர் மிகுந்து, நூல் போல வழிந்து கொண்டிருக்கும். இந்நோய் முதலில் விலங்குகளின் உள்வாயிலும், நாக்கின் உட்புறமும், மேல்புறமும், குளம்புகளின் இடையிலும், குளம்புகளைச் சுற்றிலுமுள்ள சுவரி லும், பிற பகுதியிலும், கறவைமாடுகளின் மடிக்காம்பு களிலும் சிறு கொப்பளங்களாகத் தோன்றும். ஏதோ ஒரு பொருள் கால்களில் சிக்கிக்கொண்டிருப்பதுபோல் பின்கால்களை ஆட்டுவதும் உதறுவதும், குளம்புகள் மென்மையாவதும், நொண்டுதலும் காணப்படும். வாயிலிருக்கும் கொப்புளங்கள் முதலில் பாசிப்பருப்பு போல் தோன்றி வரவரப் பெருத்து உடைந்து சிவப்பு நிறமாக மாறிவிடும். 24 மணி நேரத்தில் இக்கொப் புளங்கள் உடைந்தவுடன் கெடுநீர் உமிழ்நீருடன் கலந்து வெளியேறிப் பிற விலங்குகளையும் இந்நோய் பற்றும் உயிரிகள் உடலில் புகுந்து நோயின் அறி குறியைவெளிக்காட்ட குறைய 2-6 நாள் ஆகும். இப்புண்கள் சுமார் ஒரு வார காலத்தில் குணமடை யும். சில மாடுகளுக்குக் கால்களில் உள்ள புண்களில் புழுக்களுண்டாகக் கால்குளம்புகள் கழன்றுவிடும். நோயுடைய மாடுகளின் பால், சாதாரண பாலை விட அதிக நீர் கலந்ததாகவும், இலேசான பசையுள்ள தாகவும், பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்திருந்தால் அடியில் வண்டல் படிவாகவும், காய்ச்சினால் உறைந்து கட்டியாகவும் மாறும். இந்நோயினால் பால் வற்றுதல் சினைமாடுகள் கன்று வீக சுதல் தோன்றும். மாடுகள் மெலிந்து வேலை செய்யா. ஆடுகள் கால்களிலுள்ள புண்களாலும், வலியாலும் நடக்க முடியாமல் இருக்கும். நோய்கண்ட கால்நடைகள் புண்கள் மடைந்த இரண்டு, மூன்று நாளில் தீவனம் உட் கொள்ளத் தொடங்கும். இருப்பினும் இதிலிருந்து ப