பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோரைக்கிழங்கு 587

4 18 2 I வளர் இயல்பு, 2. மஞ்சரி, 3. மலர், 4. சிபிருஸ் இனம் (Cyperus sp.) மலர் வரைபடம், Br- பூவடிச்செதில், Sறசூல்முடி, -ேசூல்பை, St-மகரந்தத்தான். னங்களில் மூன்று கேசரங்கள் மட்டுமே உள்ளன. சூலகம் இரண்டு அல்லது மூன்று சூலிலைகள் கொண்டுள்ளது. சூலிலைகள் கூடி ஓர் அறையான சூலாக இருக்கும். சூல் தண்டு இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக அமையும். பெரும்பாலும் பூக்கள் ஒரு பாலின. காற்று வழியாக மகரந்தச் சேர்க்கை நடை பெறுகிறது. கனி ஒரு விதையுடன் கடினமான கனிக்சுவரையும் பெற்றுள்ளது. . பல் இந்தியாவில் வகையான கோரைகள் உள்ளன. பொதுவாகக் கோரைகளைப் பொருளா தார நோக்கத்தில் கிழங்கு இனங்கள் என்றும் பாய் பின்னும் நார் போன்ற இனங்கள் என்றும் பிரிக்க லாம். சில வகைக் கோரைகள் விளை நிலங்களில் களைகளாகத் தோன்றிப் பயிர்களை அழிக்கின்றன. சிலவற்றின் இலைகளும் தண்டுகளும் கூரை வேயவும் பாய் பின்னவும் பயன்படுகின்றன. சிலவற்றில் மட்டத் தண்டின் கிழங்கு, பஞ்ச காலங்களில் உணவாகப் பயன்படுகிறது. வேறு சில மணப்பொருள், மருந்து தயாரிக்கப் பயன்படும். சில வகைக் கோரை கள் இளமையாக இருக்கும்பொழுது மாட்டுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுகின்றன. கோரைக்கிழங்கு. கிழங்குள்ள இனங்களில் சைப் ரெஸ் பல்போசஸ் என்னும் சிலந்தி அரிசி மணற்பாங் கான இடத்தில் வளர்கிறது. இவ்வினத்தில் உண்டாகும் கிழங்கு, அரிசி போன்று சிறியதாக இருக் கிறது. இக்கிழங்குள் தரையுள் ஓடும் நீண்ட மெல்லிய தண்டுகளில் காணப்படுகின்றன. சிலந்தி போன்று மண்ணில் அங்குமிங்கும் ஓடும் இத்தண்டுகள் மடிந்த பின்பு மணலைச் சலித்து இக்கிழங்குகளைச் சேகரிக்கின்றனர். மணமும் மருந்துப் பயனும் இல்லா விடினும் இது உணவாகப் பயன்படுகிறது. வலை கோரைக்கிழங்கு 587