பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிலைட்‌ 601

கோவிலைட் 601 தாழ 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பின் பேலியோசீன் காலத்திலிருந்த பூச்சியினங்களில் ஒரு பாதி அழிந்து விட்டனவென்றும், மறுபாதி தற்போதைய பூச்சியினங் களாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன என்றும் தெரிகிறது. குவாடர்னரி (பிளீஸ்டோசீன்) காலத்திய தொல் படிவுகளில் இக்கால வண்டினங்களின் மூதாதை இனங்கள் உள்ளன. மரங்களைத் துளைக்கும் பூச்சிகளில் வண்டுகளே முதன்மையானவை என்பது டிரையாசியக் கால மரக் கட்டைத் தொல் படிவுகளிலிருந்து தெரியவருகிறது. இவற்றினும் சற்று வயது குறைந்த மரக்கட்டைத் தொல்படிவங்களில் ரெசின் சுரந்தமைக்கான சான்று கள் உள்ளன. துளைக்கும் பூச்சிகளின் தொல்லைக்கு எதிர்ப் பொருளாக ரெசின் சுரந்திருக்கக்கூடும். அக் காலத்திலேயே பூக்கும் தாவரங்களின் படிமலர்ச்சிக்கு வண்டுகள் உதவியிருக்கலாம். அடிஃபேகா வண்டுகள் பிற்காலத்தில் தரைவாழ் கொன்றுண்ணிகளாக வாழ்ந்துள்ளன. முன் ஜூராசியப் படிவுகளில் அடில் பேகா நீர் வண்டுகளின் தொல்படிவங்கள் காணப்படு கின்றன. கு.சம்பத் நூலோதி.K.K. Nayar et.al., General and Applied Entomology, Tata McGraw - Hill Book Company. Ltd., New Delhi, 1983. கோலினேஸ்ட்ரேஸ் எதிர்ப்பிகள் அசெட்டைல்கோலின்என்ற உடலில் உற்பத்தியாகும் வேதிப்பொருள், நரம்பு உணர்வு அலைகளைக் கடத்த உதவுகிறது. அசெட்டைல்கோலின், கோலி னேஸ்ட்ரேஸ் என்னும் நொதியால் சிதைக்கப்படுகிறது. கோலினேஸ்ட்ரேஸ் எதிர்ப்பிகள் (anticholi nesterases) கோலினேஸ்ட்ரேஸ் நொதியை அழிப்பதால் அசெட் டைல்கோலின் சிதைலைத் தடுக்கின்றன. இதனால் உடலினுள் சுரக்கும் அசெட்டைல்கோலின் மற்றும் வெளியிலிருந்து செலுத்தப்படும் அசெட்டைல் கோலினை ஒத்த மருந்துகளின் இயக்கம் மிகைப் படுத்தப்படுகிறது. கோலினேஸ்ட்ரேஸ் எதிர்ப்பி களை மீளக்கூடிவை, மீள முடியாதவை என ரண்டு வகையாகப் பிரிக்கலாம். டன் மீளக்கூடிய கோலினேஸ்ட்ரேஸ் எதிர்ப்பிகள். இவை. கோலினேஸ்ட்ரேஸ்கள் அசெட்டைல்கோலி பி ணையும் பகுதிகளுடன் (receptor site) ணைந்து கோலினேஸ்ட்ரேஸ்களின் இயக்கத்தைக் றைக்கின்றன. இந்த எதிர் மருந்துகளின் இயக்கம் சிறிது நேரமே இருக்கும். எனவே கோலினேஸ்ட் ரேஸ்களின் இயக்கம் மீளக்கூடியது. இவ்வகை எதிர்மருந்துகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. 0 எ.கா: ஃபைசோஸ்டிக்மின் (physostigmine), நியோஸ் டிக்மின் (neostigmine), பைரிடோஸ்டிக்மின் (pyridostigmine). இம்மருந்துகள் கடும் இயக்குத்தசை சோர்வு நோய் (myaesthenia gravis), கண் உள்மிகு அழுத்த நோய் (glaucoma). அலைவின்மை (paralytic ileus), அட்ரோபின் நச்சு(atropine toxicity), டி.டியுபோகுராரினின் என்ற மருந்தால் இயக்கு தசைகள் உணர்விழத்தல் ஆகிய நோய்நிலைகளில் பெரிதும் பயன்படுகின்றன. குடல் மீள முடியாத கோலினேஸ்ட்ரேஸ் எதிர்ப்பிகள். மாலத்தியான் (malathion), பாரத்தியான் (parathion) போன்றவை கோலினேஸ்ட்ரேஸ் நொதிகளுடன் பிணைந்து அவற்றை நிலையாகச் செயலிழக்கச் செய்கின்றன. இதனால் அசெட்டைல்கோலின்களின் இயக்கம் நீடிக்கும்.இரத்தத்தில் அசெடைல்கோவினின் நச்சு அளவை அடைந்தால், பல வேண்டாத விளைவு கள் ஏற்படும். இம்மருந்துகள் பொ துவாகப் பூச்சிகொல்லி களாகப் பயன்படுகின்றன. வை நச்சு அளவில் உடலுக்குள் சென்றுவிட்டால் அமைதியின்மை, தூக்கமின்மை, நடுக்கம், மனக்குழப்பம், மூச்சு ஒடுக்கம், இரத்த ஓட்டச் சீர்குலைவு கண் பாவைக் குறுக்கம், மிகு வியர்வை, கடும் வயிற்றுவலி, மூச்சுத் திணறல். மரணம் முதலிய விளைவுகளை உண்டாக்கும். இதற்கு மருத்துவமாக அட்ரோபின் (atropine), கோலினேஸ்ட்ரேஸ் மறு இயக்குவிப்பான் கள் (cholinestcrase reactivators) முதலிய மருந்து களைப் பயன்படுத்தலாம். -ச.ஆதித்தன் கோவிலைட் இது ஒரு சல்ஃபைடு கனிமம். இக்கனிமம் செம்பும் கந்தகமும் கலந்ததாகும். இதைச் செம்பு - சல்ஃபைடு (CuS) என்பர். இக்கனிமம் அறுகோணத் தொகுதி யின் இயல்பு வகுப்பைச் சேர்ந்தது. கோவிலைட்டின் (covellite) அணுக்கோப்பு அடிப்படை இயல்பு) வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக்கோப்பில் ஆறு (கனிம ) கூட்டணுக்கள் உள்ளன. அணு அமைப்பில் அணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு கிடைவாட்டத்தில் 3.802 A ஆகவும், குத்து வாட்டத்தில் 16.43 A ஆகவும் உள்ளது. கோவிலைட் படிகமாக அரிதில் கிடைக்கிறது. இப்படிகங்கள் அறுகோண வடிவுடன் தட்டையாக உள்ளன. படிகங்களின் அடி இணை வடிவு முகங் களில் அறுகோணக் கீறல்கள் காணப்படும். பெரும். பாலும் கோவின லைட் திண்மங்களாகவும் எடு களாகவும் கிடைக்கும்.