604 கோவேறு கழுதை
604 கோவேறு கழுதை குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறக்கும் குட்டியே ஆகும். ஆனால் ஆண் குதிரைக்கும் பெண் கழுதைக் கும் பிறக்கும் கலப்பினத்திற்கு ஹின்னி (hinny) என்று பெயர். இது கோவேறு கழுதையிலிருந்து பெரிதும் மாறுபட்ட பண்புடையது. தாயாகிய கழுதை சிறிய தாக இருப்பதும் 'இதற்குக் காரணமாக இருக்கலாம். குதிரை - கழுதை அயல் இனச்சேர்க்கை முறை, மனிதனுடைய பொருளாதாரம், வணிக வளர்ச்சி இவற்றைக் கருதியே கையாளப்படுகிறது. கோவேறு கழுதையின் தரம் அதன் தாய் தந்தையின் தரத்தைப் பொறுத்தே அமையும். இது ஆணிடமிருந்து சிறிய குளம்பு, குறை முடியுடைய பிடரி, வாய், குரல், மனப்பக்குவம் ஆகியவற்றை உருவாக்கும் ஜீன்களை யும் பெண்ணிடமிருந்து உடல் பருமன், வலிமை, பொதுத்தோற்றம் போன்றவற்றிற்குரிய ஜீன்களை யும் பெறுகிறது. ஆனால், ஹின்னி உடல் அமைப் பிலும் தோற்றத்திலும் குதிரையைப் போலவே இருக் கும். கனபரிமாணத்தில் சிறுத்து, கழுதையின் பரி மாணத்தை ஒத்திருக்கும். இது குதிரையின் குரல் உடையது. கோவேறு ஹின்னி கழுதையைவிட மலட்டுத்தன்மை குறைந்தது. குண கோவேறு கழுதை தன் தகப்பனான கழுதை தாயான குதிரை இவையிரண்டையும் விடக் நலனிலும், தக்வமைப்பிலும் மிகவும் மேம்பட்டதாக உள்ளது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் குதிரை யைப் போல வேகமாக ஓட முடிவதில்லை.ஆயினும், உடல் வலிமையிலும், களைப்பையும் வலிகளையும் தாங்கிக் கொள்ளும் தன்மையிலும், நோய்த்தடுப் பாற்றலிலும், மிக வெப்பமான சூழ்நிலையிலும் செய வாற்றும் திறனிலும் குதிரையை விட மிகுதியான ஆற்றல் பெற்றது. அறிவாற்றலிலும் கோவேறு கழுதை தன் பெற்றோரையும் விஞ்சும் வகையில் சிறந்தது என்று கருதப்படுகிறது. கோவேறு கழுதை யின் குறிப்பிடத்தக்க பிடிவாத குணத்தையும் கடின மான வேலையில் அது காட்டும் ஈடுபாட்டையும் இதற்குச் சான்றாகக் குறிப்பிடுவர். சேர்க் கோவேறு கழுதையை விற்பனைக்காகப் பெருக்கு வோர் அதற்கே உரிய குண நலன்களைக் கொண்ட பயன்பாடு மிக்க குதிரைகளையும், கழுதைகளையுமே பல தலைமுறைகளாகப் பேணிக் காத்து வருகின் றனர். கோவேறு கழுதையை மட்டும் தொடக்கமாகக் கொண்டு அதன் இனத்தைப் பெருக்க முடியாது. ஏனென்றால், பெரும்பாலான அயல் இனச் கைக் கலப்புயிரிகள் போல் இதுவும் மலட்டுத்தன்மை (hybrid sterility) உடையது. இதற்கான காரணம் அறிய ஆண் கோவேறு கழுதையின் நீர்ம விந்தை ஆராய்ந்தபோது விந்தின் செல்கள் செயலற்றவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் பெண் கோவேறு கழுதையையும், ஆண் குதிரையையும் இணைத்துக் குட்டிகளைப் பெற்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன. இவ்விதம் நிகழ்வது அரிது. . இம்முறையில் நிகழ்ந்திருக்கலாம் என்பது அறிவியல் வல்லுநர்களின் முடிவான கருத்து. பெண் கோவேறு கழுதையும், ஆண் குதிரையும் இணையும்போது பின் வரும் அரியநிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம். கோவேறு கழுதையின் அண்டத்தில் அரிய குதிரைக களின் அனைத்துக் குரோமோசோம்களும் அமைந்திருந்து. அவை ஆண் குதிரையின் விந்துச் செல்லில் உள்ள குதிரைக்குரோமோசோம் அனைத்துடனும் இணைந்த காரணத்தால் கோவேறு கழுதைக்குட்டி பிறந்திருக்க லாம். இவ்வாறு பிறக்கும் குட்டிகள் குதிரையின் குணங்களை மிக அதிகமாகப் பெற்று இருக்கு மேயல்லாமல் தம் தாயான கோவேறு கழுதை போல் இரா. இனப்பெருக்கச் செல்கள் நீங்கலாகக் குதிரையின் உடலில் காணப்படும் ஒவ்வொரு செல்லிலும் 60 இருமய (diploid) குரோமோசோம்கள் காணப்படு கின்றன. ஆனால், கழுதையில் 66 குரோமோசோம் கள் உள்ளன. ஆகையால் கழுதையின் விந்துச் செல் லில் முப்பத்துமூன்று குரோமோசோம்களும், குதிரை யின் அண்டத்தில் முப்பதும் காணப்படும். இவற்றின் சேர்க்கையால் ஏற்படும் கோவேறு கழுதையின் உடல் செல்களில் 30 +33 63 குரோமோசோம்கள் இருக்கும். கோவேறு கழுதை இனப்பெருக்கச் செல் களை உண்டாக்குவதற்கு, அப்போது நிகழும் குன்றல் பகுப்பின் (mciosis) போது ஒரே அமைப்புடைய குரோமோசோம்கள் (homologous chromosomes) இரண்டிரண்டாக இணைய வேண்டும். அதே வடிவு கழுதையின் குரோமோசோமும் டைய குதிரையின் குரோமோசோமும் ணையாகச் சேர வேண்டும். இவற்றின் ஜீன்கள் வேறுபட்டவை. அவற்றிற்கிடையே ஒத்த அமைப்புடைய ஜீன்கள் இருந்தாலும் 30 குதிரைக் குரோமோசோம்களும் 30 கழுதைக் குரோமோசோம்களும் மட்டுமே இணை சேர முடியும்; எஞ்சிய தனித்துவிடப்பட்ட $ கழுதைக் குரோமோசோம்களும் குன்றல் பகுப்பில் பங்கெடுக்க இயலா. இதனால் ஆண் கோவேறு கழுதையில் விந்துச் செல்களோ, பெண் கோவேறு கழுதையில் அண்டமோ சரிவர உருவாக முடிவ தில்லை, உண்மையில் குதிரைக் குரோமோசோம்களும் கழுதைக் குரோமோசோம்களும் வேறுபட்ட ஜீன் களைக் கொண்டுள்ளமையால் குன்றல் பகுப்பு முற்றி லும் குறைபாடுடனே அமையும். இதுவே கோவேறு கழுதைகளின் மலட்டுத்தன்மைகளுக்குக் காரணம். கோவேறு கழுதையின் சிறப்புப் பண்புகளுக்குக் கலப்பின வீரியமே (hybrid vigour) முக்கிய காரண மாகும். கலப்பினங்கள் மிகவும் வீரியத்துடன் ருப் பதற்கும், ஓங்கு நிலையில் (dominant) உள்ள ஜீன் கள் மிகுதியாகச் செயல்படுவதற்கும், ஒடுங்கு நிலை யில் (recessive) உள்ள ஜீன்களின் செயலாற்றல் அடக் கப்படுவதற்கும் ஏற்ற சூழ்நிலை அமைவதே காரணம். பொதுவாக, பயனுள்ள குணங்களை வெளிப்படுத்