பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிக்‌ குஞ்சுகள்‌ 605

தும் ஜீன்கள் ஓங்கிய நிலையிலும். கேடு விளைவிப் பவை ஒடுங்கிய நிலையிலும் உள்ளன. வேற்றினச் சேர்க்கையின் போது இரண்டு வேறுபட்ட இனங் களிலும் காணப்படும் ஓங்கிய நிலையில் உள்ள ஜீன் கள் ஒரே கலப்புயிரியில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவது இயலும். அதே நேரத்தில், இவ்விரு இனங்களிலும் காணப்படும் ஒடுங்கிய நிலையில் உள்ள தீமை விளைவிக்கும் ஜீன்கள் செயலிழந்த நிலையில் அறைவதற்கும் வேற்றினச் சேர்க்கை காரணமாகிறது. சு. மாடசுவாமி கோழி இறகு உணவு கோழிக் குஞ்சுகள் 605 கோழிப் பண்ணைகளில் கோழி இறகுகளைச் சேசு ரித்து நன்றாகக் கழுவி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் காய வைத்து உலர்த்தியபின் தலையணை, மெத்தை முதலியவற்றுப் பஞ்சுக்குப் பதிலாக பயன் படுத்தலாம். இது மிகவும் மென்மையாகவும், வழ வழப்பாகவும் இருக்கும். இறக்கைகளைக் கழுவி, வெந்நீரில் கொதிக்கவைத்து நீராவியில் தூய்மைப் படுத்தி வெயிலில் உலர்த்தியோ உலர் கருவிகள் மூலம் உலர்த்தித் தூளாக்கியோ 5-10% வரை கோழி உணவாகப் பயன்படுத்தலாம். பி. இராமன் கோழி அறிவியல் நெடுங்காலமாகக் கோழிகள் புறக்கடை (backyard) முறையில் சிற்றூர்களிலும் நகரங்களிலும் வளர்க்கப் பட்டு வந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக வணிக முறையில் அதிக முட்டையிடும் மேல்நாட்டு இனக் கோழிகள் ஆழ்கூள (deep litter) முறையிலும் கூண்டு முறையிலும் வளர்க்கப்படுகின்றன. கடந்த 10-15 ஆண்டுகளாக இறைச்சிக் கோழிகள் மேற் கூறிய முறையில் வளர்க்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் கோழி அறிவியல் பற்றி நடந்த பல ஆய்வுகள் கோழிவளர்ப்புத் தொழில் முன்னேற நன்கு உதவியுள்ளன. வளர்ந்துள்ள நாடுகளில் ஒருவருக்கு ஆண்டுக்கு 200-300 முட்டைகள் வரை கிடைக்கின்றன. மைய அரசின் உணவு அறிவுரைக் குழுவின் பரிந்துரைப்படி இந்தியாவில் ஒருவருக்குச் சராசரி 1 மூட்டை வீதம் ஆண்டுக்கு 150 முட்டைகள் தேவைப்படும். இதற்கு முட்டையின் அளவை 100000 மில்லியனாகப் பெருக்க வேண்டும். எனவே கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கோழி அறிவிய லில் நல்ல பயிற்சி தர வேண்டும். கோழி அறிவியலில் கோழிக் குஞ்சு உற்பத்தி, கோழிக் குஞ்சுப் பராமரிப்பு, தீவனம். கோழி வளர்க்கும் முறை, கோழிக் குஞ்சு நோய், குணங்கள், மருத்துவ முறை, தொற்று நோய்த் தடுப்பு முறை, கழிவுப் பொருள்களும் கோழித் தீவனமும், இறைச்சிக் கோழிக் குஞ்சு உற்பத்தி, இறைச்சிக் கோழிகளுக்கு வரும் நோயும் தடுப்பு முறை யும். கோழிப் பண்ணைகளில் பயன்படும் மருந்து கள் - பயன்கள், கோழி முட்டைகள் - இறைச்சிக் கோழிகளை விற்பனை செய்தல், கோழிகளின் திறன் பெருக்குதல், கோழிப் பண்ணைகள் பற்றிய குறுகிய கால, நீண்டகாலப் பயிற்சிகள், கோழிப் பண்ணைப் புள்ளி விவரமும் பொருளாதாரமும், நச்சூட்டுகள், கோழிகளின் காப்பீடு, கோழிக் கழிவுகள் போன்றவை அடங்கும். - பி. இரயன் கோழிக் குஞ்சுகள் ஒரு கோழிப்பண்ணை லாபகரமாக இயங்க, தரமான குஞ்சுகள் தேவை. நாட்டுக் கோழிகள் ஆண்டுக்கு 80 முட்டை வரை ம். அவற்றைக் கொண்டு ஒரு கோழிப் பண்ணையை ஆழ் கூள முறையிவோ கூண்டு முறையிலோ அமைக்க முடியாது; புறக்கடை முறையில்தான் வளர்க்க இயலும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் 180-200 முட்டை கள் வரை இடும் நல்ல இனக்கோழிகளான ஒயிட் லெக்ஹார்ன், கறுப்பு மைனார்க்கா போன்றவையும் இறைச்சிக்கு ரோட் ஐலண்டு, ரெட் எயிட் ராக் போன்றவையும் வளர்க்கப்பட்டன. 15 ஆண்டுகளுப் பிறகு மேல்நாடுகளில் நடந்த ஆராய்ச்சியின் பயனாக ஆண்டுக்கு 240 முட்டைகள் இடக்கூடிய வீரியக் குஞ்சுகளான பாப்காக் ராணிஷெர், ஆர்பர் ஏக்கர் போன்ற குஞ்சுகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. அடுத்து இந்தியாவிலேயே கூட்டு முயற்சியின் மூலம் இந்தக் குஞ்சுகள் இப்பொழுது கிடைக்கின்றன. இறைச்சிக்காக 8 வாரத்தில் சுமார் 1.5 கி.கி. வளர்ச்சி காப்ஸ் அடையக்கூடிய போன்ற பூனாபேல்ஸ் இறைச்சிக் குஞ்சுகள் கிடைக்கின்றன. முட்டை மற்றும் இறைச்சிக் குஞ்சுகளின் உற்பத்தி நிலையங்கள் நாமக்கல், பெங்களூர், மதுரை போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலமும் அரசூர், மதுரை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு கோழி அபிவிருத்தி நிறுவனத்தின் குஞ்சு பொறிக்கும் நிலையங்கள் மூலமும் கிடைக்கின்றன. கோழிப்பண்ணை வைக்க விரும்புவோரில் பலர், 8-12 வாரம் வயதான கோழிகளையே வளர்க்க விரும்புகின்றனர். சிறிது காலப் பயிற்சிக்குப் பின் அனைவரும் ஒருநாள் குஞ்சுகளையே வாங்கி எளி தாக வளர்க்கலாம். ஒருநாள் குஞ்சுகளை வாங்குவ தால் அவற்றை உற்பத்தி நிலையத்திலிருந்து பண்ணை