606 கோழிக் குஞ்சுகள்
606 கோழிக் குஞ்சுகள் களுக்கு அட்டைப் பெட்டிகளிலோ மூங்கில் கூடை களிலோ எளிதாக எடுத்துச் செல்லலாம். வளர்ந்த கோழிகளைக் கொண்டு செல்வதில் செலவும், வழி யில் அவற்றின் இறப்பு விகிதமும் மிகுதியாகக் கூடும். ஒரு நாள் குஞ்சுகளை வளர்க்கும் பொழுது லாபம் கிடைக்கும். கோழிகளுக்குப் பண்ணையில் கொடுக்கப் படும் மருந்து, தடுப்பு ஊசி பற்றிய விவரம் இருக்கும். பிற இடங்களில் கோழிகள் வாங்கினால் ந்த விவரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் திடீரென்று தொற்று நோய்கள் ஏற்பட்டுக் கோழிகள் பெருவாரியாக இறந்துவிடவும் வாய்ப்புண்டு. நோய் கள் அடைமுட்டை மூலம் குஞ்சுகளுக்குப் பரவக் கூடும். எனவே நம்பகமான நோய்களற்ற நிலையத்தி லிருந்து குஞ்சுகளை வாங்க வேண்டும். குஞ்சுகள் 20-22 வாரங்களில் முட்டையிடும். குஞ்சு பொரித்த நாளிலிருந்து முட்டை உற்பத்தி தொடங்கி விடுகிறது. ஆகவே தீவனப் பற்றாக்குறை, நோய், நெருக்கமான இட அமைப்பு ஆகியவை குஞ்சுகளைத் தாக்குவதால் கோழியின் வளர்ச்சி யுடன் முட்டை உற்பத்தியும் குறையக்கூடும். குஞ்சு கள் நன்முறையில் வளர்க்கப்பட்டால் முட்டையிடும் கோழிகளைப் பெற முடியும். கமான குஞ்சுகளை வீடு அமைத்தும் தரையில் விட்டும், குஞ்சு வளர்ப்புப் பெட்டி (brooder) மூலமும் வளர்க்கலாம். குஞ்சுகள் வளர்க்கப்படும். வீடு கோழி வீட்டிலிருந்து சுமார் 15 மீட்டர் ஒதுங்கி இருக்க வேண்டும். கோழிப்பண்ணை இயங்கும் இடத்திலும், குஞ்சு வீட்டிலும் காற்றோட்டம் அமையுமாறு பேண வேண்டும். பிறந்த குஞ்சுகள் மென்மையானவை. வயதான கோழிகள் எளிதாக நோயால் தாக்கப்படக்கூடியவை. இவை நோய் களைத் தாங்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நோய் பரப்பக்கூடியவையாக இருக்கும். ஆகவே குஞ்சுகளை, முன்னரே வயதான கோழிகள் இருந்த வீட்டில் வளர்க்க முற்பட்டால் அந்த வீட்டை நன்றாக மருந்துக் கலவையால் கழுவி ஊது அடுப்புக் கொண்டு தரை, சுவர்களைப் பொசுக்கி, வெள்ளை அடித்து 20 நாள் வெற்றிடமாக வைத்திருந்த பிறகே குஞ்சு களை அதில் விட வேண்டும். தீவனத் தொட்டிகளை யும் நீர்ப் பாத்திரங்களையும் 5% பினாயில் போன்ற நுண்ணுயிரி எதிர் மருந்தால் கழுவி வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். குஞ்சு வளர்ப்புப் பெட்டி என்பது குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்கக்கூடிய குடை போன்ற அமைப் புடைய ஒரு கருவி. இது நான்கு அங்குல கால்களைக் கொண்டது. உலோகத்தாலோ, மூங்கில் தட்டை யாலோ இதைச் செய்யலாம். மூங்கிலாலான அமைப்பை உலரவைத்துத் தாள் கூழால் மெழுகி விட்டால் இது மேலும் சிறப்பாகச் செயல்படும்; அல்லது பழைய தாளை மூங்கில் கூடையின்மேல் ஒட்டி விடலாம். 120 செ.மீ. விட்டமுள்ள இந்த