பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிக்‌ குஞ்சுகள்‌ 607

அமைப்பின் உள்ளே 5 அல்லது 6, 60 வாட் மின் விளக்கைப் பொருத்தி மின் இணைப்புச் செய்ய வேண்டும். இப்பெட்டியின் கீழ் 250-300 குஞ்சுகள் வளர்க்கலாம். குஞ்சுகள் வருவதற்கு முன் 7.5 செ.மீ. உயரத் திற்கு உமி, கருக்காய் அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் செய்தித்தாள்களை இடைவெளியில்லா மல் பரப்ப வேண்டும். பெட்டியை மையத்தில் வைத்து மின்விளக்குகளை எரியவிடவேண்டும். பெட்டியின் அடியில் 35°C வெப்பம் கிடைக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பெட்டியைச் சுற்றி 40-45 செ.மீ. உயரத்திற்குப் பாதுகாப்பு அட்டைகளைச் சுவர்களாகப் பொருத்த வேண்டும். து குஞ்சுகள் வெப்பம் கொடுக்கும் பெட்டியை விட்டு வழி தவறிச் சென்றுவிடாமல் தடுக்கும். B பெட்டிக்கும் தடுப்புச் சுவருக்கும் இடையேயுள்ள பகுதியில் தீவனம், நீர்த் தொட்டி ஆகியவற்றைப் படத்தில் உள்ளவாறு மாறி மாறி வைக்க வேண்டும். நீர்த் தொட்டிகளில் 5% குளுக்கோஸ், வைட்டமின் சுலவை கலந்த நீரை ஊற்றி வைக்க வேண்டும். கோடையில் ஆறிய வெந்நீரிலும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரிலும் கலந்து வைக்க லாம். குஞ்சுகளுக்கு 15 நாள் வரை கொதிக்க வைத்த நீரையே கொடுக்க வேண்டும். இதனால் நீர் மூலம் நோய் பரவாமல் தடுக்கவாம். குஞ்சுகளைச் சில நிறுவனத்தார் பண்ணைக்கே தங்கள் ஊர்தி மூலம் கொண்டு வந்து கொடுப்பர். குஞ்சுகளை வெயில், மழை, பெருங்காற்று இவற் றால் தாக்கப்படா வண்ணம் பாதுகாப்புடன் கொண்டு வர வேண்டும். குஞ்சுகளைப் பெட்டியில் மதுவாக வைக்க வேண்டும். குளுகோஸ் நீரில் குஞ்சின் அலகை முக்கி அது சிறிது நீர் குடித்த பின் பெட்டியில் விட வேண்டும். இதனால் குஞ்சுகள் நீர் நிலையைத் தெரிந்து கொள்ளும். குஞ்சுகளுக்கு உணவாக மக்காச்சோளம், குறு நொய், ரவை ஆகியவற்றைத் தாளில் தெளித்து விடலாம் அல்லது குஞ்சுகள் வந்த அட்டைப் பெட்டி யின் மூடிகளிலும் போட்டு வைக்கலாம். இரண்டு நாள் கழித்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டுத் தீவனத் தொட்டிகளில் குஞ்சுத்தீவனம் போட்டுக் கொடுக்க வேண்டும். தீவன அளவு விவரம் குஞ்சுத் தீவனப் பகுதியில் உள்ளது. ஐந்து நாளுக்குப் பிறகு உமியில் போட்டிருந்த செய்தித்தாள்களை எடுத்து விடலாம். குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் 35°C, இரண் டாம் வாரத்தில் 32.2°C, மூன்றாம் வாரத்தில் 29.4°C வெப்பம் இருக்குமாறு மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும். இதற்கென ஒரு வெப்ப அளவி வைத்துக் கொள்ளலாம். நான்காம் வாரத்திலிருந்து தேவைப்பட்டால் வெப்பம் கொடுக்கலாம். கோழிக் குஞ்சுகள் 607 தீவனத்தொட்டி -தண்ணீர்த் தொட்டி -தஞ்சு வளர்ப்புப் பெட்டி தேவைப்படும்போது குஞ்சுகள் கீழே தங்கி வெப்பம் பெறும். மற்ற நேரங்களில் வெளியே ஓடி விடும். பெட்டியின் கீழ் வெப்பம் குறைவாக இருந் தால் எல்லாக் குஞ்சுகளும் பெட்டி அடியில் நெருங்கி வெப்பம் நிற்கும். மிகுந்திருந்தால் வெப்பத்தைத் தாங்காது, எவ்வாக் குஞ்சுகளும் பெட்டிக்கு வெளியே நிற்கும். மிகுவெப்பம் இருந்தால் குஞ்சுகள் பெட்டி யின் ஓரங்களில் நிற்கும். குஞ்சுகள் வளர வளர பெட்டியைச் சுற்றியுள்ள தடுப்பைப் பெரிதாக்க வேண்டும். 7-10 நாளில் இத்தடுப்பை எடுத்து விடலாம். பெட்டிக்கு மாறாக அகச் சிவப்பு மின் விளக்கு களையும் பயன்படுத்தலாம். ஒரு 250 வாட் விளக்கு 250 குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பத்தை அளிக்கவல்லது. 3 வாரங்களுக்கு இந்த மின் விளக்கைத் தொங்கவிட வேண்டும். குஞ்சுகளுக்கு வயது ஆக ஆக வெப்பத்தையும் குறைக்க வேண்டும். இரத்தக்கழிச்சல் தடுப்பு மருந்து, வைட்டமின் A, B கலவை மருந்துகளைக் காலத்தில் அட்ட வணைப்படி கொடுத்துப் பேரேடுகளில் பதிந்து வைக் கலாம். தடுப்பு ஊசிகளை வெயில் இல்லாத நேரங் களில் காலையிலோ இரவிலோ பின்வருமாறு கொடுத்துப் பேரேடுகளில் பதிய வேண்டும். தடுப்பு ஊசி போடுவதோடு முன்னும் பின்னும் 3 நாள் வைட்டமின் B கலவை கொடுக்கலாம்.