பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழிகள்‌ 609

x பண்டைக் காலந்தொட்டே கோழி வகைகளை இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்த்து இனம் பெருக்கி வந்துள்ளனர். அண்மைக்காலத்தில் கோழி வளர்ப்பில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கோழிப்பிரிவில் ஃபேசியானடீ, கிராசிடீ எனப் பல குடும்பங்கள் அடங்கியுள்ளன. டர்னிசிய குடும்பத்தைச் சார்ந்த சிறிய காடைகள் தனியாக வாழ்பவை. விரைவாக ஓடுபவை. ஆண் அடை காக்கும். இவை விரும்பியுண்ணப்படுபவை. இந்தியா, ஆஃப்ரிக்கா, தென் ஐரோப்பாப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. ஏனைய குடும்பங் களைச் சார்ந்த பறவைகள் சமூக வாழ்க்கை நடத்து பவை. தரையில் குழிதோண்டி முட்டையிடுபவை. ஃபேசியானிடி பறவைகள் தரையில் வாழ்பவை; தரையில் கூடுகட்டிப் பல முட்டைகளிடும். இவை பெரும்பாலும் தானியம் போன்றவற்றையே உண்ணும். இப்பறவைகள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றன. கினிக்கோழி (ஆஃப்ரிக்கா. மட காஸ்கர்), வான்கோழி (மத்திய அமெரிக்கா), மயில், காட்டுக்கோழி (இந்தியா), ஃபேசியானஸ் (ஆசியா, ஐரோப்பா), காடை, கவுதாரி ஆகியவை இக்குடும் பத்தைக் சார்ந்தவை. கோழி வகைகள். காட்டுக்கோழி (jungie fowl). லெக்ஹார்ன் கோழி (leghorn fowl). கறுப்பு மினார்க்கா (black minorca), ரோட் ஐலண்டு சிவப்பு (rhode island red),வெளுப்புச்சசெக்ஸ் (white sussex), பிராமா (brahma}, கொச்சின்சைனா (cochin china). வரிப் பிளைமவுத் ராக்(barred plymouth rock), ஆர்ஃ பிங்ட்டன் (orphington), வான் கோழி (turkey), கினிக்கோழி (guinea fowl) ஆகியவை சில முக்கிய கோழி வகைகளாகும். காட்டுக்கோழி. கால்லஸ் பான்கிலா (Gallus bankiva) என்ற இனம் ஆதியில் இந்தியாவில் தோன்றியது. மேல் நாட்டினர் இதிலிருந்து கலப்பு மூலம் பல இனக்கோழிகளை உற்பத்தி செய் துள்ளனர். இந்தியக் காட்டுக் கோழிகள் ஆண் டொன்றுக்குச் சராசரி 52 முட்டைகளே இடுகின்றன. முட்டைகள் 25-30 கிராம் எடையுள்ளவை. ஆனால் மேல் நாட்டு இனங்கள் 200-250 முட்டை களிடுகின்றன. முட்டைகள் 50 - 60 கிராம் எடை யுள்ளவை. இவ்வகைக் கோழிகளை இந்தியாவில் வளர்க்க முற்பட்டுள்ளார்கள். இவை 180 - 200 முட்டைகளிடுகின்றன. லெக்ஹார்ன் கோழிகள். இவை இத்தாலி நாட்டி லுள்ள லெக்ஹார்ன் என்னுமிடத்தைத் தாயகமாகக் கொண்டவை. இப்போது எல்லா .நாடுகளிலும் கோழிகள் 609 உள்ளன. அதிக முட்டையிடுவதில் இணையற்றவை. முட்டைகளும் ஏனைய கோழிகளின் முட்டைகளை விடப் பெரியவை. நீண்ட சிவப்புத் தாடி, பிளவுபட்ட சிவப்புக் கொண்டை. மஞ்சள் கால்கள், மூக்கு, அழகிய கருவிழிகள் ஆகியவை இவற்றின் குறிப் பிடத்தக்க அடையாளங்கள் ஆகும். கறுப்பு மினார்க்கா. மத்திய தரைக்கடல் மினார்க்கா தீவில் உற்பத்தியான இவை கருநிறம் கொண்டவை. பிளவுபட்ட சிவப்புக் கொண்டை, செவிமடல், சிலப்புத்தாடி, கருவெண் வெள்ளைச் கால்கள், சிவப்பு விழிகள் உடையவை. பெரியவையாயிருக்கும். முட்டைகள் இடும். முட்டைகள் இவையும் அதிகமாக ரோட் ஐலண்ட் சிவப்பு. அமெரிக்காவில் ரோட் தீவைத் தாயகமாகக் கொண்ட இவை சிவப்பு நிற முடையவை. பிளவுபட்ட சிவப்புக் கொண்டை, சிவப்புத்தாடி, சிவப்புச் செவிமடல், மஞ்சள் நிறக் கால்கள், மூக்கு உடையவை. முட்டையும் இறைச்சி யும் விரும்பி உண்ணப்படுபவை. வெளுப்புச் சசெக்ஸ். இங்கிலாந்து சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த இவை வெள்ளை நிறமுடை கழுத்திலும் இறகின் நுனிகளிலும் கருவரிகள் இருக்கும். முட்டையும் இறைச்சியும் மிகவும் விரும்பப்படுபவை. பாலை பிராமா, கொச்சின் சைனா ஆகியவை ஆசியக் கோழிகள். இவற்றிலிருந்து பல கலப்பினக் கோழிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன. வரிப் பிளைமவுத் ராக் கொச்சின் சைனா கோழிக் கும், அமெரிக்காவின் டாம்னிக் கோழிக்கும் பிறந்த இந்தக் கோழி சாம்பல் நிறமுடையது. வரிவரியாக வெள்ளைக் கோடுகள் இருக்கும். முட்டையும் இறைச்சியும் விரும்பி உண்ணப்படுபவை. ஆர்ஃபிங்ட்டன். இலை பெரும்பான்மையாகக் கனடாவிலும், அமெரிக்காவிலும் வளர்க்கப்படு ன்றன. கின் A பெயர் வான்கோழி. இது 'டர்க் டர்க்' என்று ஒலி யெழுப்புவதால் டர்கிக் என்று கோழி பெற்றது. இது அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. இப்பொழுது பல நாடுகளில் உள்ளது. முட்டைகள் பெரியவை. முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க 20-28 நாள்களாகும். கினிக்கோழி. இது ஆஃப்ரிக்காவைத் தாயக மாகக் கொண்டது. சாம்பல் நிறம், இறகுகளில் வெள்ளைப்புள்ளிகள் ஆகியன குறிப்பிடத்தக்க அடையாளங்கள். இறைச்சி மிகவும் சிறந்தது. கோழி நோய்கள் பொ துவாகக் கோழிப் பண்ணைகளிலோ, வீடு