கோழிகள் 617
இருக்கும். காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாள்களில் இறந்துவிடும். உயர் இனக் கோழிகளை இவை எளிதில் தாக்குவதால் வருமுன் காப்பது நன்று. கோழி டைஃபாய்டு, ஷிகெல்லா கேலினேரம் என்னும் நுண்ணுயிரியின் தாக்கத்தால் கோழிகளில் சோர்வு, பசியின்மை, கொண்டை தாடி வதங்கி வாடி, பச்சை, மஞ்சள் கலந்த கழிச்சல் கண்டு 4-10 நாள்களில் இறப்பு நேரும். நோய் கண்ட கோழி களைத் தனிப்படுத்திவிட்டால் நோய்த் தொற்றைக் குறைக்கலாம். சுவாசக்குழல் தொற்று நோய். வைரசால் உண்டாகும் இந்நோயால் அடிக்கடி இருமல், தும்மல் ஏற்பட்டுக் கண்களில் நீர் வழியும். மூச்சு இழுக்கவும் விடவும் துன்பப்படும். கபக்கட்டு உண்டாகி மூச்சுத் திணறல் ஏற்படும். நோய் வாராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும். ராணிக்கெட் நோய், இந்தியாவில் ராணிக்கெட் என்ற ஊரில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட் டதால் இப்பெயர் வந்தது. கோழிகளுக்கு வரும் இத்தொற்றுநோயால் தீங்கும் இழப்பும் மிகுதி, வைர சால் ஏற்படும் இந்நோய் விரைவில் ஏனைய கோழிகளுக்குப் பரவுகிறது. மிக வாத்துகள், குள்ள வாத்துகளைத் தவிர, பெரும் பாலான பறவைகள் இந்நோயால் தாக்கப்படுகின்றன. பறவையின் மலம், எச்சில், சளி ஆகியவை உணவையும் நீரையும் மாசாக்குவதால் விரைவில் ஏனையவற்றிற் கும் நோய் பரவுகிறது. நோய்க் கோழிகளை இனம் கண்டு உடனே பிரித்துவிட்டால் நோய் பரவுவதைத் தடுக்கலாம். நோய்க் கோழி சோர்வுற்று நிற்க முடி யாமல் தலையைச் சாய்த்துக் கொண்டிருக்கும். ஓட இயலாமல், தள்ளாடி நடக்கும். பசி எடுக்காது. செரிக்காது. மூச்சுவிடத் துன்பப்படும். அலகிலிருந்து கோழை வடியும். கொண்டையும் தாடியும் நீல் நிறமாகும். கால்கள், இறக்கைகள் உணர்ச்சியற்றுப் போகும். பேதியாகும். மலம் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் கெடுநாற்றமுடையதாக இருக்கும். இறந்து விடும். கோழிப் பண் ணையை அடிக்கடி நுண்ணுயிர்க் கொல்லிகள் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். ஊசி மருந் தைப் பனிக்கட்டியில் வைத்திருந்து போடுவது நல்லது. 4-5 நாள்களில் வளைந்த கழுத்து நோய். உணவில் நச்சு கலந்து விடுவதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நச்சு கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் என்னும் பாக்ட்டீரி யாவால் உண்டாகிறது. நோய் கண்ட கோழிகளின் கழுத்து, கால், இறக்கைத் தசைகள் பாதிக்கப்படு வதால், சரியாக நடக்க முடியாமலும் கழுத்தை நேராக வைத்துக் கொள்ள முடியாமலும் துன்பப் படும். கிளாஸ்ட்ரியம் பொட்டுவினம் A,C ஆகிய இருவகைகளால் கோழிகள் பாதிக்கப்படுகின்றன. கோழிகள் 617 வெள்ளைக் கழிச்சல் நோய். இந்நோய் சால்மொ னெல்லா புல்லோரம் என்னும் நுண்ணுயிரியால் உண்டாகிறது. பொதுவாகக் குஞ்சுகளே பெரிதும் தாக்கப்படுகின்றன. குஞ்சுகள் சோர்வடைந்து, கண் களை மூடியபடி குளிரால் துன்பப்படுவது போல் ஒலியெழுப்பும். மலம் வெண்மையாகப் பசை போன் றிருக்கும். பசியிருக்காது. நீரை மிகுதியாகக் குடிக்கும். நோய்கண்ட 12-24 மணி நேரத்தில் இறந்துவிடும். வயது வந்த கோழிகள் தாக்கப்பட்டால் முட்டையிடும் திறன் குறையும். முட்டைகள் மூலம் குஞ்சுகளுக்கும் நோய் பரவும். அடைகாக்கும் பெட்டி களில் நுண்ணுயிரிகள் தங்கினால் விரைவில் எல்லாக் கோழிகளுக்கும் பரவிவிடும். நோய் கண்ட கோழி களையும் குஞ்சுகளையும் கொன்று எரித்து விடுவ வதுடன் அடைகாக்கும் பெட்டியையும் பண்ணையை யும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பற்றாக்குறை நோய். கோழிகள் திட மாகவும். நலமாகவும் வளர்ந்து முட்டையிடும் திறன் உயர்நிலையில் இருக்க உணவில் வைட்டமின் கள் தேவை. இவை குறைந்தால் பற்றாக்குறை நோய் ஏற்படுகிறது. வைட்டமின் A குஞ்சுகளின் வளர்ச்சிக்கும் நோய்த் தடுப்புக்கும் பயன்படுகிறது. இது சரியான அளவில் இல்லாவிடில் உற்சாகம் குறைந்து குஞ்சுகள் நடக்க முடியாமல் தளர்ந்து விடும். இறகுகள் உலர்ந்துவிடும். வைட்டமின் D குறைவால் எலும்புத் தொடர்பான கணை நோய் ஏற்படுகிறது. கால்சியம் குறைவால் கோழிகள் தோல் முட்டை இடும். வைட்டமின் B குறைவால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுக் கால்கள், இறகுகள் இவற்றைப் பயன்படுத்த போகும். கழுத்து நரம்புகள் கவிழ்ந்தபடி இருக்கும். முடியாமல் பாதிப்பால் தலை ஸ்பைரோகிட்டோசிஸ், பொர்லீலியா கேவினோம் என்னும் ஒற்றைச்செல் உயிரியால் ஏற்படும் நோயால் கோழியின் இரத்தம் பாதிக்கப்படுகிறது. இவ்வுயிரி தக்கைத் திருகி போன்று உள்ளது. ஆர்காஸ் பெர்சிகஸ் என்ற உண்ணிகள் மூலம் ஒரு கோழியிலிருந்து ஏனைய கோழிகளுக்குப் பரவுகி கிறது. நோய்க்கோழியின் இரத்தத்தை உறிஞ்சிய உண்ணி 6 மாதம் வரை நோயைப் பரவச் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. சால்வர்சான், அடாக்சில், சல்ஃபார்சினால் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம். உண்ணிகள் மூலமே நோய் பரவுவதால் கேமாக்சின் போன்றவற்றாலும் உண்ணிகளை ஒழிக்கலாம். கு.சம்பத் நூலோதி. C.G. May and David Hawksworth, British Poultry Standard. Butterworth Scientific Publication, London, 1982.