பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 கோழிகளில்‌ புற ஒட்டுண்ணிகள்‌

620 கோழிகளில் புற ஒட்டுண்ணிகள் கூட்டமாக இடுகின்றன. இம்முட்டைகள் மூன்று வாரத்தில் பொரிந்து பேன்களாகிப் பல மாதங்கள் வாழ்ந்து ஆயிரக்கணக்கில் பெருகிவிடுகின்றன. பேன் பிடித்த கோழிகள் அவகினால் இறகுகளைக் கோதிக் கொண்டும் சுவர் மற்றும் தீவனத் தொட்டிகளில் உடலை உரசிக் கொண்டும் இருக்கும். உடற்பேன். இவை கோழிகளின் உடலில் மலப் புழைக்குக் கீழே பெருமளவில் காணப்படும். அப்பகுதி யில் ஏற்படும் அரிப்பின் காரணமாகக் கோழிகள் தம்மைத்தாமே கொத்திக் காயப்படுத்திக் கொள்வ துடன் காயத்தில் வெளிப்படும் இரத்தத்தைப் பார்த்த வுடன் பிற கோழிகளையும் கொத்த நேரிடும். இறகுக் காம்புப்பேன். இவ்வகைப் பேன்கள் இறகின் காம்புப் பகுதியில் பெரும்பான்மையாகக் காணப்படும். . தலைப்பேன். தலை மற்றும் கழுத்துப் பகுதி களில் காணப்படும். இளங் கோழிகளைப் பெரு மளவில் பாதிக்கும். உண்ணிகள் (mites) இரத்தம் உறிஞ்சும் வகையைச் சேர்ந்த உண்ணி கள் பகற்பொழுதில் கோழி வீடுகளின் மூலை முடுக்கு களில் ஒளிந்து இரவில் மட்டுமே கோழிகளைத் தாக் கும். காகங்கள், சிட்டுக்குருவிகள் ஆகியன கோழி வீடுகளில் இவ்வகை உண்ணிகளைப் பரவச் செய் கின்றன. இந்த உண்ணிகளால் கோழிகளுக்கு அரிப்பு, தூக்கமின்மை ஏற்பட்டு முட்டை உற்பத்தி குறை கிறது. மேலும் பெருமளவில் இரத்தம் உறிஞ்சப் படுவதால் இரத்தச் சோகை ஏற்பட்டு, குறிப்பாக இளங்கோழிகள் இறக்க நேரிடும். மருந்தின் பெயர் மாலத்தியான் 50% மாலத்தியான் 50% அல்லது சுமித்தியான் 50% சைத்தியான் 50% செவின் 50% கோரால் 25% கலவை முறை 21 கரண்டி மருந்தை 5 லி. நீரில் கலக்க வேண்டும் 25 மில்லியை 10லி. நீரில் கலக்க வேண்டும் வை வெப்ப மண்டலக் கோழி உண்ணிகள். கோழிகளின் உடல் முழுதும் காணப்படும். நன்றாக இரத்தம் உறிஞ்சும் தன்மை கொண்டவை. செதில் கால் உண்ணிகள். இவை கால் செதில் களின் அடிப்பகுதியில் புதைந்து காணப்படும். இவை தொடர்ந்து ஏற்படுத்தும் உறுத்தலால் செதில்களுக்கு அடியில் ஒருவித பழுப்பு நிற அழுகல் படிந்து கால்கள் வீக்கமுற்று முடத்தன்மை ஏற்படும். இறகு உதிர்க்கும் உண்ணிகள். தலை, கழுத்து மற்றும் வால்பகுதியில் பெருமளவில் காணப்படும். இறகின் காம்புப் பகுதியைத் தாக்கி அரிப்பை ஏற்படுத்தும். இதனால் கோழிகள் தங்கள் இறகு களையே அலகினால் கொத்திப் பிடுங்கிக் கொள்ளும். சில சமயங்களில் கோழிகளில் இறகில்லாமல் வெறும் தோலுடன் காணப்படும். வை உண்ணிகள் (ticks) கோழி வீட்டின் சுவர்கள், முட்டைச் சட்டிகள், மர இடுக்குகள் போன்றவற்றில் ஒளிந்து காணப்படும். முட்டைகள் வேனிற்காலத்தில் பத்து நாளிலும் குளிர் காலத்தில் மூன்று மாதங்களிலும் பொரிகின்றன. இவை கோழிகளைத் தாக்கி இரத் தத்தை உறிஞ்சுவதால் இரத்தச்சோகை ஏற்படுவ துடன் கோழிகள் மெலிதல், வளர்ச்சி குன்றுதல், முட்டை உற்பத்தி குறைதல் போன்ற கேடுகளும் விளைகின்றன. மேலும் மூட்டைப் பூச்சிகளின் எச்சில் மூலம் பரவும் ஒருவகை நச்சு கோழிகளுக்கு வாத நோயையும் ஏற்படுத்துகிறது. படுக்கை மூட்டைப்பூச்சி. இவை இரத்தத்தை உறிஞ்சுவதுடன் கோழிகளுக்கு ஸ்பைரோகீட் 500 மில்லியை 100 லி. நீரில் கலக்க வேண்டும். 4 கரண்டி மருந்தை 5 லி. நீரில் கலக்க வேண்டும் 3 சுரண்டி மருந்தை 5 வி. நீரில் கலக்க வேண்டும் குறிப்பு சுவர், கூரை,கூளத்தின் மேற்பரப்பு ஆகியவற்றில் 1000 ச. அடிக்கு 5 வி. என்ற விகிதத்தில் தெளித்தல் கோழிகளை மூழ்க வைத்தல் கோழிகளை மூழ்க வைத்தல் குறைந்த அழுத்தத் தெளிப்பான் மூலம் 500 கோழிகளுக்கு 5 லி. என்ற விகிதத்தில் தெளித்தல் 500 கோழிகளுக்கு 5லி. என்ற விகிதத் தில் தெளித்தல்