பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 கோழித்‌ தீவனம்‌

622 கோழித்தீவனம் கோழிப் பண்ணையில் குஞ்சுகள் விரைவாக வளரும் காலத்தில் குஞ்சுத் தீவனம் என்ற சிறப்புக் கலவையையும், உடல் வளர்ச்சிக் காலத்தில் எடை கூடுவதற்கு வேண்டிய சிறப்புத் தீவனத்தையும், முட்டையிடும் காலத்தில் எடையும் எண்ணிக்கையும் மிகுந்த முட்டை இடுவதற்கு வேண்டிய சிறப்புத் தீவனத்தையும் அளித்தல் மிகவும் இன்றியமை யாதது. 20 கோழிகளில் உடலியக்கம், செரிமானம், இரத்த ஓட்டம், சுவாசம் அனைத்துமே விரைவாக நடை பெறுகின்றன. பொதுவாக, கோழிகளின் உடல் வெப்பம் பிற பண்ணை விலங்குகளை விட 8-10°C இருக்கும். அதிகமாகவே வாரங்களுக்குள் கோழிகள் நன்கு வளர்ந்து முட்டையிடத் தொடங் கும்; முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு 35 கிராம் எடையுள்ள தாக இருந்தால் 8 வாரங்களுக்குள் 1.5 கி.கி. இருக்கும். வியப்பளிக்கும் இவ்வளர்ச் சிக்கு ஏற்ப செறிவு மிகுந்த சிறப்புத் தீவனத்தை அளித்தல் மிக முக்கியம். தீவனத்தில் சிறிது குறை ஏற்பட்டாலும் கோழிகளின் உடல் நலம் பாதிக்கப் படுவதுடன் முட்டை இறைச்சி உற்பத்தியும் குறையக்கூடும். கோழிகளுக்குப் பற்களிலில்லாமையால் தானி யங்களை அரைக்காமல் முழுமையாகவே அலகுகளால் பொறுக்கி விழுங்குகின்றன. கோழிகளின் வளர்ச் சிக்கும் முட்டையிடும் திறன் வளர்ச்சிக்கும் தேவை யான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவே அளிக்க வேண்டும். பொதுவாக எல்லா உயிரிகளுக்கும் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நீர், தாதுப்பொருள்கள். வைட்டமின்கள் ஆகியவை கோழித்தீவனத்தில் சிறந்த முறையில் இருந்தால் கோழிகளின் வளர்ச்சி, முட்டையிடும் திறன் போன்றவையும் நல்ல முறையிலிருக்கும். வளர்ச்சிக்குப் புரதமும், எரிசக்தி ஆற்றல்களுக்குக் கார்போஹைட்ரேட் கொழுப்புப் பொருளும், வளர்ச்சி சீரான உடலியக்கங்களுக்கு வைட்டமின் களும் தவை. உணவுப் பொருள்கள் செரிக்கப் பெற்று உட்கவரப்படுகின்றன. வேதியியல் மாற்றங் களின்போது ஏற்படும் ஆற்றல் கோழியின் உடல் வளச்சிக்கும், முட்டையிடுவதற்கும் பயன்படுகிறது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி எரி சக்தியும் ஒரு கிராம் கொழுப்பில் 9 கலோரிஆற்றலும் கிடை க்கின்ற றன. கார்போஹைட்ரேட்டின் அடிப்படைப் பிரிவில் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், கேலக்டோஸ் ஆகிய ஒரு நிலைச் சர்க்கரைப் பொருள்களும், லேக்டோஸ் என்னும் ம் ரு நிலைச் சர்க்கரைப் பொருள்களும் உள்ளன. கோழித்தீவனங்களில் ஸ்டார்ச் மிகையாக இருக்கும். கார்போஹைட்ரேட் கொழுப்புப் பொரு ளாக மாற்றப்பட்டு உடலின் தசைகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. முட்டை மஞ்சளிலுள்ள கொழுப்புச் சத்து, தீவனத்தில் மிகுதியான கார்போஹைட்ரேட் மூலமாக ஏற்படுகிறது. வை கொழுப்புப் பொருளின் அடிப்படைப் பிரிவில் கிளிசரால், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கொண்ட வேதி யில் கூட்டுப்பொருள்களாகும். ஆக்சிஜன் கார்போஹைட்ரேட்டில் உள்ளதை விடக் குறைவாக வும், ஹைட்ரஜன் அதிகமாகவும் இருப்பதால் கொழுப் புப் பொருளின் ஆற்றல் கார்போஹைட்ரேட்டில் இரு இருப்பதைப்போல மடங்குக்கு மேல் அதிக 2-5% மாகும். கோழித் தீவனத்தில் வரையில் கொழுப்புப் பொருள் இருக்கும். எளிதாகவும், மலி வாகவும் தாவர எண்ணெய்களில் கிடைப்பதால் முட்டையிடும் கோழிகளின் தீவனங்களில் இதைச் சேர்க்கிறார்கள். பொதுவாக, கோழியின் உடலில் வினோலிக் கொழுப்பு அமிலத்தைத் தவிர ஏனைய அனைத்துக் கொழுப்பு அமிலங்களும் தேவையான அளவு உண்டா கின்றன. எனவே கோழித்தீவனத்தில் தேவையான அளவு லினோலிக் அமிலம் சேர்க்க வேண்டும். வினோ லிக் அமிலக் குறைவால் குஞ்சுகள் வளர்ச்சி குன்றி, சுவாசப்பைத் தொடர்பான நோய்களால் பாதிக்கப் படும். முட்டையிடும் கோழிகள் உடல் நலம் குன்றிச் சிறு முட்டைகளையிடும். தீவனத்தில் சாளம், மக்காச்சோளம் சேர்ப்பதன் மூலம் இக்குறையை நிறைவு செய்யலாம். கோழியின் உடலில் 55-80% நீர் உள்ளது. சிறு குஞ்சுகளில் நீர்மேலும் மிகுதியாக இருக்கும். முட்டை யில் 60-65% உள்ளது. குஞ்சுகள் தாம் உண்ணும் ஒவ்வொரு கிராம் தீவனத்திற்கும் 2.5 கிராம் நீரும், முட்டையிடும் கோழிகள் உட்கொள்ளும் ஒவ் வொரு கிராம் தீவனத்திற்கும் 2 கிராம் நீரும் தேவைப்படும். கோழித் தீவனத்தில் 10% நீர் மட்டுமே இருப்பதால் கோழிகளின் வளர்ச்சியும் முட்டையிடும் திறனும் பெருகத் தேவையான தூய நீர் கொடுக்க வேண்டும். 100 கோழிகளுக்கு நாள் ஒன்றுக்கு 30-35 லி. நீர் தேவைப்படும். புரதத்தில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந்தகம் போன்ற தனிமங்கள் உள்ளன. புரதத்தின் அடிப்படைப் பொருள்கள் அமினோ அமிலங்களாகும். புரதத்தில் இருபதுக்கு மேற்பட்ட அமினோ அமிலங் கள் இருப்பினும் அவற்றில் 10 அமினோ அமிலங்கள் உடலுக்கு மிகவும் இன்றியமையாதவை, இவற்றை இன்றியமையா அமினோ அமிலங்கள் (essential amino acids) என்பர். சிறப்புத் தீவனமளிப்பதால் கிடைக் கும் முட்டை, இறைச்சி அனைத்தும் புரதம் செறிந்த உணவுப் பொருள்களாகும். 8 வார இறைச்சிக்கோழி