பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

623 கோழித்‌ தீவனம்‌

கோழித்தீவனம் 623 யின் உடலில் 65% உம், முட்டையில் 50% உம் புரதச்சத்து இருக்கும். இதனால் இறைச்சிக் குஞ்சுத் தீவனங்களில் 22-25% புரதமும், கோழித் தீவனங் களில் 16-18% புரதமும் இருக்க வேண்டும். உடல் வளர்ச்சிக்கும், அழிந்த திசுக்களைப் புதுப் பித்தலுக்கும் முட்டை உற்பத்திக்கும் புரதம் தேவை. தீவனத்திலுள்ள புரதத்தின் அளவுக்கேற்பவே குஞ்சு களின் வளர்ச்சியும் முட்டையிடும் திறனும் அமையும். குஞ்சுகளின் சீரான வளர்ச்சிக்கும், முட்டையிடும் திறன் அதிகரிப்புக்கும் தீவனத்தில் தாதுப் பொருள் கள் இருக்க வேண்டும். பொதுவாகத் தானியப் பொருள்களே தீவனத்தில் பெருமளவில் இருப்பதால் தாதுப்பொருள் கலவையைத் தீவனத்தில் சேர்க்க வேண்டும். கோழியின் உடலில் 4% உம், முட்டை யில் 10% உம் தாதுப்பொருள்கள் உள்ளன. முட்டை யில் 10% எடை, முட்டை ஓட்டிலுள்ள கால்சியம் கார்பனேட்டிலுள்ளது. கால்சியம், பாஸ்ஃபரஸ், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், குளோரின் போன்றவை தீவனத்தில் தேவை. கால்சியம் குஞ்சுத் தீவனத்தில் 1% உம், கோழித் தீவனத்தில் 2" உம். பாஸ்பரஸ் 0.6% உம், மக்னீசியம் 0.03-0.05% உம் இருக்க வேண்டும். பிற தாதுப்பொருள்களும் ஓரளவு இருக்க வேண்டும். கனிமப் பொருள்களான அயோடின், இரும்பு, மாங்கனீஸ், செம்பு, மாலிப்டினம், துத்த நாகம், செலினியம் ஆகியவை கிலோத் தீவனத்தில் மில்லிகிராம் அல்லது மைக்ரோகிராம் அளவிலிருக்க வேண்டும். இவையும் அளவோடு இருத்தல் நன்று. குறைந்தாலோ மிகுதியானாலோ கோழிகளின் நலம் பாதிக்கப்படும். பொதுவாக, கோழித் தீவனங்களைத் தானியங் களிலிருந்து தயாரிப்பதால் இவற்றில் வைட்டமின்கள் அதிகம் இரா. பிற கால்நடைகளைவிடக் கோழி களுக்கு அதிக அளவு வைட்டமின்கள் தேவைப்படு வதால், சிறப்பாக வைட்டமின் A, D, B, ரைபோ ஃபிளேவின் ஆகியவற்றைக் கோழித் தீவனத்தில் தகுந்த அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வளர தீவனத்தில் வைட்டமின் A அதிகமிருந்தாலும் முட்டையிலும் அதே வைட்டமின் அதிகமிருக்கும். வைட்டமின் A குறைந்தால் கோழிகளில் சுண்வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதுடன் முட்டையிடும் திறனும் குறையக்கூடும். எலும்புகள் சீராக வைட்டமின் D தேவை. சூரியஒளி, கோழிகளுக்குத் தேவையான வைட்டமின் D யை அளிக்கிறது. வைட்டமின் D பற்றாக்குறையால் குஞ்சுகளில் ரிக்கட்ஸ் என்னும் நோய் உண்டாக, எலும்பு வளர்ச்சி தடைப்படும். வளர்ந்த கோழிகளில் எ மென்மையாகவும் எளிதில் முறியக் கூடியதாகவும் இருக்கும். முட்டையிடும் திறன் குறைவதுடன் முட்டை ஓடு மெல்லியதாக இருக்கும். சில கோழிகள் எலும்பு முட்டைவாத (egg paralysis) நோயால் நிற்கவும் முடியாமல் துன்பப்படும். கோழிகளுக்கு மிகவும் தேவையான 127 வைட்டமின் B கலவை பசுந்தீவனங்களில் உள்ளது. து குறைந்தால் குஞ்சுகளின் வளர்ச்சியும் முட்டை யிடும் திறனும் குறையும். வைட்டமின் B கிலோத் தீவனத்திற்கு 15 மைக்ரோகிராம் அளவில் இருக்க வேண்டும். குறைந்தால் குஞ்சுகள் வளர்ச்சி குன்றும். இறகுகள் நன்கு வளரா. முட்டையிடும் திறன் குறையும். எல்லா வைட்டமின்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதால் கோழிப் பண்ணைகளில் இவற்றை நன்கு பயன்படுத்தி அதிக வருவாய் பெறலாம். கோழித்தீவனங்களால் கோழிகள் நன்கு வளர்ச்சி யுற்று அதிக முட்டையிடும் திறன் பெற்றாலும், சில வேளைகளில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளால் தாக்கமடையும். இதைத் தவிர்க்க உயிர்க்கொல்லி களைச் சிறு அளவில் சேர்த்தால் நோய்ப் பாது காப்புக் கிடைப்பதுடன் உடல் வளர்ச்சியும் அதிக மாகலாம். கோழித் தீவனங்களில் பொதுவாகச் சோளம், மக்காச்சோளம், சும்பு. தினை அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சர்க் கரைக் கழிவுப்பாகு. எள்ளுப்பிண்ணாக்கு, பாசி (குளோரெல்லா வல்காரிஸ்}, ஈஸ்ட், மீன்தூள், இறைச்சித்தூள் இரத்தத்தூள், பட்டுப்புழுக்கூடு முதலியவை சரியான விகிதத்தில் கலக்கப்படுகின்றன. இத்துடன் வெண்ணெய் எடுத்த பால், மோர், யான். குதிரைமசால் போன்ற பசுந்தீவனங்களும் கொடுக்கப்படுகின்றன. சிறுகுஞ்சுகளுக்கான தீவனக்கலவை 8 வார வயதுக் குஞ்சுகளுக்கு மக்காச்சோளம் கறை (21% புரதச்சத் துள்ளவை) 55% கடலைப்பிண்ணாக்கு அரிசி கோதுமைத்தவிடு மீன்தூள் 25% 13% 5% தாது உப்புக்கலவை 2% வற்றுடன், விடாபிளெண்ட் குறுநொய் (கிளாக்சோ ) 0.2 கிராம் டெர்ராமைசின் 5 1.9 கி 1 கி.கி. தீவனத்திற்கு