பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழைப்‌ பூசணங்கள்‌ 629

Thomas H. Macbride) என்பார் இவற்றிற்கு மிக் சோமைசெட்ஸ் என்னும் பெயர் தந்தார்.ஜி. டபிள்யூ. மார்ட்டின் (G.W. Martin) என்னும் அறிஞர் இவை புரோட்டோசோவா போன்ற முன்னோடிகளிலிருந்து தோன்றியவை எனக் கருதினார். இவை பூசணங்களே என உறுதிப்படுத்திய பிறகுதான் மிச்சோமைக் கோட்டினா என்னும் துணைப்பிரிவில் சேர்த்தார். மிக்சோமைசெட்ஸ் வகுப்பில் செரஷியோமிக் சோமைசெட்டிடே (ceratiomyxomycctidae), மிக்சோ கெஸ்ட்ரோமைசெட்டிடே (myxogastromycetidae) என்னும் இரண்டு துணை வகுப்புகள் உள்ளன. செரஷியோமிக்சோமைசெட்டிடேக்கு எக்சோஸ் போரியோ (exosporeae) என்ற பெயரும் உண்டு. இதில் சிதல்கள் வெளிப்பரப்பில் வெண்மையான தூள் போன்ற உறுப்புகளில் தாங்கப்படுகின்றன. இவற்றில் பூசணச் சிதல்களை மூடியிருக்கும் பெரிடியம் காணப்படுவதில்லை. இதில் பூசணச் சிதல் உறையுடன் இணைந்திருக்கும். செரஷியோ மிக்சோமைசெட்டிடே ஒரு சிறு துணை வகுப்பாகும். வரிசையிலுள்ள இதிலுள்ள செரஷியோமிக்சேல்ஸ் செரஷியோமிக்சேசி குடும்பத்தில் செரஷியோமிக்சா என்னும் பேரினம் ஒன்று உள்ளது. இப்பேரினத் திலுள்ள மூன்று சிற்றினங்களுள் செரஷியோமிக்கா புரூட்டிகுலோசா என்பது முக்கியமானது. உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற கோழைப்பூசணம் உறங்கு சிதல்களை {resting spares) உண்டாக்கும். மிக்சோமைசெட்டிடே துணை வகுப்பிற்கு மிக்சோகேஸ்டிர்ஸ் என்றும் பெயர் உண்டு. இதி சிதல்கள் நன்கு விரிவடைந்த சிதலகங்களில் உண்டாக்கப்படுகின்றன. இவற்றைப் பெரிடியம் முடியிருக்கும். சிதலகங்களில் கேப்பில்லிஷியம் என்னும் இழைகள் காணப்படும். சில சிற்றினங்களில் சிதலகக்காம்பு காணப்படுகின்றது. சிதல்கள் உண்டாகும் விதம், சிதல்களின் நிறம், சிதலகங்கள் உண்டாகும் விதம், சிதலசுத்தில் உள்ள சுண்ணாம்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இத்துணை வகுப்பில் லைசியேல்ஸ் (liceales), டிரை கியேல்ஸ் (trichiales), எக்கினோஸ்டீலியேல்ஸ் (echinostealiales). ஸ்டீமொனிட்டேல்ஸ் (stemoni_ tales), ஃபைசரேல்ஸ் (physarales) என்னும் ஐந்து வரிசைகள் உள்ளன. மூன்று லைசியேல்ஸ் சிதல்கள் மங்கலாக இருப்பது குறிப் பிடத்தக்கது. சிதலகங்களில் உண்மையான கேப்பில்லி ஷியம் இருப்பதில்லை. ஆனால் அவற்றில் போலி கேப்பில்விஷியம் (pseudoeapillitium) இருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம். இதில் குடும்பங்களிலுள்ள 10 பேரினங்களில் லைகோகேலா எபிடெண்ட்ரம் (Lycogala epidendrum), டியூபிஃபெரா பெர்ருஜினோசா (Tubifera ferruginosa), டிக்டிடியம் கேன்செல்லேட்டம் (Dietydium cancellatum) என்னும் சிற்றினங்கள் முக்கியமானவை. பூச கோழைப் பூசணங்கள் 629 டிரை கியே யேல்ஸ் சிதல்களும் மங்கலாகவே இருக் கின்றன. ஆனால் இதன் சிதலகத்தில் கேப்பில்லி ஷியம் என்னும் மலட்டிழைகள் நிறைந்திருக்கும். இதில் ஆர்கைரியா (Arcyria), டிரைகியா (Trichia). ஹெமிடிரைகியா (Hemitrichia) என்னும் பேரினங்கள் முக்கியமானவை. இவை பொதுவாக மரக்கட்டை களில் வளர்ந்திருப்பதைக் காணலாம். எக்கினோஸ் டீலியேல்ஸ் சிதல்கள் நிறமற்றோ, ரோஜா நிறமாகவோ பொன்னிறமாகவோ இருக்கும். சணச்சிதல் உறையின் இடைவெளியில் ஒழுங்கற்ற தடிப்புகள் காணப்படும். சிதலகங்கள் உற்பத்தி யாகும் இளம்பருவத்திலேயே பெரிடியம் மறைந்து விடும். எனவே முதிர்ந்த சிதலகத்தில் பெரிடியம் இருப்பதில்லை. இவற்றுள் இரண்டு சிற்றினங்களில் கேப்பில்லிஷியம் இருப்பதில்லை. மூன்றாவதில் கேப் பில்லிஷியம் சிறியதாகவும், நான்காம் சிற்றினத்தில் நன்கு வளர்ந்து சிறு வலை போன்று பின்னப்பட்டும் இருக்கும். இவை பட்டைகளின் மீது வளர்ந்திருக்கும். எக்கினோஸ்டீலியம் மைனூட்டம் (Echinostelium minuum) என்னும் சிற்றினம் இதில் குறிப்பிடத்தக்க தாகும். ஸ்டீமொனிட்டேல்ஸ் என்னும் பிரிவில் சுருமை நிறச் சிதல்கள் உற்பத்தியாகின்றன. பெரிடியம், கேப்பில்லிஷியம் ஆகியவற்றில் சுண்ணாம்பு இல்லை. கேப்பில்லிஷியம் எண்ணற்ற நூல் போன்றும் கறுத்தும் இருக்கும். இப்பிரிவில் உள்ள 12 பேரினங் களில் ஸ்டீமொனிட்டிஸ் (Stemonitis), கோமாடிரைகா (Comotricha). லாம்ப்ரோடெர்மா Vamproderma) என்னும் பேரினங்கள் முக்கியமானவையாகும். கோமாடிரை கா நைக்ரா உயிருள்ள மரங்களின் பட்டைகளில் வளர்ந்திருக்கும். பைசரேல்ஸ் பிரிவில் சிதலகத்தில் சுண்ணாம்புச் சத்து அடங்கியிருக்கும். ஃபைசரேம் (Physarum). ஃபியூவிகோ (Fuligo). பதாமியா (Badhamia), டிடெர்மா (Didarma). (Didymium) GT GOV LIGOT டிடிமியம் மிகவும் முக்கிய பானவை இவற்றுள் ஃபியுலிகோ செப்டிகா (F. septica) என்னும் கோழைப் பூசணம் புல்வெளி. மட்குந் தழை, செடி ஆகியவற்றின் மீது வளர்ந் திருக்கும். மிக்சோகேஸ்ட்ரோமைசெட்டிடேயில் தடை பெறும் வாழ்க்கை முறை விரிவானது. பூசணச் சிதல்கள் ஏற்ற சூழ்நிலைகளின்போது முளைத்து அவற்றில் ஒவ்வொன்றும் நீளிழைகளைக் கொண்ட ஒன்று முதல் நான்கு நீந்து செல்களை வெளிப் படுத்துகின்றன. ச்செல்கள் பாலினச் செல்கள் (gametes)போல், தான்றியவுடன் இரண்டிரண்டாக ணைந்துவிடுகின்றன அல்லது இவை தங்கள் இழைகளை இழந்து பலமுறை பிரிந்து பின்பு ணையலாம். கருச்சேர்க்கைக்குப் (karyogamy) பின்பு சைட்டோபிளாச ணைவு (plasmogamy) நடைபெறுகிறது. இவ்வாறு உருவாகிய கருவில்