கோள் இயற்பியல் 631
கோள் இயற்பியல் 631 பிளாசம் அனைத்தும் சிதலகங்கள் உற்பத்திக்குப் பயன்படுகின்றன. எனவே இனப்பெருக்க நிலையும் உடல்கூறு நிலையும் (somatic phase) ஒன்றாக இருப்ப தில்லை என விளங்கும். சிதல்கள் உண்டாக வெளிச்சம் இன்றியமையாதது. பிளாஸ்மோடியத்தின் பின் வளர்ச்சி நிலையில் வளர்தளத்தில் நியாசின், நியாசி னமைடு அல்லது டிரிப்ட்டஃபேன் ஆகியவை சிதல் கள் உண்டாக இன்றியமையாதவை. சிதலங்கள் சாம்பல், சாம்பல் கலந்த பச்சை அல்லது பொன் நிறமாக இருக்கும். வெளிச்சமும் வெப்ப நிலையும் நிறத்தை மாற்றும். யான மிக்சோகேஸ்ட்ரோமைக்செட்டிடேயில் 3 வகை சிதலகங்கள் உண்டாகின்றன. முதல் வகை யில் பிளாஸ்மோடியம் இருந்த இடத்தில் சிதலகங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு சிதலகமும் தனித் தனிப் பெரிடியத்தால் மூடப்பட்டிருக்கும். சிதல கங்களுக்கு அடியில் மெல்லிய செல்லஃபேன் போன்ற ஹைபோதால்லஸ் என்னும் அடிப்பகுதி இருக்கும். எல்லாச்சிதலகங்களுக்கும் இது பொதுவானது. இவ் வகைச் சிதலக அமைப்பை ஹைமிடிரைகா கிளா வேட்டா, ஃபைசாரம் குளோபுலிஃபெர்ரம் (physarum globuli ferrum) என்னும் கோழைப் பூசணங்களில் காணலாம்; ஒவ்வொரு சிதலகமும் தனித்தனியாகச் செயல்படும். இரண்டாம் வகைச் சிதலகத்திற்கு ஏத்தாலியம் என்று பெயர். இது அளவில் பெரியது யது. இங்கு, சிதலகங்கள் பல இணைத்து மெத்தை வடிவத்தை ஒத்திருக்கும். சிதலகங்கள் முழுதும் ஒரு பொதுப் பெரிடியத்தால் மூடப்பட்டிருக்கும். இவ்வகையைப் பலஃபியூலிகோசிற்றினங்களில் காணலாம். மூன்றாம் வகையான பிளாஸ்மோடியாகார்ப் என்னும் சிதல சுத்தை ஹெமிடிரைகா செர்புலா (hemitricha cherpula) என்னும் கோழைப்பூசணத்தில் காணலாம். இதன் சிதலகம் காம்பற்றது. பிளாஸ்மோடியா கார்ப் பிளாஸ்மோடியத்தின் கிளையுற்ற நிலையைப் பெற்றுள்ளது.புரோட்டோப்பிளாசம், நரம்பு போன்ற கிளைப்பகுதிகள் அடர்த்தியடைந்து பின்னர் ஒன்றைச் சுரந்து சிதலகங்களை உண்டாக்கும். நான்கு வகையான சிதலக அமைப்புகளைப்படம்-1இல் தெளிவாகக் காணலாம். உறை சிதலகங்கள் காம்புடனோ காம்பில்லாமலோ இருக்கும். சிதலகக் காம்புகளின் நிறம், தடிப்பு, நிலைப்பேறுள்ள தன்மை (consistency) அமைப்பு முதலியவை சிற்றினங்களுக்கு ஏற்ப LOFT றுபடும். தலகக் காம்பு (columella) சிதலகத்தினுள் தொடர் கிறது. சில சாம்பற்ற சிதலகங்களிலும் காம்பு காணப்படுகிறது. மிக்கோமைசெட்ஸ் வகைப்பாட்டில், கேட்பில்லி ஷியம் இருப்பதும் இல்லாததும் முக்கியமாகும். உயிரற்ற, மயிர் போன்ற மலட்டு உறுப்புகளுக்குக் மிக்சோமைசெட்ஸ் படம் 1 வகுப்பில் உள்ள நான்கு வகைச் சிதலக அமைப்புகள் ஸ்டீமோனிட்டிஸ் . டிக்டிடியம், ஆர்கைரியாக ஃபைசேரம் கேப்பில்லிஷியங்கள் என்று பெயர். இவை ஒன்று டன் ஒன்று இணைந்து வலை போன்ற அமைப்பை உண்டாக்குகின்றன. இவை பெரிடியத்துடனோ சிதலகக் காம்புடனோ ணைந்திருக்கும். கேப்பில்லி ஷியங்களின் மயிர் போன்ற இழைகள் கிளைத்தோ. கிளைக்காமலோ இருக்கும். கேப்பில்லிஷியங்கள் சிதல் களின் வெளியேற்றத்திற்கு உதவுகின்றன. பெரிடியம் உடைபட்டதும் இவற்றுடன் சிதல்கள் சிதலகத்தி லிருந்து சற்று உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுக் காற்றின் உதவியால் பரவுகின்றன. வ்வமைப்பை ஆர்கைரியா நியூட்டன்ஸ் (A. mulans), ஹெமிடிரை கியா வெஸ்பேரியம் (hemitrichia vesparium) என்னும் கோழைப்பூசணங்களில் காணலாம். கோ. அர்ச்சுணன் நூலோதி. B. S. Mehrotra, The Fungi - An Introduction, Oxford and IBH Publishing Company, New Delhi, 1980. கோள் இயற்பியல் சூரிய மண்டலத்தில் அடங்கியுள்ள கோள்களின் கட்டமைப்பு, கூட்டமைப்பு, இயற்பியல் வேதியியல்