636 கோள் இயற்பியல்
636 கோள் இயற்பியல் இரும்பைப் போன்ற பண்புகளைப் பெற்றிருப்பதால் அதுவும் உள்ளகத்தில் போதுமான அளவில் இருக்க வாய்ப்புண்டு. வை நடு உறை, இயற்கையில் நிறை அளவில் காணப் படுகிற சிலிகேட்டு உவோக ஆக்சைடுகளாலும் களாலும் ஆனது. உயர் அழுத்தங்களுக்கு ஆட்படும்போது இவற்றில் பலநிலை மாற்றங்கள் ஏற்படும். நடு உறையில் ஆழம் அதிகரிக்கும்போது அடர்த்தி அதிகரிப்பதற்கு இந்நிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். குறைந்த உருகுநிலையும் அடர்த்தியும் கொண்ட சுனிமங்கள் இயற்கையாகத் தனித்தனியே பிரிந்து பரவியுள்ளன. இவை எளிதில் உருகிப் புவியின் மேலோட்டில் உள்ள விரிசல்கள் அல்லது துளைகள் வழியாக மேற்பரப்புக்கு வந்துவிடும். தனால் புவியின் மேலோட்டில் இத்தகைய கனிமங்கள் பெரு மளவில் காணப்படுகின்றன. புவி. இது ஒரு பெரும் இயக்கத் தன்மையுள்ள கோள். தன் முனைகள் வியப்பூட்டும் வகையில் பலமுறை டம் பெயர்த்துள்ளன. கண்டத்திட்டு களே ஓரிடத்திலிருந்து வேற்றிடங்களுக்கு நகர்ந்து சென்றுள்ளன. புவியின் பெரும் நிறையும், அதன் உட்பகுதிகள் பெரும் சூடான நிலையில் இளகியிருப் பதும் கண்டத் திட்டுகள் எளிதாக நகர உதவி யுள்ளன. கால் நில டை வெள்ளி, சூரிய மண்டவத்தில் புவியை அடுத்து மிகு நிறையுடையது வெள்ளி, இது புவியின் நிறை யில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட நிறையுடையது. வளி மண்டலம் மிகவும் அடர்த்தியானது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை, புலியை விடப் பன்மடங்கு மிகுதி. இங்கு இறக்கப்படும் கோளாய்வுக் கலங்கள் நீண்ட நேரத்திற்குச் செயல்படா. வெள்ளியின் உட்பகுதியை ஆராய்வதற்குத் தேவையான அதிர்வுப் பதிவுகளை எடுக்க நீண்ட வெளி தேவை. இதன் காரணமாக இதன் உட்பகுதி யைப் பற்றி ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. வெள்ளியின் உட்பகு புவியைப் போலவே உள்ளகம், நடு உறை, மேலோடு ஆகியவற்றைக் கொண்டது. வெள்ளியைச் சுற்றி வந்த பயனீர் விண்கலத்தி லிருந்து ராடார் உயர அளவி, வெள்ளியின் மேற் பரப்பில் சில பெரிய மேடுகளும் பள்ளங்களும் உள்ள மையைச் சுட்டும். அங்கு, கண்டத் தகடுகள் நகரு வதை இவை சுட்டிக் காட்டுகின்றன. அங்கு, சில பெரிய வட்டப் பள்ளங்கள் உள்ளனவாகவும் மேல் பரப்பில் மாற்றங்கள் காலநிலையால் மெதுவாக நடைபெறுமெனவும் அறியமுடிகிறது. வெள்ளியின் மேலோட்டுப் பகுதியில் கண்டத் தகடுகள் நகர்கின்ற வேகங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை. செவ்வாய். செவ்வாய், புவியைப் போலப் பத்தில் ஒரு பங்கு நிறையே கொண்டதால் அதன் உட் எனவே செவ்வாயின் கந்தகம் போன்ற பகுதியின் அமைப்பு, புவியின் உட்பகுதி அமைப்பி லிருந்து ஓரளவு வேறுபட்டிருக்கும் எனத் தோன்று கிறது. செவ்வாயின் உள்ளகத்துக்கும் நடு உறைக்கு மிடையிலான அடர்த்தி வேறுபாடு, மிகக் குறை வேண்டும். வாகவே இருக்க உள்ளகத்தில் இருக்கக்கூடிய லேசான தனிமங்களின் அளவு புவியின் உள்ளகத்தில் இருப்பதை விட அதிகமான விகிதத்தில் இருப்பதாக ஊகிக்க முடிகிறது. செவ்வாய் புவியை விடச் சிறிய தாகையால் அதில் ஆழத்துடன் வெப்பநிலை அதிகரிக்கிற பாங்கு, புவியில் இருப்பதை விடக் குறைவாகவே இருக்கும். எனவே செவ்வாயின் மேல் ஓடும், வெளிப்புற நடு உறையும் புவியிலுள்ளவற்றை விட உறுதி பெற்றவை. செவ்வாயில் கண்டத்தகடுகள் பெரிய அளவில் நகர்ந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அங்கு, கண்டத் தகடுகளின் நகர்வு செவ் வாயின் வரலாற்றில் பெரும் பங்கு பெறுகிறது. ஏனெனில் செவ்வாயை இரண்டு அரைக் கோளங் களாகப் பிரித்துப் பார்க்கும்போது அவற்றில் ஒன்று பெருமளவு தொன்மையான, பலவகை வட்டப் பள்ளங்கள் நிறைந்த பரப்புடையதாகவும் ஏனையது மிகவும் இளமையாக, குறைந்த எண்ணிக்கையான வட்டப் பள்ளங்கள் நிறைந்த பரப்புள்ளதாகவும் காணப்படும். செவ்வாயின் வளி மண்டலம் அடர்த்தி குறைந்தது. எனவே அதன் மேல் மோதவரும் நிறை மிக்க பொருள்களை அது பெரிதும் தடை செய்வ தில்லை. செவ்வாயைப் போன்ற ஒரு கோளிலுள்ள வட்டக் குழிகளின் எண்ணிக்கைச் செறிவு, திறந்த மேற்பரப்புகளின் வயதைக் குறிப்பிடக்கூடிய ஓர் அளவாகும். சூரியக் குடும்பத்தின் உட்புறக் கோள்கள் தோன்றிய பிறகு முதல் சில நூறு மில்லியன் ஆண்டு களில் அவற்றில் விழுந்த எரி கற்களின் எண்ணிக்கை மிக விரைவாகக் குறைந்தது. எனவே எரிகற்கள் வந்து மோதியதால் ஏற்பட்ட வட்டக் குழிகளின் எண்ணிக்கையிலிருந்து மேல் பரப்பு கோள்களின் களின் வயது வேறுபாட்டைப் பல வேளைகளில் மதிப்பிடமுடியும். புதன். இது செவ்வாயின் நிறையில் சுமார் பாதியளவேயுள்ளது. ஆனால் அதற்குப் பல தனிப் பட்ட கோளியல் பண்புகள் உண்டு. அதன் சராசரி அடர்த்தி மிகவும் அதிகம். எனவே அதன் உள்ளகம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் எனவும் அதன் பெரும்பகுதி உலோக நிலை இரும்பால் ஆனதாக வேண்டும் என்பதும் தெளிவு. புதன் பரப்பில் விரி வான கண்டத்தகட்டு இயக்கங்கள் நடைபெற் றுள்ளன. ஆயினும் அதில் ஆழத்துடன் வெப்ப நிலை உயரும் தன்மை மிகவும் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. எனவே அதன் மேவோடும், நடு