638 கோள் இயற்பியல்
638 கோள் இயற்பியல் முடியாமையால் டைட்டானின் மேற் பரப்பில் மேடு பள்ள அமைப்புகளைக் கண்டறிய முடியவில்லை. கடல்கள். வியாழனின் கலீலியன் துணைக் கோளைத் தவிர,புவியில் மட்டுமே கடல்கள் உள்ளன. சூரிய மண்டலத்தின் வேறெந்தக் கோளிலும் சுடல் கள் இல்லை. செவ்வாயின் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருப்பதால் அதில் நீர்ம நிலையில் தேவை யான நீர் இருக்க முடியாது. ஆயினும் அதன் மேற் பரப்பில் குறுகிய காலங்களுக்கேனும் பல கால்வாய் களின் வழியாக நீர் ஓடியிருப்பதைக் காட்டுகிற அமைப்புகள் உள்ளன. செவ்வாயின் துருவப் பகுதி களில் நீர் உறை பனி குவிந்துள்ளது. வெள்ளியின் வெப்ப நிலை மிகவும் அதிகம். எனவே அதிலும் நீர் நீர்ம நிலையில் இருக்க முடியாது. வெள்ளியின் வளி மண்டலத்தில் நீராவி அதிகமில்லை. எனவே கடந்த காலத்தில் ஒரு போதும் வெள்ளியில் நீர் இருக்க வழியில்லை. அல்லது ஏதோ ஒரு செயல் முறையின் மூலம் அதிலுள்ள நீரின் பெரும் பகுதி வெளியேற்றப் பட்டுமிருக்கலாம். புதனிலும் சந்திரனிலும் சிறிதளவும் நீர் ல்லை. புவிக் கடல்களுக்குள் சிக்கல் மிக்க நீரோட்டங் களும் இயக்கங்களும் நடைபெறுகின்றன. பெரும் பாலான நீரோட்டங்கள் கடல்களின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையான அடர்த்தி வேறுபாட்டால் தோன்றுபவை. இந்த அடர்த்தி வேறுபாடுகள் கடல் நீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு வேறுபடுவதால் உண்டாகின்றன. கடல் நீர் ஆவியாவதால் உப்புச் செறிவில் ஓரளவு உயர்வு ஏற்படுகிறது. நிலத்தில் பெய்யும் மழை. ஆறுகளாக ஓடிக் கடலில் கலக்கு மிடங்களில் உப்புச் செறிவு பெரிதும் குறைகிறது. கடல் நீர் பனிக் கட்டியாக உறையும்போது கடலின் நீர்ப் பகுதியில் உப்புச் செறிவு மிகுதியாகிறது. கடல் நீரில் வெப்பநிலை வேறுபாடுகளிருப்ப தாலும் பேரளவிலான நீரோட்டங்கள் தோன்று கின்றன. புவியின் நடுக்கோட்டுப் பகுதிகளில் கடல் நீர் சூரிய வெப்பத்தால் வெப்பநிலை வேறுபாடு களைத் தோற்றுவிக்கிறது. நில நடுக்கோட்டுப் பகுதி களிலிருந்து துருவ முனைகளை நோக்கி வெப்பத்தைச் செலுத்துவதில் கடல் நீரோட்டங்கள் முதன்மையான பங்கு கொள்கின்றன. வனிமண்டலம். கோள்களின் வளிமண்டலங் களின் சுட்டமைப்புகளும் இயக்கத்தன்மைகளும் சில குறிப்பிட்ட பொதுத்தத்துவங்களின் ஆளுகைக்குட் பட்டவை. பெரும்பாலான கோள்களின் வளி மண்டலங்கள் சூரியனிடமிருந்தே பெருமளவு வெப் பத்தைப் பெறுகின்றன. பெரும்பாலான வளி மண்ட லங்களில் உறைந்த துகள் மேகங்கள் அமைந்துள்ளன. இவை ஓரளவு வெப்பத்தை எதிரொளித்து விண் வெளிக்குத் திருப்பியனுப்புகின்றன. எனவே இது, அந்தப் பகுதி வளி மண்டலத்தைச் சூடாக்குவதில் பங்கு கொள்ளாது. எஞ்சிய வெப்பம் வளிமண்டலத் தால் உட்சுவரப்படுகிறது அல்லது தரையை நோக்கிக் கடத்தப்படவோ சிதறடிக்கப்படவோ செய்கிறது. தரையும் அந்த வெப்பத்தை உட்கவர்கிறது. தரை உட்கவரும் வெப்பத்தில் ஒரு பகுதி மீண்டும் வளி மண்டலத்தை நோக்கிக் கதிர் வடிவில் வீசப்படும். இது வளிமண்டலத்திலுள்ள வெப்பத்தின் அளவை மேலும் அதிகரிக்கிறது. இந்த விளைவுக்குத் தாவர வீட்டு விளைவு (green house effect) என்று பெயரிடப் பட்டுள்ளது. கோளின் மேற்பரப்பு வெப்பநிலை,சூரியனிலிருந்து உள்ள தொலைவையும் அதன் வளி மண்டலப் பண்பையும் பொறுத்தமையும். ஆனால் வெள்ளியின் வளி மண்டலம் புவியை விட மிகுதியாக உள்ளது. இதற்கு அது சூரியனை நெருங்கியிருப்பது மட்டுமே காரணமாகாது. அங்கு, பசுங்குடில் விளைவு முனைப்புடன் செயல்படுவதே காரணம் வெள்ளியின் அடர்த்திமிக்க வளி மண்டலத்தின் ஊடாக வெயில் நுழைந்து அதன் மேற்பரப்பில் பரவுகிறது. ஆகலாம். வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை மட்டுமே வளிமண்டலங் கொண்ட பாறைக் கோள்கள். செவ்வாய், வெள்ளி ஆகியவற்றின் வளி மண்டலங் கனில் கார்பன் டைஆக்சைடு பெரும்பான்மையாக உள்ளது. புவியிலுள்ள கார்பனேட் பாறைகளிலிருக் கும் எல்லாக் கார்பன் டைஆக்சைடையும் வெளி யேற்றினால் அதன் வளிமண்டலத்திலும் அவ்வளிமம் பெருகிவிடும். ஆகவே புவி, வெள்ளி ஆகியவற்றின் கார்பனேட் பாறைகளை உருவாக்கும் திறமையில் உள்ள வேறுபாடு காரணமாகவே அவற்றின் மண்டலங்களில் கார்பன் டை ஆக்சைடின் அளவு வேறுபட்டுள்ளது. இத்திறமை வெப்ப நிலையைப் பொறுத்தது. வளி வெள்ளியில் உள்ள கார்பனேட் பாறைகள் உயர்ந்த வெப்ப நிலை காரணமாகச் சிதைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி வளி மண்ட லத்தில் கலந்துவிடுகின்றன. புவியைப் பொறுத்த வரை நீர் கார்பன் டைஆக்சைடிலிருந்து கார்பனேட் பாறைகளை உருவாக்குவதில் பெரும்பங்கு கொள் கிறது. செவ்வாயில் இவ்வாறு செய்யுமளவிற்குப் போதுமான நீர் நீர்ம நிலையில் இல்லை. யில் கார்பனேட் பாறைகளும் தேவையான இல்லை. செல்வா அளவில் செவ்வாய். வெள்ளி ஆகியவற்றின் வளி மண்டலங்களில் கார்பன் டை, ஆக்சைடிற்கு அடுத்து நைட்ரஜன் மிகு அளவில் உள்ளது. புவியின் வளிமண்ட லத்தில் 78% நைட்ரஜன் உள்ளது. அடுத்து ஆக்சிஜன் 20.95% உள்ளது. புவியில் உள்ள உயிரினங் களின் செயல்பாடுகள் காரணமாகவே இந்த அளவில் ஆக்சிஜன் பேணப்படுகிறது. வளிமண்டலத்தில் மிகுதி