கோள்கள் 639
கோள்கள் 639 யாக ஆக்சிஜன் இருக்கக்கூடிய எந்த ஒரு கோளி லும் பல உயிரினங்கள் பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. பாறைக் கோள்களின் வளிமண்டலங்களில் வெப்பச் சலனம் அழுத்த வேறுபாடு காற்றோட்டங் களின் காரணமாகவும் வளிமங்கள் நன்கு கலந் துள்ளன. வளி மண்டலத்தின் உயரங்களில் இவ்வளவு முழுமையான கலக்கல் ஏற்பட முடியாது. அங்கு நிறையீர்ப்புக் காரணமாக வெவ்வேறு வளிமங்கள் படலம் படலமாகப் பிரிந்துள்ளன. லேசான வளிமங்கள், மேல் படலங்களில் திரண்டு விடுகின்றன. இவ்வுயரங்களில் சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர் கள் விரிவான அளவில் அயனியாக்கத்தை ஏற்படுத்தி வளி மண்டலத்தின் மேல் பகுதிகளில் பிளாஸ்மா நிரம்பிய அயனிக்கோளம் (ionosphere) என்ற படலத்தை உருவாக்கிவிடுகின்றன. பெரும் உயரங் களில் மூலக்கூறுகள் பெரும் வேகத்துடன் தன்னிச்சை யாகத் திரிகின்றன. அப்பகுதி எக்சோஸ்பியர்' (exosphere) எனப்படுகிறது. கள் தத்துவங் இதே இயற்பியல், ஒளி வேதியியல் பெருங் கோள்களின் வளி மண்டலங்களிலும் நடைபெறமுடியும். ஆனால் அவை செயல்படும் விதங்கள் வேறாகும். ஏனெனில் அவற்றின் வளி மண்டலங்களில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் ஆகிய வளிமங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றின் வளி மண்டலத் தாழ்வான பகுதிகளில் ஓரளவு அம்மோனியா உருவாகிறது. அது அம்மோனியா மேகப்படலமாக அமைகிறது. அதனுடன் சிறிதளவு ஹைட்ரஜன் சல்ஃபைடு கலந்து ஒரு சேர்மமாக மாறும். மேலும் கீழான உயரங்களில் நீராவி மேகங் கள் இருக்கக்கூடும். பெருங் கோளங்கள் வேகமாகச் சுழலுவதால் வளி மண்டலத்தின் வளிமங்கள் கோளின் குறுக்குக் கோடுகளுக்கு இணையான பட்டைகளாகப் பிரிந்து அமைகின்றன. ஏனெனில் வளிமண்டலத்திற்குள்ளான வெப்பச் சலன இயக்கங்கள் அகலாங்கிற்குக் குறுக் காகத் துகள்களைக் கடத்த விடாமல் கோரியாலிஸ் விசைகள் இடையூறு செய்கின்றன. காந்தக்கோளம். வலிவான சில கோள்களைச் சுற்றி காந்தப் புலங்கள் உள்ளன. ஏனைய வற்றில் காந்தப் புலம் இல்லை. சூரிய மண்டலத்தின் உட்புறக் கோள்களில் புலியின் காந்தப் புலம் அதிக வலிவுள்ளதாயும், புதனின் காந்தப் புலம் வலிமை குறைந்ததாயும் உள்ளது. வெள்ளிக்கும் செவ்வாய்க் கும் காந்தப் புலங்கள் உள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. அவற்றின் உள்ளார்ந்த காந்தப் புலங்கள் மிகவும் வலிமை குறைந்தவையாக இருக் கலாம். வியாழனுக்கும் வலிமை சனிக்கும் மிகு காந்தப் புலங்கள் உண்டு. கோள்களில் காந்தப் புலங்கள் தோன்றுவதற்கு அவற்றின் சுழற்சி, மின் கடத்துந் திறன் கொண்ட வெப்பச் சலன இயக்கமுள்ள ஓர் உட்புறப் படலம் ஆகியவற்றின் கூட்டு விளைவு காரணமாக இருக் கலாம். புவியின் உள்ளகத்தில் இத்தகைய சூழ்நிலை கள் உள்ளன. வியாழன், சனி ஆகியவற்றின் உலோக நிலை, ஹைட்ரஜனாலான நடு உறைகள் ஆகியன இத்தகைய சூழ்நிலைகளை உண்டாக்கக்கூடும். காந்தக் கோளங்கள் விண்வெளியிலிருந்து வரும் ஆற்றல் மிக்க துகள்களைப் பிடித்துத் தக்க வைப்பது ஒரு முக்கியமான நிலையாகும். இதன் காரணமாகப் புவியின் காந்தப் புலத்திற்குள் பல வகை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் வியாழன் காந்தக் கோளத் தில் ஏற்படுகிற இத்தகைய நிகழ்வுகளை ஆய்வு செய்ய அனுப்பப்படுகிற கோளாய்வுக் கருவிகளை அங்குள்ள வலிமைமிக்க சுதிர் வீச்சுகள் மிகக்குறுகிய காலத்திற்குள் அழித்து விடுவதால், அத்தகைய நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள கொள்ள முடிய வில்லை. கோள்கள் கே.என். ராமச்சந்திரன் வான ஆராய்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக் கவனித்து வந்த முன்னோர், விண்மீன் போன்று தோற்றமளித்த, நிலையற்ற சில, இயக்கம் பெற்றுள்ளமையைக் கண்டறிந்தனர். இவற்றைக் கிரேக்கர், அலைவன என்னும் பொருளில் planets என்றனர். இவற்றைக் கிரகங்கள் என்றும், கோள் கள் என்றும் குறிப்பிடலாம். கோள் என்னும் சொல் விண்மீன்களைச் சுற்றி, குறிப்பாகச் சூரியனைச் சுற்றி வலம் வரும் அளவில் சிறிய, திண்ம விண் பொருள்களையே குறிக்கும். புவியைத் தவிர எட்டுக்கோள்கள் உள்ளன. சூரியனி விருந்து தொலைவுக்கு ஏற்ற வரிசையில் ஒன்பது கோள்கள் பின்வருமாறு அமைந்துள்ளன. அவை 1. புதன் (Mercury) 2. வெள்ளி Venus) 3. புவி (Earth) 4. செவ்வாய் (Mars) 5. வியாழன் (Jupiter) 6.சனி (Saturn) 7. யுரேனஸ் (Uranus) 8. நெப்டியூன் (Neptune) 9. புளூட்டோ (Pluto) என்பன. மேலும் சிறு கோள்கள் செவ்வாய், வியாழன் வலம் வரும் பாதைகளுக்கு இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றைச் சிறு கோள் திரள் (asteriods) என்பர். இவை ஓரிரு கோள் களின் சிதைவால் தோன்றியவை. ஏறக்குறைய 1600 கோள்களின் பிறப்பு. அண்டங்களின் (galaxies) துகளும், வளிமமும் சேர்ந்த மேகமொன்று குலையும்