பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோள்கள்‌ 641

கோள்கள் 641 கோள்களின் இயக்கம். சூரியனை வலம் வரும் கோள்களின் இயக்கத்தை ஆராய்ந்த கெப்ளர் பின் வரும் விதிகளை வரையறுத்தார். ஒரு குவியத்தில் (focus) சூரியனைக் கொண்டு கோள்கள் நீள்வட்டப் பாதைகளில் (elliptic paths) யங்குகின்றன. சூரியனையும் கோள்களையும் ணைக்கும் நேர்கோடு சமநேரத்தில் சமபரப்பைக் கடந்து சுழலும். கோளின் ஒரு முழுச் சுற்றுக்கான காலத்தின் இருபடியும், கோள் சூரியனிலிருந்து அமைந்த சராசரி தொலைவின் முப்படியும் நேர் விகிதத்தில் அமையும். கெப்ளரின் மூன்று விதிகளும் பொது ஈர்ப்பு விதியின் (law of gravitation ) விளைவுகளே என்பதை நியூட்டன் நிறுவினார். சூரியனைச் சுற்றிப் புவி வலம் வரும் பாதைத் தளத்தை ஒட்டியே பிற கோள் களின் வலம் வரும் பாதைகளும் அமைந்துள்ளன. புளூட்டோவின் செல்வழித் தளம் புவியின் செல் வழித் தளத்துக்கு 17° சாய்விலும் புதன் 7°சாய் விலும் அமைந்துள்ளன. ஏனையவை 34° சாய்வுக்கு உட்பட்ட செல்வழித் தளங்களைக் கொண்டுள்ளன. கோள்கள் யாவும் சூரியனை டஞ்சுழியாகச் (counter clockwise) சுற்றுகின்றன. . கோள்களின் வகையும் காட்சியும். சூரியனுக்கும் புவிக்கும் இடையே சுற்றும் புதன், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் உள்ளிடைக் கோள்கள் (inferior planets) எனப்படும். புவிக்குப் புறம்பாகச் சுற்றும் பிற கோள்கள் புறக் கோள்கள் (superior planets) எனப் படும். மேலும் ஒரு வகையில் கோள்களை வகைப்படுத் தலும் உண்டு. அளவிலும், இயற்பியல் - வேதியியல் பண்புகளிலும் புதன், வெள்ளி, செவ்வாய், புவி ஆகியன சிறு கோள்கள் (minor planets) என்றும் புவி சார் கோள்கள் (terrestrial planets) என்றும் குறிப் பிடப்படுகின்றன. ஆவிநிலையில், செறிவு குறைந்த ஏனைய பெரிய கோள்களான வியாழன், சனி, நெப் டியூன், யுரேனஸ், புளூட்டோ ஆகியன பெருங்கோள் கள் (major planets or jovian planets) எனப்படும். புவி மற்றும் கோள்கள் தம் வழியில் சுழலும்போது ஒன்றிலிருந்து பிறவற்றை நோக்கப் பல நிலைகளை மேற்கொண்டு அமைகின்றன. புவியிலிருந்து நோக்கச் சூரியனும் கோளும் அமையும் கோடுகளுக்கு இடையே உள்ள கோணம் விலக்கம் (elongation) எனப்படும். விலக்கம் மாறுதலடைந்து கொண்டே இருக்கும். புவி யிலிருந்து காணும்போது கோளும் சூரியனும் ஒரே திசையில் நேர்கோட்டில் அமைந்தால் ஒரே திசை நிலை (conjunction) என்றும், அவை எதிரெதிர்த் திசையில் நேர்கோட்டில் அமைந்தால் எதிர்த்திசை நிலை (opposition) என்றும் குறிப்பிடப்படும். ஒரு திசை நிலையிலும் இருவகை உண்டு. புவி, கோள். சூரியன் என்னும் வரிசையில் அமையின் கோள் ஒரு திசை அண்மை நிலையில் (inferior conjunction) அமைவதாகவும், புவி, சூரியன், கோள் என்னும் வரிசையில் அமையின் கோள் ஒரு திசைச் சேய்மை நிலையில் (superior conjunction) அமைவ தாகவும் கூறப்படும். சிறு கோள்களுக்கு எ திர்த் திசை நிலை இருக்க முடியாது. பெருங்கோள்களுக்கு ஒரு திசைநிலை அண்மை இருக்க முடியாது. மேற் கோள்கள் யாவும் சூரியனிடமிருந்து வெப்பத்தை யும் ஒளியையும் பெறுகின்றன. அவற்றின் புறம் சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. எனவே கோள்கள் யாவும் ஒரு நேரத்தில் பாதி சூரிய ஒளியிலும் மறுபாதி இருளிலும் உள்ளன. ஆனால் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் பாதிமுகம் முற்றிலும் பார்வைக்கு உட்பட்டதாக அமைய வேண்டிய தில்லை. எனவே திங்களின் பிறைகளைப் போன்று, காட்சி நிலைக்கேற்றவாறு கோள்களின் பிறைகளை யும் பல நிலைகளில் காணவாம். பொதுவாக ளிடைக் கோள்களின் முழுப்பிறையான கோலத்தைக் காண இயலாதவாறு சூரியன் ஒளிர்கிறது. புறக் கோள்கள் எப்போதும் அரைப்பிறைக்கு மேலாகவே தெரியும். கோள் ஒன்று விண்மீன்களின் சார்பாகச் சுற்றி முழு வலம் ருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் மீன்வழிச் சுற்றுக்காலம் (sidercal period) என்று சொல்லப்படும். உள் ஒரு கோள் ஒன்று (சூரியனைப் பொறுத்து) திசை நிலையிலிருந்து மீண்டும் அதே போன்ற ஒரு திசை நிலைக்கு வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் சூரிய வழிச் சுற்றுக்காலம் (synodic period) என்று கூறப்படும். கோள்கள் தம்மைத் தாமே அச்சில் ஒரு முழுச் சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளும் காலம் தற்சுழற்சிக் காலம் (axial period) என்று கூறப்படும். பல கோள்களுக்கும் மேற்காணும் கால அளவை களில் சில பட்டியலில் தொகுத்துக் கூறப்படுகின்றன (பட்டியல் - 1) இதே பட்டியலில் கோள்கள் குறித்த பிற விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. கோள் களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் சிலவற்றைத் தனித்தனியே காணலாம். நாள் புதன். சூரியனுக்கு மிகவும் அண்மையில் அமைந் துள்ள கோள் புதன். இது கோள்களில் மீச்சிறியது. குறுக்களவு 4800 கி.மீ. இதன் பாதை நீள்வட்ட வடிவமுடையது. சூரியனைச் சுற்றிவர 88 எடுத்துக் கொள்கிறது. அதே கால அளவில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்கிறது. இதன் விளைவாகச் சூரியனை எதிர்நோக்கி அதன் ஒரே முகம் தெரிகிறது. அம்முகப்பகுதியில் 400°C வெப்ப நிலையும் சூரிய ஒளிபடாத பின்முகப் பகுதியில் 260°C வெப்பநிலையும் இருக்கும். 1974 இல் இதை இல் இதை ஒட்டிப் பரந்த ஏவுகோள் மூலமாகக் கிடைத்த செய்தியிலிருந்து புதனின் மேற்