கோள்கள் 643
கோள்கள் 643 பரப்பு. திங்களை ஒத்தது என்று உறுதியாகியுள்ளது. புதனின் வெப்பத்தால் அதற்கு வளிமண்டலம் அமைய வாய்ப்பில்லை என்றும் தெரிய வருகிறது. புதனுக்கு ஒரு துணைக்கோள் இருக்கலாம். என்னும் ஊகம் உறுதி செய்யப்படவில்லை. வெள்ளி. வெள்ளியைச் சுற்றியுள்ள அடர்த்தி யான மேகம் சூழ்ந்த வளிமண்டலத்தால் சூரியனின் ஒளியைப் பிரதிபலித்து வெண் ஒளியோடு சுடர் விடும். சூரியன் உதிக்கும் முன்பும், மறைந்த பின்னும் அடிவானத்துக்கு மேலே வெள்ளி குறுகிய நேரமே தெரியும். அளவிலும் எடையிலும், வெள்ளி புவியை ஒத்தது. புவியிலிருந்து இதன் தொலைவு ஏறக்குறைய 1 மில்லியன் கி. மீ. ஆகும். இது சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 225 நாள். இதன் மேற் பரப்பிலிருந்து 70-100 கி.மீ. வரை அடர்த்தியான வெண் மஞ்சள் மேகங்களால் சூழப்பட்டுள்ளமையால் வெள்ளி பற்றிய பல செய்திகள் தெரியாமலிருந்தன. ராடார் அலைகள் மூலம் கண்ட ஆய்வுகளால் வெள்ளியின் மேற்பரப்பும் திங்களைப் போன்று அவிந்த எரிமலை வாய்ப்பரப்புகளை உடையது என்று தெரிய வருகிறது. அமெரிக்க மேரினர் (Mariner) மற்றும் சோவியத் ஒன்றியக் குடியரசின் வீனரா (Venera) செயற்கைக் கோள்கள் கண்டறிந்த செய்தி மூலம் இதன் வளி மண்டலம் கார்பன் டைஆக்சைடு, சிறிது நீராவி, கந்தக அமிலம் கொண்டு அமைந்திருக்கலாம். எனத் தெரிகிறது. வளிமண்டலத்தின் மேலே உறை கின்ற தட்பமும் அடிப்பகுதியில் பல நூறு பாகையில் உள்ள வெப்பமும் கொண்டு மிகுந்த மாறுபாட் டோடு இது அமைவதால் வளிமண்டலத்தால் பல சிக்கலான மாற்றங்கள் ஏற்படக்கூடும் கண்டறியப்பட்டது. எனக் செவ்வாய். செவ்வாய் மஞ்சள் கலந்த சிவப் பொளியுடன் காட்சியளிக்கிறது. இது புவிக்கருகில் உள்ள புறக்கோள். சூரியனைச் சுற்றி வர 687.5 நாள் எடுத்துக்கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி 37 நொடி ஆகும். இதன் குறுக் களவு ஏறக்குறைய 7000 கி.மீ. இதன் செவ்வாயின் சராசரி வெப்பம் -50C. ஈர்ப்பு ஆற்றல் மிகவும் குறைவு. சுற்றியுள்ள காற்றும் செறிவு குறைந்தது. இதன் துருவப் பகுதிகளில் மாறும் பருவநிலைக்கேற்ப வெண்மையான உறைபனி படிந்து மாறுதலடைகிறது. தொலைநோக்கிகள் பயன் படுத்தத் தொடங்கிய காலத்தில் செவ்வாயின் நடு வரைப் பகுதியில் அமைந்த செம்பாலைவனங்களையும் ஊடே குறுக்கும் நெடுக்குமாக அமைந்த கோடு களையும் கண்டு, அவை அறிவுடை உயிர்கள் செவ் வாயில் அமைத்த கால்வாய்கள் என ஊகம் செய் தனர். நுண்ணிய தாவரங்கள் தவிர வேறு உயிரி னங்கள் வாழும் வாய்ப்பு செவ்வாயில் இல்லை என்பது காலப்போக்கில் தெளிவாயிற்று. ச.9-41அ 16 கி.மீ, குறுக்களவுடைய ஃபோபாஸ் (phobos}, 8கிமீ. குறுக்களவுடைய டைய்மாஸ் (deimos) ஆகிய இருதுணைக்கோள்கள் இரவில் மங்கலான நில வொளியைத் தருகின்றன. நிறநிரல் காட்டிச் சோதனைகள் மூலம் சில உண்மைகள் தெளிவாயின. செவ்வாயின் வளிமண்டலம் புவியைவிடச் செறிவு குறைந்தது. தனி ஆக்சிஜன் செவ்வாயில் இல்லை; கார்பன் டைஆக்சைடு மிகுதியாகக் காணப்படுகிறது. மேரினர் IV என்னும் செயற்கைக் கோள் செவ்வாய் அருகே செலுத்தப்பட்டபோது பல அரிய புகைப் படங்களும் செய்திகளும் கிடைத்துள்ளன. மேலும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. வியாழன். இது கோள்களில் மிகவும் பெரியது. ஏனைய எட்டுக் கோள்களும் சேர்ந்து இக்கோளின் பாதி அளவுக்கே வரும். வியாழன் சூரியனிலிருந்து 80 கோடி கி.மீ. தொலைவில் இருக்கிறது. இதன் ஈர்ப்பு ஆற்றல் புவியின் ஈர்ப்பு ஆற்றலை விட 2.5 மடங்கு மிகுதி. எனவே பல நூறு கி.மீ. வளிமண்டலம் கொண்டு விளங்குகிறது. வியாழன் சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி வர 12 ஆண்டு எடுத்துக் கொள்கி கிறது. தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள மையப்பகுதியில் 9 மணி நிமிடங்களும் துருவப்பகுதியில் மணி 55 நிமிட ங்களும் ஆகும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் வியாழன் நெகிழ்ந்த அமைப்புடையதாக ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் 50 போன்ற வற்றின் ஆவிக் கலவையாக இருப்பதேயாகும். இதற்கு 12 துணைக்கோள்கள் (கலீலியோ கண்ட 4 துணைக் கோள்கள் உட்பட) உண்டு. புவியைப் போன்ற காந்தப்புலம் இதற்கு உண்டு. மின் ஆற்றல் உடைய துகள்கள் இதைச் சூழ்ந்து ரேடியோ அலைகளைத் தோற்றுவிக்கின்றன. வியாழ னின் வேகமான புறச்சூழல் தற்சுழற்சியாலும் புயலாலும் பாதிக்கப்படுகிறது. அதன் மையப்பகுதி யில் ஒரு செம்புள்ளி காணப்படுகிறது. சனி பல் இது வகைகளில் வியாழனைப் போன்றது. ஆனால் அதனிலும் சிறியது. தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 10 மணி, 13 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். சூரியனைச் சுற்றிவர அதற்கு 291 ஆண்டு தேவை. இதன் மையப்பகுதி மலைப் பாங்கானது. கனமான பனி இதைச் சூழ்ந்து படர்த் துள்ளது. கோளின் ஆரையில் மூன்றில் ஒரு பங்கு ஹைட்ரஜன் இதன் மேல் பரப்பாக அமைந்துள்ளது. மேல் பூச்சாக அம்மோனியா மற்றும் மீத்தேன் கலவை சூழ்ந்துள்ளது. இதற்கு ஒன்பது துணைக்கோள்கள் உண்டு. 1966 ஆம் ஆண்டு பத்தாம் துணைக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உ உறுதி செய்யப்பட வில்லை. சனியின் துணைக்கோள்களில் ஒன்றான (Titan) ஏறக்குறைய புதன் அளவு டைடன் பெரியது.