656 கோளிடைச் செலுத்தம்
656 கோளிடைச் செலுத்தம் அட்டவணை எந்திர வகை உந்தம் (நொடி) 1. எந்திரவகைகளும் தன்மைகளும் உந்துவிசை, எடை விகிதம் வேதியியல் (நீர்மநிலை 200-450 104-10' வரை உந்தத்தின் கால அளவு நிமிடங்கள் இரட்டைச் செலுத்தி) வேதியியல் (திண்மநிலை) 200-310 102- 102 வரை நிமிடங்கள் அணுச்சிதைவு 500-1,100 10³ 2 10வரை நிமிடங்கள் மின்வெப்பம் 120-2,000 5,000-25,000 10-4-10-2 வரை 10-5 - 10- வரை நாள்கள் வாரங்கள் 5,000-60,000 400-700 மாதங்கள் 10- 10" வரை நாள்கள் மின்காந்தம் நிலைமின் சூரியக்கதிர் சூடாக்கல் உந்து நிலவிற்கான விண்வழி யாவும் மிகச் சிக்கலானவை. இவ்வழிகளைக் கடக்கப் பல்வேறு விதமான செலுத்தம் தேவைப்படுகிறது. விண்கலத்தின் பல் வேறு செலுத்த முறைகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன. எடுத்துக்காட்டாக. தரை நீங்குவதற்கு மிகக் குறுகிய கால அளவில் மிக அதிகமான ஆற்றலும் முடுக்கமும் தேவைப்படுகின்றன. இந்நிலை சுளுக்கு வேதியியல் எரிநிகழ்வு முறைச் செலுத்தமே சிறப்புடையதாகும். இவ்வாறே புவியிலிருந்து வியாழனை அடைய நீண்டகால அளவில் (பல ஆண்டு கள்) குறைந்த முடுக்கமும் குறைந்த உந்து ஆற்றலுமே தேவைப்படுகின்றன. இத்தன்மைகளை உடையது மின்முறைச் செலுத்தமேயாகும். எந்திர வகைகள். எந்திர வகைகளும் தன்மை களும் அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளன. வேதி யியல் மற்றும் அணு வகை எந்திரம் குறுகிய காலத் திற்கு மிக அதிசு உந்து ஆற்றல் தரவல்லது. குறுகிய தொலைவு செலுத்தமானால் அதிக முடுக்கம் பயன் தரும். நீண்ட தொலைவு செலுத்தமானால் மெது வான முடுக்கமே போதும். கோள்களுக்கிடையே சுமை ஏற்றிச் செல்லத் தேவையான செலுத்து ஆற்றலை மின்முறைச் செலுத்தமே தரவல்லது. வேதியியல் ஏவூர்திகள் திண்ம நிலைச் செலுத்தம், நீர்மநிலைச் செலுத்தம் என இருவகைப்படும். இரு வகையிலும் எரிநிகழ்வினால் செலுத்தும் பொருளின் வேதியியல் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப் படுகிறது. வெப்ப ஆற்றல் மூக்குக் குழாய் வழியாக உந்துவிசையாக மாற்றப்பட்டுச் செலுத்தத்திற்குத் தேவையான உந்து ஆற்றல் உருவாக்கப்படுகிறது. அணுவியல் ஏவூர்திகளில் அணுச்சிதைவு (fission ) வகை, அணுப்பிணைப்பு (fusion) வகை என இரண்டு نج E I D E F சூரியன் B படம் 1 விண்வழி 1.ஏவுகோளின் விண்வழி, 2. கோளிடைச் செலுத்த வழி, 3. இலக்குக் கோளின் விண்வழி, 4. ஏவுகோளின் இறுதிநிலை, 5. இலக்குக் கோளின் தொடக்க நிலை, A-F வரை அட்டவணை 2-இல் உள்ளவாறு