கோன்றோடைட் 659
கோளியியல் பற்சக்கரத் தொடர். மேலே குறிப் பிடப்பட்டுள்ள பற்சக்கரத் தொடர்களில் முதல் மூன்று வகைப் பற்சக்கரங்கள் சுழலும்போது அவற்றின் அச்சுகள் இடம் பெயராமல் ஒரே இடத்தில் நிலைத்துச் சுழலும். ஆனால் கோளியியல் பற்சக்கரத் தொடரில், பற்சக்கரங்களின் சில அச்சுகள் தம்மைத் தாமே சுற்றிக் கொள்ளாமல் வேறொரு வட்டவடிவப் பாதையில் சுழன்று வரும் தன்மையைக் கொண்டி ருக்கும். இவ்வகைப் பல்சக்கரத் தொடரின் அமைப்பைப் படம் 1இல் காணலாம். -A கோன்றோடைட் 659 கோளியல் சக்கரத்தின் அச்சையும் ஒரு புயம் இணைக் கும். படத்தில் இது C எனக் குறிக்கப்பட்டுள்ளது. கோளியல் பற்சக்கரம், சூரியச் சக்கரத்தின் மேலும் உள்ளே பற்கள் அமைந்துள்ள வளை வடிவத்தின் உள்ளும் சுழலும் தன்மை உடையது. கோளியல் பற்சக்கரத் தொடர்கள் வில்சன் பற் சக்கரப் பெட்டி மற்றும் தானியங்கியின் வேறுபாட்டுப் பல்லிணையில் (differential gear} பெரிதும் பயன்படு கின்றன. ஒரு பற்சக்கரத்தின் மீது மற்றொரு பற் சக்கரம் சுற்றி வருவதால் கோளியல் பற்சக்கரத் தொடரை நீள்வட்டப் பற்சக்கரத் தொடர் என்றும் கூறலாம். -க. வேதகிரி A படம் 1. கோனியல் பற்சக்கரத் தொடர் வளைவடிவ உள்பல்சக்கரம் C - புயம் P - கோளியல் சக்கரம் S - சூரியச் சக்கரம் கோளியல் பற்சக்கரத் தொடரில் சூரியச் சக்கரம் (sun wheel), கோளியல் சக்கரம் (planetary wbeel), வளைவடிவ உள்பற்சக்கரம் (annulus), புயம் அல்லது ஆரம் (arm) ஆகிய முக்கிய பகுதிகள் இருக்கும். கோளியல் பற்சக்கரத் தொடரின் நடுவே அமைந் துள்ள சக்கரம், சூரியச் சக்கரம் எனப்படும். சுழலா மல் ஓரிடத்தில் நிலையாக இருக்கும் வரைபடத்தில் S எனக் குறிக்கப்பட்டுள்ளது. சூரியச் சக்கரத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள சக்கரத்தைக் கோளியல் சக்கரம் என்று கூறலாம். கோளியல் சக்கரம் தன்னைத் தானே சுற்றிவருவதோடல்லாமல் அது இணைந்துள்ள சூரியச் சக்கரத்தையும் சுற்றி வருகிறது. எவ்வாறு சூரியனை னைய கோள்கள் சுற்றி வருகின்றனவோ, அவ்வாறே இவ்விரண்டு சக்கரங்களும் செயல்படுவதால் இவற்றை முறையே சூரியச் சக்கரம் (S) கோளியல் சக்கரம் (P) எனலாம். சூரியச் சக்கரத்தின் அச்சையும், கழ 42 அ கோன்றோடைட் து ஒரு சிலிகேட் கனிமம். இது ஹீமைட் குழுவைச் சேர்ந்தது. இக்குழுவின் கனிமங்களைப் பற்றித் தெளி வான கருத்துக்கள் உருவாகவில்லை. இக்கனிமங்களைப் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இக் கனிமம் ஃபுளூரினும் நீரும் கலந்த மெக்னீசியம் சிலி கேட் ஆகும். இதில் மெக்னீசியம் ஃபுளூரைடும்-ஹைட் ராக்சைடும் சேர்த்து ஒரு பங்கும் மெக்னீசியம் சிலி கேட் இரு மடங்கும் உள்ளன. [(2Mg, Sio,, Mg( F,OH),} கோன்றோனடட்டிலுள்ள (chondrodite) மெக்னீசி சியத்தில் 6% வரை இரும்பு இருக்கக்கூடும். டைட் டேனியம், அலுமினியம், இரும்பு ( Felii), மங்கனீஸ், சோடியம் ஆகியவை சிறிதளவில் இக்களிமத்தில் உள்ளன. கோன்றோடைட் சுனிமத்தின் படிகங்கள் ஒற்றைச்சரிவுப் படிகத்தொகுதியில் இயல் வகுப்பைச் சேர்ந்தவை. ஜிப்சம் வகையைச் சேர்ந்த பட்டக வகுப்பு எனவும் இதைக் கூறுவர். இதன் அணுக்கோப்பு ம். இயல்பு அல்லது அடிப்படை வகையைச் சேர்ந்தது. ஓர் அணுக்கோப்பில் இரண்டு கனிமக் கூட்டணுக்கள் உள்ளன. இப்படிகங்களின் வல் - இட (b) அச்சு குட்டையானது; முன்-பின் (a) அச்சும், குத்து (c) அச்சும் நீள ளமாவை. இதன் படிக அச்சுகளுக்கிடையே யுள்ள விகிதம் (a: bc) 1.0863:1:3.1447 என்று சிலரும், 2.170:1:1.663 என்று வேறு சிலரும் கணக் கிட்டிருக்கின்றனர். இதன் அணு அமைப்பில் அணுக் களுக்கிடையேயான தொலைவு முன்-பின் திசையில் 7.87 A.ஆகவும் பக்கவாட்டத்தில் 4.73 ஆகவும் கீழ்மேலாக 10.27 A ஆகவும் உள்ளதைக் காணலாம். இதிலிருந்து படிக அச்சுகளில் குத்து (c) அச்சு அதிக நீளமானதென்பதை உணரலாம். கோன்றோடைட்டின் முன் - பின் (a) அச்சுக்கும் குத்து (c) அச்சுக்குமிடையேயுள்ள கோணம் (j)