சங்கிலி ஓட்டு 679
சங்கிலி ஓட்டு 679 தகுந்தாற்போல் தனித்தனியாக அமையும். இல் வகை இயக்கு மற்றும் இயங்கும் உருளைகளின் சுழல், வேகம், ஆற்றல் ஆகியவற்றைக் கடத்து வதற்குப் பல வகையான ஆற்றல் செலுத்தம் (power transmission ) தேவைப்படுகிறது. அவ்வகை இணைப்பு களில் முக்கியமானது சங்கிலி ஓட்டு (chain drive) ஆகும். வார்ப்பட்டைக்கு மாற்றாக, உலோகத்திலான சிறு இணைப்புகளைச் சேர்த்து வைத்து அல்லது கீவிட்டு, நீண்ட சாட்டை போன்ற அமைப்பை உரு வாக்கலாம். இவ்வாறு சிறு,சிறு உலோக இணைப்பு களைக் கொண்டு காணப்படும் வார்ப்பட்டை போன்ற அமைப்பு, சங்கிலி இணைப்பு அமைவாகும். சங்கிலி ணைப்பு அமைவுகளால் உறுதியான, நிச்சயமான இயக்கத்தைச் செலுத்த முடியும். ஆனால் நுணுக்கமான வேறுபடு கால அளவீட்டிற்கு இல் வமைப்பு ஏற்றதன்று. மிக பெரும்பாலும் சங்கிலி இணைப்பு அமைவுகள் மோட்டார் ஊர்திகள், மிதிவண்டிகள், வேளாண் கருவிகள், சாலை செம்மைப்படுத்து உருளைகள் ஆகியவற்றில் பயன்படும். சற்றுக் குறைவான வேகத் தில் இயங்கும் இயக்கங்களுக்கே சங்கிலி அமைப்புகள் பயன்படுகின்றன. சங்கிலித் தொடர் இணைப்பு அமைவுகளின் வகை கள். சங்கிலியிலுள்ள சிறு உலோக இணைப்புகள் அமைக்கப்படும் விதத்தைப் பொறுத்து வெவ்வேறான வகைகள் உள்ளன. அவற்றுள் உருள் சங்கிலி (roller chain), செருகு சங்கிலி (plug chain), பெருகுவாய்ச் சங்கிலி (bushed chain), கவிழ் பற்சங்கிளி (inverted tooth chain) என்பன குறிப்பிடத்தக்கன. சங்கிலித்தொடர் இணைப்பின் நன்மைகள். உறுதி யானதும், நிச்சயமானதும் ஆன இயக்கம் கிடைக்கப் பெறுகிறது. தேவைக்கேற்றபடி வேறுபடத்தக்க திட்ட அமைப்புகளுடன் இச்சங்கிலி இணைப்புகள் பொருந்தும்; ஒரே சங்கிலிச் சாட்டையைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட சுழல் இயக்கங்களை நடத்த னார்; செயல்திறன் மிகுந்துள்ளது. நிறுவுதல், பரா மரித்தல், உயவிடுதல் ஆகியவை எளியவை: இதற் கான செலவும் குறைவு; மாறுபாடான எதிர் (adverse ) வெப்ப நிலைகளிலும் சங்கிலித் தொடர் இயக்கத்தி லிருக்கும்; கூடுதல் வேக விகிதங்கள் எளிதல் கிடைக் கும். (10:1 என்ற விகிதம் இயலுவதாகும்); பலதிசை இயங்கு திறனும் தங்குதடையின்றி இழைந்தியங்கும் (versatility) தன்மையும் உடையது. நம்பகமான தன்மையும் மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய திறனும் (adaptability) கொண்டது: இணைப்பில் வழுக்கல் (slipping) இல்லாத காரணத்தால் இயக்கத் திலுள்ள வேக விகிதம் சீராக இருக்கும். சங்கிலியின் உருள் சங்கிலி அமைப்பு. உருள் குறுக்கு வெட்டுத் தோற்றமும், அமைக்கப்பட்டிருக் ☑ பெருகுவாய்ச் சங்கிலி உருள் சங்கிலி படம் 1 ஆன கும் விதமும் படத்தில் விளக்கப்பட்டுள்ளன. இவ் வமைப்பிலுள்ள முக்கிய இணைப்பு உறுப்புகள் தாங்கு ஊசி (bearing pin), செருகி சூழ்கலம், இணைப்புத் தகடுகள் (link blades) ஆகியவை. எஃகில் செருகிகள் உள்ளிருக்கும் இணைப்புத் தகடுகளைப் பிடித்துக் கொண்டிருக்கும். தாங்கு ஊசி, தகடுகள் மற்றும் செருகி வழியாகச் செலுத்தப்பட்டு அசை யாமல் ஆணியடிப்பாகப் (rivetted) பிணைந்திருக்கும். ஒவ்வொரு செருகியும், உருளைகளால் சூழப்பட்டி ருக்கும். சக்கரத்திலுள்ள பற்களால் மேற்கூறப்பட்ட உருளைகள் பொருந்துமாறு திட்ட அமைப்பு இருக்கும். உருளைகள் செருகிகளின் ஊடே எளிதில் சுழலக் கூடியவாகவும் அமைந்திருக்கும். தேய்மானம் இன்றி இயங்குவதற்கு ஏற்ற வகையில் இணைப்பில் இருக்கக் கூடிய பரப்பிகள் வலிவூட்டப்பட்டிருக்கும். இயக்கத் தில் உராய்வைக் குறைப்பதற்கு உயவு எண்ணெய் கள் பயன்படும். படத்தில் ஒரே ஒரு முறுக்கிழை கொண்ட அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பழக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று முறுக்கிழைகள் கொண்ட சங்கிலி அமைப்பு உள்ளன. இவ்வகை அமைப்புகளில் தாங்கு ஊசிகள் அனைத்துச் செருகிகள் ஊடேயும் செலுத்தப் பட்டிருக்கும். இச்சங்கிலிகள் தாங்கப்பட்டு இயக்கத் தில் ஆழ்த்தப்பட அதற்கேற்ற சங்கிலிக் கண்ணிப் பற்சக்கரம் (sprocket wheel) இருக்கும். பற்சக் கரத்தின் விளிம்பில் உள்ள கண்ணிப்பற்களுக்கு டையே, வளை பரப்பில் முழுமையாகப் பொருந்து