பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிலித்‌ தொடர்‌ வினை (இயற்பியல்‌) 681

களிலும் சீராகவும் சமமாகவும் பகிர்ந்து படர்ந் திருக்கும். மேலும் சங்கிலி அமைப்பு, பற்களிலிருந்து நழுவியோ விலகியோ இருக்க வாய்ப்பில்லை. இவ்வகை அமைப்புகள், அதிக ஆற்றலைக் கடத்திச் செல்வதற்கும், அதி சுழல் வேகத்திற்கும் (600 மீட்டர் / நிமிடம்) நுணுக்கமான செலுத்தியக் கத்திற்கும் தேவையற்ற ஓசையின்றி இயங்குவதற்கும் பெரிதும் பயன்படுகின்றன. A கே.ஆர்.கோவிந்தன் நூலோதி. Baumeister A.Availone and Baumei- ster i. Marks' Standard Hand Book for Mechanical Engineers. Eighth Edition, McGraw-Hill Book Company, New York, 1978. சங்கிலித் தொடர் வினை (இயற்பியல்) நியூட்ரானைக் கொண்டு யுரேனியம் போன்ற கன மான அணுக்கருக்களைத் தாக்கும் பொழுது ஏற் படும் அணுக்கருப் பிளவு நிகழ்வில் இரண்டிற்கும் சங்கிலித் தொடர் வினை (இயற்பியல்) 631 மேற்பட்ட நியூட்ரான்கள் வெளிவிடப்படுகின்றன. இத்துடன் 200 மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் (MeV) (3.2X10 14 எர்க் அல்லது 3.2x0- ஜூல்} ஆற்றலும் வெளிவிடப்படுகிறது. இவ்வாறு வெளி விடப்படும் நியூட்ரான்கள் மேலும் யுரேனியம் அணுக் கருக்களுடன் மோதி பிளவு நிகழ்வைத் தொடர்ந்து உண்டாக்கும். இந்திகழ்வு யுரேனியம் முழுதும் பிளவு அடையும் வரை தொடர்ந்து நடைபெறும். இதுவே சங்கிலித் தொடர் வினை (chain reaction) எனப்படும். இத்தொடர் வினையை ஊக்குவித்து எல்லா யுரேனிய அணுக்கருக்களும் நொடியில் பிளவுறுமாறு செய்யலாம். இத்தகைய சுட்டுப்படுத்தப் படாத தொடர் வினையே அணுகுண்டில் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இத்தொடர் வினையைக் கட்டு படுத்தி நீண்ட காலத்திற்கு நிகழுமாறு செய்தால் வெளிப்படும் ஆற்றவை ஆக்கப் பணிகளுக்குப் பயன் படுத்தலாம். இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை, அணுக்கரு உலைகளில் நடைபெறு கிறது. அணுக்கருவின் சங்கிலித் தொடரைப்படத்தில் காணலாம். சங்கிலித் தொடர் வினையில். ஒரு காலக் கட்டத்தில் நடைபெறும் பிளவுகளுக்கும், அதற்கு 238U குறைவேசு நியூட்ரான் 2351 235 235U தணிப்பான் அணுப்பிள வினால் உண்டானப் பொருள் மிகுவேக நியூட்ரான்கள் சங்கிலித் தொடர் வினை