பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 சங்கு

684 சங்கு ள்ளன. தஞ்சாவூர், தென் ஆர்க்காடு மாவட் டங்கள் புலிகாட் ஏரிப்பகுதி, தென்கேரளம், கத்திய வார் ஆகிய பகுதிகளின் சில கடற்படுகைகளிலும் சங்குப் பாயல்கள் காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளுக்கு அருகில் கிடைக்கும் சங்குகள் தமிழ் நாட்டுக் கடல்களில் கிடைக்கும் சங்குகளினின்று சற்று மாறுபட்டுள்ளன. அவற்றின் வாய்ப்பகுதி நீளம் மிகுந்துள்ளது. புரிமேடுகளில் கூர் முகிழ்ப்புகள் உள்ளன. சங்குயிரிகளின் கருவளர்ச்சியும், ளநிலை வளர்ச்சியும் பிற வயிற்றுக்காலிகளில் காணப்படுவன போன்றே உள்ளன. தோல் போன்ற கெட்டியான சவ்வி னாலான பல அறைகளுடைய உறையினுள் (egg capsule) முட்டைகள் இடப்படுகின்றன. சங்கு யிரியின் முட்டை உறைக்குள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வட்டமான அறைகள் இருக்கின்றன. 15-20 செ.மீ. நீளமுள்ள முட்டை உறைகள் செம்மறி ஆட்டின் கொம்புபோல முறுக்கிக் கொண்டிருக்கும். கீழ் முனையிலுள்ள நட்டையான பகுதி கடல் மணலில் புதையுண்டிருப்ப நால் முட்டை உறை நீரில் செங்குத்தாக நிற்கிறது. அடிப்பகுதியில் உள்ள அறைகள் சிறியனவாக உள்ளன. மேலே செல்லச் செல்ல இவை பெரியன வாகி ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு மேல் ஒரே சீரான அளவில் உள்ளன. அறைகள் மிக நெருக்கமாக அமைந்துள்ளமையால் கீழ் அறை யின் கூரையும் மேல் அறையின் அடித்தளமும் ஒன்றை யொன்று தொடுகின்றன. அறைகளின் கீழ்விளிம்பு களிலுள்ள பிறைவடிவத் துளைகள் வழியாகக் கடல் நீர் இவ்வறைகளுக்குள் சென்று வெளிவருகிறது. அடியிலிருந்து நுனி வரை அனைத்து அறைகளும் ஓர் அடிப்பக்கச் சவ்வினால் ணைக்கப்பட் டுள்ளன. ஒவ்வோர் அறையும் ஆல்புமின் மிகுந்த கூழ் போன்ற கருவுணவுப் பொருளாலும். முட்டை களாலும் நிரப்பப்படும். கருவளர்ச்சி நடைபெற்று டுரோக்கோஃபோர் இளவுயிரி (trochophore larva) நிலையும் அதை அடுத்து வெலிஜர் (veliger) நிலையும் உண்டாகின்றன. வெலிஜர் திருகுசுருளாக அமைந்த ஒரு கூட்டிற்குள் இருக்கிறது. சுமார் 5 மி.மீ. உயரமுள்ள இக்கூட்டிற்கு முதற்கூடு (protoconch) என்று பெயர். சுருள்களெல்வாம் ஒரே அளவாக இருப்பதால் கூடு ஒரு நீள் உருளைபோல இருக்கும். இளவுயிரி நிலையில் இவை ஒன்றையொன்று தின்று வளர்கின்றன. உடன் பிறப்புகளைத் தின்னுதல் காரணமாக வலிவற்றவை அழிந்து விடுகின்றன.ஓர் அறையில் 6 அல்லது 7 உயிரிகளே உயிருடன் எஞ்சும். இவை வெலிஜர் நிலையிலிருந்து திடீரென இளநிறை உயிரிகளாக மாற்றமடைகின்றன. கூடுகளின் அமைப் பும் நிறமும் மாறுகின்றன. வெண்மையாக இருந்த கூட்டின் நிறம் பழுப்பாக மாறுகிறது. எபர்னா புச்சினம் புரிமேடுகளில் சிறு முகிழ்ப்புகள் தோன்றுகின்றன. இளநிறைவுயிரிகள் 1 செ.மீ. அளவு இருக்கும்போது முட்டை உறையில் உணவு இல்லாத நிலை உண்டா கிறது. உடலைச் சுற்றிக் கடினமான ஓடு தோன்றி விடுவதால் ஒன்றையொன்று தின்னவும் முடிவ தில்லை. அறைகளுக்கிடையே உள்ள சுவரைத் தின்று விடுவதால் ஒரு முட்டை உறையின் எல்லா அறை களிலுமுள்ள ஏறத்தாழ 200-300 இளநிறைவுயிரி களும் ஒன்று சேர்கின்றன. பின்னர் இவை உறை யின் வெளிச் சுவரையும் தின்று அழித்துக் கடல் படுகையை அடைந்து தனித்தனியே வாழத் தொடங்குகின்றன. சங்குயிரியின் முதற்கூடு இறுதி வரையில் கூட்டின் உச்சியில் ஒட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். . சங்குயிரிகள் தை, மாசி,பங்குனியில் இனப் பெருக்கம் செய்கின்றன. அப்போது கடற்படுகை களில் புதிய முட்டை உறைகளைக் காணமுடியும். சங்குயிரிகள் ஒருபாலுயிரிகள். இனப்பெருக்க காலத்தில் ஒரு பெரிய பெண் சங்குயிரியைச் சுற்றி ள்ள பல சிறிய ஆண் சங்குயிரிகளே முட்டை உறையைக் கட்டுவதற்குத் துணை செய்கின்றன. சங்குயிரி எதிரிகளிடமிருந்து தன்னை எல்லா வழிகளிலும் காத்துக் கொள்கிறது. சங்கு கெட்டி யாகவும் கடினமாகவும் இருப்பதால் மீன்களால் சங்குயிரிகளைத் தின்ன முடிவதில்லை. சங்கின் மேற்படலம் தடிமனாக இருப்பதால் கிளையோனா (cliona) போன்ற துளையிடும் பஞ்சுயிரிகளால் (sponges) கேடு ஏற்படுவதில்லை. கரு வளர்ச்சியும் இளநிலை வளர்ச்சியும் தோல் போன்ற கெட்டியான