பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 சங்குப்‌ பூ

686 சங்குப் பூ வயிற்றுக்காவியின் ஓடு - நுண் உணர்கொம்பு கசு இடுக்கிக்கால் சங்கு நண்டு கொண்டு சேர்க்கும். நண்டு பிடித்துண்ணும் உணவின் துகள்கள் நண்டை அண்டி வாழும் ஒட்டுயிரிக்கு இரையாக அமையும். இவ்வொட்டுயிரிகள் நண்டைச் சூழ்ந்து கொண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் கடற் சாமந்தியில் காணப் படும் கொட்டும் செல்கள் (nematocysts) எதிரிகளை நெருங்கவிடாமல் செய்கின்றன. ஒவ்வோரின நண்டுக் கும் தனித்த ஒவ்வோரினக் கடற் சாமந்தி போன்ற உயிரே உடனுண்ணியாக (commensal } அமைகிறது. சங்கு நண்டு கடல்கழிப் படுகையில் படிந்து கிடக் கும் சேற்றைத் தன் கால்களாலும் வாயருகிலுள்ள தாடைகளாலும் கலக்கித் தாடையிலுள்ள இழை போன்ற மயிர்ச் சல்லடையில் வடிகட்டி அதில் தங்கும் உயிரிகளைத் தின்னும். இவ்வாறு வடிக்கப் பட்ட நுண்ணுயிர்களை இடுக்கியால் நசுக்கி மற்றத் தாடையால் துருவி உண்ணும், துறவி நண்டில் ஆண் பெண் வேறு வேறாக உள்ளன. பெண் தன் ஓட்டிள் உதட்டைக் கவ்விக் கொண்டு உலவும். ஆண், விந்தணுவைப் பெண் வயிற்றில் சிந்தும். கருவுற்ற முட்டை பெண் நண்டின் வயிற்றுப் பகுதியினுள் இடப்பக்கக் கால்களில் ஒட்டிக் கொண்டு முதிர்ந்து வளரும். சங்கு நண்டின் வயிற்றுப் பகுதியில் பிற நண்டு களுக்கு இருப்பதைப்போலச் சுண்ணாம்புப் பொருள் இல்லை. கைட்டின் பொருள் மட்டுமே இருப்பதால் வயிற்றுப் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். ஆகவேதான் இம்மெல்லுயிரி தன் உடலுக்குக் காப் பாகப் பிறிதொரு சங்கின் ஒட்டுக்குள் புகுந்து வாழ் கிறது. வெளி உலக வாழ்வினின்று விடுபட்டுச் சங்கு ஓட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாலேயே துறவி (hermit crab) என்ற பெயரை நண்டு பெற்றது எனக் கொள்ளலாம். து -ஜி.எஸ்.விஜயலட்சுமி நூலோதி. M.E. Ayyar. A Manual of Zoology, Vol 1. Invertebrara, Ananda Book Depot, Madras, 1976: L.A. Borradaile, L.E.S. Eastham & F.A. Potts, The Invertebrata, Asia Publishing House, London, 1961. சங்குப் பூ இதன் தாவரவியல் பெயர் கிளைடோரியா டெர்னே ஷியா (Clitoria ternatea) என்பதாகும். இது பேபேசி எனப்படும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கொடியின் மலர்கள் சங்கு போன்ற உருவத்தைக் கொண்டுள்ளமையால் இப்பெயர் ஏற்பட்டது. இதற்குச் சங்கு புட்பம், காக்கணம், காக்கணங்கொடி, சிகினி, கன்னி, காக்காய்வல்லி என்ற பெயர்களும்