பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டைத்‌ துணிகள்‌ 691

வறு நுண்மையும் கொண்டது. நெருக்கமான நெசவுத் துணியாக இது ஒரே வண்ணத்திவோ இரு வண்ணக் கோடுகள் பாணியிலோ தயாரிக்கப்படுகிறது (சாதாரண நெசவு). கேம்பிரிக் (cambric). உயர் நூல் சிணுக்கு எண் கொண்ட பருத்தி அல்லது லினனிலிருந்து நெருக்க மாக நெய்யப்படும் நுண்மைமிக்க, இலேசான சட்டைத் துணி, கஞ்சியேற்றம் செய்து உருளைகளுக் கிடையே அழுத்தப்படுகிறது (calendered). சாதாரண நசவில் தயாரிக்கப்படும் இத்துணி வெண்ணிறத் திலும், மற்ற நிறங்களிலும் கிடைக்கும். கான்டள் கிரீப் (canton crepe). இது நுண்ணிய வார்ப்பும், கனமான நிரப்பு நூலும் கொண்ட சதுக்க நெசவு கொண்டது. பொதுவாக, பட்டு அல்லது செயற்கைப் பட்டாலான இத்துணியின் பரப்பு, சிறு மணிகளால் நிரப்பப்பட்டது போலத் தோன்றும். திடமும், துவளுமையும் மிக்கது. சாலிஸ் (challis). இது லேசான சாதா நெசவு உடையது. பொதுவாக, பட்டுப் பாவு நூலும், சன்னக் கம்பளி நிரப்பு நூலும் கொண்டது. பருத்தி, நூற்ற ரேயான், பல்எஸ்டர் ஆகியனவும் பயன் படுத்தப்பட்டுள்ளன. சன்னமான நூலால் நெய்யப் படுவதால் மென்மையாகவும், எளிதில் மடிக்கக்கூடிய தாகவும் உள்ளது. கோலங்கள் அச்சிடப்படுவதும், நெய்யப்படுவதும் உண்டு. . சீட்டி (chintz). உயர் இழைச் சிணுக்கு எண் - கொண்ட பருத்திநூலைச் சாதாரண நெசவு செய்து, பளபளப்பான கோலங்களை ஒருபுறம் அச்சிட்டால். சீட்டி எனப்படும். மலர்களையோ, ஏனைய சமச் சீர்மை கொண்ட வடிவங்களையோ வரையலாம் (அச்சிடலாம்). பிசிர் நீக்கம் செய்து, கஞ்சியிட்டு, மெருகேற்றி, அழுத்திப் பதப்படுத்தப்பட்ட துணி யாகும். சாட்டின் கிரேப் (satin crepe), இது பட்டு அல்லது செயற்கை இழையினாலான சாட்டின் நெசவு கொண் டது. கிரேப், முறுக்கு வகை நிரப்பு நூல் கொண்டது {crepe twist filling). சைனா கிரேப் எனும் வகையில் வலம்புரி. மற்றும் இடம்புரி முறுக்கு (z and s twits) நிரப்பு நூல்களால் சுருக்கத் தோற்றத்தைத் தோற்று விக்கின்றனர். இது மென்மையான, இலேசான,வலிமை யான துணியாகும். மங்கலான சாட்டின் கிரேப், கச்சா பட்டிலிருந்து துணி தயாரித்து, பசை நீக்கம் செய்து தயாரிக்கப்படுகிறது. மற்றொருவகை, பல்எஸ்டர் நூளிலிருந்து நெய்யப்படுகிறது. பட்டு, செயற்கைப் பட்டிலிருந்து காண்டன் கிரேப் வகையைப் போன்றே தியேப் மரோகெயன் (crepe marocain) என்னும் துணியை உருவாக்கவாம். டக் (duck). நெருக்கமாக நெய்யப்பட்ட கனமான துணி, நம்பர் டக், ஆர்பி டக் மற்றும் ஃப்ளாட் டக், 9 - 4 4 அ அ சட்டைத் துணிகள் 691 நம்பர் டக், ஆர்பி டக் ஆகியன முறுக்கு நூல்களைச் சாதா நெசவு செய்து பெறப்படுகின்றன. ஃப்ளாட்டக் இரட்டையாக நெய்யப்பட்ட தனிப் பாவு நூல்களை யும், தனி அல்லது முறுக்கேறிய நூல்களையும் கொண்டது, நிரப்பு டூவெடைன் (duvetyne). பொதுவாக, பருத்திப் பாவு நூலும்,நூற்ற பட்டு நிரப்பு நூலும் கொண்டது. சில துணிகளில் சன்னக் கம்பளி நூல்களும் பயனா கின்றன.சாட்டின் நெசவு முறையில் உருவாக்கப்படும் இத்துணி மென்மையாகவும். உடலோடு ஓட்டக் கூடியதாகவும், தேய்மானமுறாததாகவும் உள்ளது. ரேயான் ஏபாஞ் (rayon eponge). விளையாட்டு வீரர்கள் அணியும் சட்டைகளை உருவாக்கப் பயன் படும் இத்துணி புதுவகை நெசவு முறைகளால் உரு வாக்கப்படுகிறது. பருத்தித் துணியால் தயாராகும் எபாஞ் ராட்டினி (ratine) எனப்படும். ஒரு கனமான நூலுடன் இரண்டு நுண்மைமிக்க நூல்களை முறுக்கித் தயாரிக்கப்படும் நூலுக்கு ராட்டினி எனப்பெயர். இத் துணியைச் சாயமேற்றலாம்; வெளுக்கலாம்: இதன்மீது அச்சிடலாம். ஆசிய இழைகளாலான . ஃப்யூஜி (fuji}, பட்டு, ரேயான், அசெட்டேட் நுண்ணிய நூல்களைக் காண்ட நெசவு. மகளிர், விளையாட்டு வீரர் ஆகி யோரின் சட்டை தயாரிக்க ஏற்றது. சிஃபான் (chiffion). இது இரு முனைகளை வலம் புரி முறுக்காகவும், இரு முனைகளை இடம்புரி முறுக் காகவும் கொண்ட சுதுக்க நெசவுடைய துணியாகும். மென்மையும் வலிவும் கொண்ட இத்துணி ஜார்ஜெட் (georgette) துணியைவிட ஒளிபுகவிடும் இயல்பு கூடுத லாசுப் பெற்றது. ஜிங்காம் (gingham), சுமார் எடையுள்ள சாதாரண நெசவுத் துணி. நேர் செய்யப்பட்ட (carded) அல்லது வாரப்பட்ட (combed) பருத்தி நூல்களைக் கொண்டு பெட்டித் தறியில் நெய்யப்படும் இத்துணி பல நிறங் களில் தயாரிக்க ஏற்றது. ஒரே வண்ணத்தில் உருவாக் கப்பட்டால் இதற்குப் புதுமை ஜிங்காம் என்று பெயர். மெல்லிய மெல்லிய நூல்களிலிருந்து நெய்யப்பட்ட வகையைத் திசு ஜிங்காம் (tissue gingham) என்பர். கிரினெடீன் (grenadine). நுண்மையான, தளர்ந்த வீனோ நெசவில் உருவாக்கப்பட்ட இத்துணியைச் சேக்குவார்டு தறியிலும் தயாரிக்கலாம். மகளிர் சட்டைக்கு ஏற்றது. ஜெர்சி (jcrscy). தட்டை அல்லது உருண்டைப் பின்னல் (சாதாரண அல்லது து மேடுறுத்தப்பட்டது). மீள் தன்மை கொண்டிருந்தாலும், நாளடைவில் தொய்யக் கூடியது; துவளுமை மிக்கது. கொசி (kersey). இது ராணுவ வீரர்களின் சீரு டைத் தயாரிப்புக்குப் பயன்படுகிறது. இயல்பு எடை கொண்ட கம்பளித் துணியான இதில் தேய்த்து