பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/721

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணப்பு 701

வளர்ப் நார்ப்பயிரின் சாகுபடி. சணப்பு விரைவாக வளரும். தன்மையது. இது களைகளை வளரவிடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர் எல்லா வகை மண்ணிலும் வளரும். ஆனால் நாருக்காகச் சாகுபடி செய்வதற்கு வடிகால் வசதியுள்ள களிச்சேற்று வண்டல்மண் சிறந்தது. காடுகளை அழித்து நிலத்தைத் திருத்திச் சாகுபடி செய்வதற்கு முன் சணப்பை முதல் பயிராக பது நல்லது. இச்செடியிலுள்ள வேர்முடிச்சுகளில் தழைச்சத்தை மிகுதிப்படுத்துவதற்குச் சாகுபடி நிலத்தில் மிகு அளவில் கால்சியமும் மணிச்சத்தும் இருத்தல் வேண்டும். அமில நிலம் இதன் சாகுபடிக்கு ஏற்றதன்று. தாழ்வான களிமண் நிலத்தில்கூட இப் பயிரைச் சாகுபடி செய்யலாம். ஆனால் நாரின் தரமும் விளைச்சலும் குறைந்துவிடும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்பயிர் சாகுபடி செய் யப்படுகிறது. வட இந்தியாவில் இதனைக்காரிஃப் பருவத்தில் (Kharif Scason) பயிரிடுகின்றனர். தென்னிந்தியப் பகுதியில் ராபி பருவத்தில் இது சாகுபடியாகிறது. குறைந்தது 400 மி.மீ மழையாவது பெய்யும் இடங் களில் இச்செடியின் விளைச்சல் அதிகரிக்கும். பொது வாக 500-750 மி. மீ மழையளவு இப்பயிருக்குத் தேவை. காரிஃப் பருவத்தில் தனிப் பயிராகக் கோதுமை, எண்ணெய் வித்துகளின் சாகுபடிக்கு முன்பே இது விதைக்கப்படும். சில் சமயங்களில் கரும்பு மற்றும் பழ மரங்களுக்கு இடையே விதைப் பதுண்டு. சோளம், கேழ்வரகு, நெல், பருத்திச் சாகு படிக்குப் பின்பு தென்னிந்தியப் பகுதிகளில் சணப்பை விதைப்பர். காரிஃப் பருவத்தில் ஜூன், ஜூலை மாதங்களிலும் ராபி பருவத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும் தூவுதல் முறையில் விதை கள் ஹெக்டேருக்கு 25 கிலோ அளவில் விதைக்கப் படும். கருவிகளைக் கொண்டு இடைவெளி விட்டு விதைக்கும் பொழுது 15 கிலோ விதை போதும். இதில் வரிசைக்கு வரிசை 30 செ. மீ. இடைவெளி தர வேண்டும். இப்பயிருக்கு ஹெக்டேருக்கு 20 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சாம்பல் சத்தும் இடப்படும். தழைச்சத்து இடப்படுவதில்லை. செயற்கை உரங் களை இறுதி உழவிற்கு முன் அடியுரமாக வேண்டும். சணப்பு விரைவாக வளர்வதால் களைகள் மிகுதியாகத் தோன்றா. ஐபோமியா சிற்றினங்களில் ஒன்று இப்பயிரில் களையாகக் காணப்படுகிறது. இதைக் கையால் பறித்து அழித்து விடலாம். அறுவ டைக்குப் பின்பு தூய்மை செய்யும்போது இக் களையின் விதைகளையும் சணப்பு விதைகளிலிருந்து பிரித்து விடலாம். நாருக்காகப் பயிரிடப்படும் செடிகளை விதைத்த 120-150 நாளில் அறுவடை செய்யலாம். பூக்கள் செப்டம்பர் மாதம் முதற்கொண்டே தோன்று கின்றன. பூக்கள் தோன்றுமுன் தழைவளர்ச்சிப் பருவம் 45 நாள் இருத்தல் வேண்டும். விதைத்த சணப்பு 701 பருவம் எதுவாயிருந்தாலும் T6 போன்ற குறுகிய கால வகைகள் 30 நாளில் பூக்கின்றன. நெற்றுகள் முற்றிய பின்பு தரைக்கருகில் செடிகளை அரிவாளால் அறுத்து நிலத்தில் இரண்டு மூன்று நாள் உலர்த்த வேண்டும். செடியிலுள்ள இலைகள் உலர்ந்த பின்பு செடிகளைத் தடியால் அடித்து விதைகளைப் பிரித் தெடுக்க வேண்டும். சணப்பு நார். இது ஒரு முக்கியமான ஆசிய நார். இந்நார் எடுப்பதற்கு முழுத் தாவரத்தையும் உலர்த்துகின்றனர். இலைகள் உதிர்ந்தவுடன் தண்டை நீரில் அமிழ்த்தி அழுகச் செய்கின்றனர். தண்டு மென்மையானதும் நாரை மட்டும் எடுத்துத் தூய்மை செய்து உலர்த்துகின்றனர். இதன் நார் வெளுப்பானது, வலிமையுள்ளது. இதைக் கான்வாஸ் (convas) நெய்வதற்கும் கயிறுகள் திரிப்பதற்கும் வவைகள் பின்னுவதற்கும் பைகள் தைப்பதற்கும் 'பயன்படுத்துவர். காகிதம் செய்வதற்கும் பயன்படு கிறது. இலைகளும் தழைகளும் ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகின்றன. . விதைப்பயிர்ச் சாகுபடி. நூறு விதைகள் ஏறக் குறைய 6 கிராம் எடையிருக்கும். விதைப்பயிர் பெரும்பாலும் காரிஃப்பருவத்தின் இறுதியில் விதைக் கப்படுகிறது. குளிர் இல்லாத பகுதிகளில் ராபி பரு வத்தில் விதைப் பயிர் சாகுபடி செய்வது நல்லது. மகரந்தச் சேர்க்கையில் உதவி புரியும் தேனீக்கள் மிகுதியாக இருப்பது விதைகளின் உற்பத்தியைக் கூட்டும். வளமான நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிரிலிருந்து 2000 கி.கி. வரை விதைகளைப் பெற லரம். தீவளப்பயிர்.பொதுவாக ஆந்திர மாநிலத்தில் சணப்பு, தீவனப்பயிராக வளர்க்கப்படுகிறது. நன் செயில் தெல் அறுவடைக்கு 3,4 நாளுக்கு முன்பாக கி.கி. ஹக்டேருக்கு 40-50 வீதம் விதைக்கலாம். நிலத்திலிருக்கும் ஈரத்தைப் பயன்படுத்திச் செடி முளைத்துப் பயிராகிறது. விதைத்த 45 நாளில் சணப்புப் பயிர்களில் பூக்கள் உண்டானவுடன் அவற்றை அறுத்து உலரவைத்து வைக்கோலுடன் சேர்த்துப் போர்போட்டு வைப்பர், ஒரு ஹெக்டேரில் 3400 கி.கி.உலர்ந்த தீவனம் கிடைக்கிறது. வகைகள்.உத்தரப்பிரதேசத்தில் சாகுபடி செய் யப்படும் கான்பூர்-12 (K-12) என்னும் வகை மிகு விளைச்சலைத் தருவதுடன் தரமான நாரையும் கொடுக்கிறது. மேலும் இது வாடல்நோய் எதிர்ப்புத் திறள் கொண்டது. மத்திய பிரதேசத்தில் பயிரிடப் படும் எம்-18 என்னும் குறுகிய கால வகை குறைந்த மழைப் பகுதிகளிலும் நல்ல விளைவைத் தரும். எம்-19,எம்-35 போன்ற வகைகளும் குறுகிய கால தண்டு துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளன. தமிழகத்தில் பெல் லாரி என்னும் வகையும் பீகாரில் B.E.1 என்னும் வகையும் சாகுபடியாகின்றன. வயதுடையவை. வை