பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணல்‌ 703

படுத்தும், குளிர்ச்சி தரும். தோல் நோய்களையும் வாதநோயையும் போக்கும். சணல் நாரை மார்பகத் தில் வைத்துக் கட்டினால் பால்சுரப்பு வற்றும். வேரைக் குடிநீரிட்டுத்தர வயிற்றுவலி போகும். விதையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிக் தலைக்குத் தடவ மயிர் நன்கு வளரும். கோ. அர்ச்சுணன் மே. லோ. லீலா நூலோதி.I.W. Purseglove, Tropical Crops- Dicotyledons, Longman Group Ltd., London, 1974. சணல் வெள்ளைச் சணல் என்னும் கார்க்கோரஸ்--கேப் சுலாரிஸ் (Corchorus capsularis) செடியிலிருந்தும், டோசா எணல், டிட்டா சணல், ஜுஸ் மெல்லோ (jew's mallow) என்பவை கார்க்கோரஸ் ஒலிட் டோரியஸ் (corchorus olitorius) செடியிலிருந்தும் எடுக்கப்படும். பின்னதன் இலைகள் கசப்பாக இருப்பதால் இதற்கு டிட்டா சணல் என்னும் பெயர் வந்தது. இது டிலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தாயகமான சீனாவிலிருந்து சணல் இந்தியா, பாகிஸ்தானுக்குப் பரவியிருக்கும் எனக் கருதப்படு கிறது. இந்தியாவில் குறிப்பாகக் கிழக்கிந்தியப் பகுதி களில் மிகுதியான பரப்பில் காணப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 3,000 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், வடபீகார், தென் கிழக்கு ஒரிஸ்ஸா, திரிபுரா. கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலங்களில் மிகுதியான பரப்பில் சாகுபடி ஆகின்றது. சணலைக் கடல் மட்டத்திலிருந்து 600 - 900 மீட்டர் உயரம் வரையிலான பகுதிகளில் காணலாம். சணல் சாகுபடி 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டபோதும் 19 ஆம் நூற்றாண்டில் தான் பெரும் பரப்பில் சாகுபடியானது. ஏறக்குறைய 90% சணல் சாகுபடிப் பரப்பு, கங்கை பிரம்மபுத்திராநதி பாயும் பகுதிகளில் அமைந்துள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் நார் களில் பருத்திக்கு அடுத்த இடத்தைச் சணல் ஏற்கிறது. நார் வகைகளில் இதுவே குறைந்த விலையுடையது. கா. கேப்சுலாரிஸ் செடிகளைக் களைகளாகச் சீன நாட்டில் காணலாம். இச்சிற்றினத்தை ஆற்றுநீர்ப் பாசனப் பகுதிகளிலும் தோட்டக் கால்களிலும் வளர்க்கலாம். இது நீர் தேங்கியிருந்தாலும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. குறுகிய வயதுடையது. இவ்வகைச் சணல் சாகுபடிக்குப் பிறகு நெல்லைச் சாகுபடி செய்யலாம். சணல் 703 கா.ஒலிட்டோரியஸ் செடிகளை இந்தியா, பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் காணலாம். வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் கங்கை. பிரம்மபுத்திரா இவற்றின் கிளை நதிகள் பாயும் இடங்களில் இப் பயிரைக் காணலாம். இந்தியாவில் அஸ்ஸாம், பீகார், ஓரிஸ்ஸா, உத்தரப்பிரதேசம். கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இது பெருமளவில் பயிராகின்றது. இது ஆசிய ஆஃப்ரிக்சு நாடுகளில் காட்டுச் செடியாகக் காணப்படுகிறது. செடி. கார்க்கோரஸ் ஒலிட்டோரியஸ் புதர் போன்று 75 செ.மீ. உயரம் வரை வளர்ந்திருக்கும். இலைகளும் கிளைகளும் பளபளப்பானவை. இலைகள் நீள் சதுரம், முட்டை அல்லது ஈட்டி வடிவில் உள்ளன. அடிப்பகுதியில் 3-5 இலை நரம்புகளைக் காணலாம். இலை அடிப்பகுதி மழுங்கியிருக்கும். ஓரம் பற்க ளுடன் இருக்கும். நுனி கூரானது. இலைக் காம்பு 3 செ.மீ. நீளமுடையது. இலையடிச் செதில்கள் நீண்டு 1.5 செ. மீ. அளவில் உள்ளன. BT. மஞ்சரி இலைக்கு எதிராகத் (cyme) தோன்று கிறது. ஒவ்வொரு மஞ்சரியிலும் இரண்டு அல்லது மூன்று பூக்கள் இலைக்கெதிராகப் பூக்கும். பூக்கள் கேப்சுலாரிஸ் பூக்களை விடச் சிறியவை. பூவடிச் செதில்களும் பூக்காம்புச் செதில்களும் இழை போன்றவை. 3 மி.மீ. அளவானவை. பூக்கனின் குறுக்களவு 5 மி.மீ. புல்லி மற்றும் அல்லி இதழ்கள் ஐந்து, நீள் சதுரமானவை, மி.மீ. அளவுடையவை. அல்லி இதழ்கள் மஞ்சள் நிறமானவை. மகரந்தத் தாள்கள் பல. மகரந்தக்கம்பி 6 மி.மீ நீளமுடையது. சூல்பை 4 மி.மீ அளவுடையது, 4.6 அறைகளை உடையது. கனி பளபளப்பான உருளை வடிவான வெடிகனி (capsulc). 4.5-7.5 செ.மீ அளவுடையது. பத்து வரிகளுடனிருக்கும்; அலகு உண்டு. விதைகள் ஊதா கலந்த கறுப்பு நிறம் அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் 5 மி.மீ அளவில் பிரமிடு வடிவி லிருக்கும். முளைசூழ்தசை (endosperm) உண்டு. கரு வளைந்திருக்கும். இச்செடியில், பூக்களும் காய்களும் ஆண்டு முழுதும் உற்பத்தியாகின்றன. விதைகள் அடர் சாம்பல் நிறங் கலந்த ஊதா நிறமாயிருக்கும். ஒரு கிராம் நிறையில் 500விதைகள் அடங்கியிருக்கும். கார்க்கோரஸ் கேப்சுலாரிஸ் சிற்றினத்தின் செடி 3-4 மீ. உயரம் வளரும். செடியில் கிளைகள் பளபளப் பானவை. ஈட்டி வடிவ இலைகள் தோல் போன்று பல பளப்பாக மாற்றடுக்கத்தில் இருக்கும். ஓரம் பற்கள் போன்றிருக்கும். இலைக் காம்பின் நீளம் 0.7-2.5 செ.மீ. இலையடிச் செதில்கள் 8 மி.மீ. நீளமானவை. பூக்கள் 8 மி.மீ. குறுக்களவுள்ளவை. கனி உருண்டை யான வெடிகனி (capsule) 1.2-2 செ.மீ அளவுடையது. விதைகள் வழவழப்பாக முட்டை போன்று கூராகச்