பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 சணல்‌

704 சணல் செம்பு நிறம் கொண்டு இருக்கும். ஒரு கிராம் நிறை யில் 300 விதைகளிருக்கும். விதையின் ஒரு பரப்பு. குழிவாக இருக்கும். அலகு இல்லை. பத்து மேடுகள் உண்டு. நார்ப்பயிரின் சாகுபடி முறை, சணல் சாகுபடிக்கு ஈரப்பதமான சூழ்நிலையும் 24-37°C வெப்பப் பகுதி களும் ஏற்றவை. வெப்பநிலை 34°C இருப்பது மிகவும் சிறந்தது. காற்றின் ஈரப்பசை 57-97% இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. குறைவான மழையும் நீர் தேங்குதலும் இச்செடியின் விளைச் சலைப் பாதிக்கும். கா. கேப்சுலாரிஸ் பயிர் வளர்ச்சி யின் பின் பகுதியில் ஓரளவு நீர் தேங்கியிருந்தாலும் பாதிப்பில்லாமல் வளரும். இளஞ்செடிப் பருவத்தில் இரண்டு சிற்றினங்களிலுமே நீர் தேங்கியிருத்தல் கேடுண்டாக்கும். பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பெய்யும் முன்மழையும், பின்பு குறைந்த நாள் நிலவும் வறட்சியும் கலந்த சூழ்நிலை கா. கேப்சுலாரிஸ் வகைகளை விதைக்க ஏற்றது. கா. ஒலிட்டோரியஸ் வகைகள் ஏப்ரல் மாதத்திலோ மே மாதத்திலோ கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி விதைக்கப்படுகின்றன. மழை அளவு குறைவாக இருக்கும் இடங்களில் சணவைவிளைவிப்பதில்லை. மாறி மாறிக் கிடைக்கும் சூரிய ஒளி, மழை ஆகியன இதன் உற்பத்திக்கு ஏற்றவை. ஆழமான பொடி மணல் நிரம்பிய வண்டல் நிலம் சணல் விளைவிற்கு மிகவும் ஏற்றது. மணற்பாங் கான மற்றும் களி மண் நிலங்களிலும் வளரும். கார அமில நிலை 6.4% இருத்தல் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். நிலத்தை நான்கு அல்லது ஐந்து முறை உழுது கட்டிகளை உடைத்துக் களை, புல் இவற்றை நீக்கித் தூய்மையாக்க வேண்டும். ஆற்றுப் பாசன நிலங்களில் பிப்ரவரி மாத இறுதியில் கேப்சுலாரிஸ் வகைகள் விதைக்கப்படுகின்றன. மேற்கிந்தியப் பகுதியில் தோட்டக் கால் நிலங்களில் மழை பெய்ததும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் விதைக்கப்படும். சிலர் ஜூன் மாத முதல் வாரம் வரை விதைக்கின்றனர். சணவில், விதைகளின் முளைப்புத் திறன் 80% க்கு மேலாக இருக்கிறது. விதை, பரவித் தெளித்தல் முறையில் (broad- casting) விதைக்கப்படுகிறது. முளைத்த பின் ஏறக் குறைய 10 செ.மீ இடைவெளி தந்து செடிகள் கலைக்கப்படுகின்றன. செடி 10-15 செ.மீ. உயரம் இருக்கும்பொழுது களையெடுத்தலும் கலைத்தலும் செய்யப்படும். விதைக்கும் கருவியைப் பயன்படுத்தி வரிசையில் விதைகள் 5-7.5 செ.மீ இடைவெளியில் இருக்குமாறு விதைக்கப்படுகிறது. வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளி, கேப்சுலாரிஸ் வகைகளுக்கு 30 செ.மீட்டரும் ஒலிட்டோரியஸ் வகைகளுக்கு 20 செ. மீட்டரும் இருக்கவேண்டும். அவை சணல்விதை 3-4 நாளில் முளைக்கும். சணல் பல பயிர்களுடன் பயிர்ச்சுழற்சியில் சேர்க்கப்படுகிறது. சணல் - நெல்-உருளைக்கிழங்கு, சணல் - நெல்- கோதுமை, தட்டைப்பயறு-சணல் - உருளைக்கிழங்கு. சணல் - நெல்-பெரிசீம், சணல்-நெல் முதலியவையாகும். JRC 212 என்னும் கேப்சுலாரிஸ் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து தழைச்சத்து. மணிச்சத்து, சாம்பல்சத்து, கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றை முறையே 84, 16,147,84,29 கி.கி அளவில் எடுத்துக் கொள்ளும். இவ்வாறே மேற்கூறிய சத்துக்களை JRO 632 என்னும் வகை 111,28,164,124,25 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளும். அமில நிலத்தில் சாகு 1. 2 வெண்சணல் செடிப்பகுதி 3. பூவின் நீன்வெட்டுத் தோற்றம் 3. கனியின் நீள் வெட்டுத் தோற்றம்