சணல் 707
வட்ட வடிவக் கொப்புளங்கள் கண்டறியப்பட்டன. தீவிரமாகப் பாதிக்கப்பட்ட செடி குறுகி இறந்து விடும். நீரில் மூழ்கியிருக்கும் தண்டுப்பகுதியில் கொப்புளங்கள் சிதைந்திருக்கும். நீருக்கு மேலுள்ள பகுதிகளில் கொப்புளங்களை நீண்ட காலம் காண லாம். இப்பூசணம் சணல் செடித் திசுவறைகளுக்குள் பூசண வேரிழைகளை (rhizomycelium) உண்டாக்கும். பூசண வேரிழைகளில் இடையிடையே வீக்கங்கள் காணலாம். உருண்டை வடிவ உறங்கு விந்துப்பை களில் (resting sporangia) இவை ஒவ்வொன்றும் 40 முட்டை வடிவ இயங்குவித்துகளை (zoospores) வெளிப்படுத்தும். இவை நகரிழையைப் (fiagellum) பெற்றுள்ளன. பூசணத்தின் வேரிழைகள் கட்டைத் திசுக்களில் (xylem) உட்புகும். செடியின் அடிப்பகுதியிலுள்ள நாரிழைகள் தாக்கப்பட்டுச் சிதைவுறுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் சிறந்த முறை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆந்த்ரக்னோஸ். கொல்லிட்டோட்ரைகம் கார்க் கோரம் (Colletotrichum corchorum) என்னும் இந் நோய் வெப்பமான காற்றில் ஈரப்பசை மிகுந்திருக்கும் நேரத்தில் தோன்றுவதால் 8-10 வாரச் செடிகள் பாதிக்கப்படுகின்றன. பாதிப்புக்குள்ளான செடியின் நார் இழைகள் ஆங்காங்கே அழிக்கப்படுவதால் நார்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை. இச்செடி களின் நாரை உரிக்க முடிவதில்லை. நாரின் தரமும் குறைந்துவிடும். நோயால் காய்கள் கருமையாகிச் சுருங்கி விடுகின்றன. முதிர்ந்த காய்கள் கறுப்பு நிற மடைகின்றன. விதைகள் சரியாக முற்றுவதில்லை. இப்பூசணத்தில் ஆறு வகை இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கார்க்கோரஸ் ஒலிட்டோரியஸ் வகைகள் இந்நோய்க்கு எதிர்ப்புத் திறனுடையவை. சணல் இலைகளில் தோன்றும் இலைப்புள்ளி, கார்க்கோரஸ் கேப்சுலாரிஸ் செடியில் கண்டறியப் பட்டது. அடர்பழுப்புநிறப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். பின்பு இவை இணைந்து ஒழுங்கற்ற வடிவில் பயிரைத் தாக்கும்போது இலை மஞ்ச ளாகும். தண்டின் நார் நிறமாற்றமடையும். செர்க் கோஸ்போரா கார்க்கோரை (Cercospora corchori) என்னும் பூசணம் இதை ஏற்படுத்துகின்றது. இந்தியா வில் செர்க்கோஸ்போரா இலைப்புள்ளியில் கொரி allow Gunn Gan Ganon (Corynespora cossiicola) என்னும் பூசணமும் இணைந்து காணப்படும். பாக்டீரியா வாடல் (Bacterial wilt). இந்நோயைச் சூடோமோனாஸ் சொலனேசிரம் (Pseudomonas solanacerum) என்னும் பாக்டீரியா ஏற்படுத்து கின்றது. 1970 ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்நோய் கண்டறியப்பட்டது. தாக்கப் பட்ட செடி குறுகிவிடும்; இலைகள் உதிரும்; வேர்த்தொகுதி அழுகிவிடும். நோய்க்குரிய பாக்டீரியா கத்தரி, மிளகாய், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகிய க. 9- 45 அ சணல் 707 பயிர்களையும் தாக்குகிறது. நோயுற்ற செடி அல்லது மண் ஏளைய இடங்களுக்குப் பரவுவதையும் நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாசனம் செய்வதையும் கவனமாகத் தடுக்க வேண்டும். இலைத்தேமல் நச்சுயிரி நோய். இதை முன்பு பசுமை இழப்பு நோய் (chlorosis) என்றனர். நோயுற்ற செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டாலும் உற்பத்தி குறைவதில்லை. நோய் தீவிரமாகத் தோன்றின் செடி குறுகி இறந்துவிடும். எந்த நுண் ணுயிரும் இந்நோயைப் பரப்புவதாக அறியப்பட வில்லை. ஆனால் மகரந்தத்தூள் மூலமாகவும் விதை மூலமாகவும் நோய் பரவுவதை அறிந்துள்ளனர். கந்தகம் அடங்கியுள்ள 0.3% தாமிர சல்ஃபேட் அல்லது துத்தநாக சல்ஃபேட் கரைசலை இலை மீது தெளித்தோ மண்ணில் ஹெக்டேருக்கு 150 கி.கி. அம்மோனியம் சல்ஃபேட் உப்பை இட்டோ பற்றாக் குறையைப் போக்கலாம். பூச்சிகளுள் அரைக்காவடிப்புழு (semi looper), தண்டு வெட்டும் வண்டு (stem girdling beetle), தண்டுக்கூன்வண்டு (stem weevil) முதலியவை மிகவும் முக்கியமானவை. இவற்றுள் அரைக்காவடிப் புழுவான அனோமிஸ் சபுவிஃபெரா (Anomis sabulifera) என்னும் புழு வங்காளத்தில் சணலில் பாதிப்பை உண்டாக்குகிறது. தற்பொழுது பர்மா, ஸ்ரீலங்கா. ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப் படுகிறது. இப்புழு பச்சை நிறமாக இருப்பதால் இலைகளைத் தின்னும்பொழுது எளிதில் கண்டு பிடிக்க இயலுவதில்லை. செடியிலுள்ள 90% இலைப் பரப்பும் புழுவினால் தின்னப்பட்ட நிலையைக் காணலாம். இதனால் செடி வளர்ச்சி பாதிக்கப் பட்டுச் சணல் விளைச்சல் குறைகிறது. இப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த B. H. C 10% தூளை ஹெக்டேருக்கு 25 கி.கி வீதம் தூவலாம். எண்டோ சல்ஃபான் 0.07% அல்லது மெத்தில் பாரதியான் 0.05% அடர்வுள்ள மருந்துக் கரைசலைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப்பின் நிலத்தை உழுது கூட்டுப்புழுக்களை ஒழித்து அழிவைக் குறைக் கலாம். தண்டுவெட்டும் வண்டிற்கு நுப்செரா பைகலர் போஸ்ட்புருன்னியா (Nupserha bicolar postbrumnea) என்று பெயர். முன்பு தக்கைப்பூண்டில் பேரழிவை உண்டாக்கிய இது தற்பொழுது சணல் செடிகளைப் பெரிதும் பாதிக்கிறது. இந்தியா மற்றும் வங்கா ளத்தில் உள்ள சணல் பயிராகும் அனைத்து டங் களிலும் தைக் காணலாம். இது புழுப் பருவத்தில் தண்டின் துளையாள பகுதியில் அறை போன்ற பகுதியை உண்டாக்கி அதில் கூட்டுப்புழுவாகும். குளிர்பருவத்தில் கூட்டுப்புழு தண்டில் சிறு பகுதியை வெட்டி அதனுள்ளே இருந்து முட்டையிடும்பொழுது தண்டில் உண்டாகும் துளைகளால் இழைகள் தொடர்ச்சியாக இருப்பதில்லை. இதனால் சணல்