பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணல்‌, நார்‌ இழைகள்‌ 709

பயன்படுகின்றது. பல திரித்த சணற்கயிறுகள் வகைகளில் பயன்படுகின்றன. காயங்களில் வைத்துக் கட்ட மென்மையான சணல் பயனாகின்றது. எளிதில் உடையக்கூடிய பொருள்களை வெளியிடங்களுக்கு அனுப்பும்போது உடையாமலிருக்கும் பொருட்டு அவற்றைச் சணலில் பொதிந்து அனுப்புவதுண்டு. மேலும் குறைந்த விலையுள்ள முரட்டுக் கம்பளங்கள் தயாரிக்கச் சணல் பயனாகிறது. பருத்தி இழை களுடன் சேர்த்து ஒப்பனைத் துணிகள் திரைச் சீலைகள் செய்யவும் மெத்தை, திண்டுகள் செய்யவும் சணலைப் பயன்படுத்தலாம். கார்க்கோரஸ் ஒலிட்டோரியஸ் என்னும்செடியின் இலையைக் கட்டி, மூலம், மகோதரம் ஆகியவற்றுக் குப் பயன்படுத்தலாம். இது சிறுநீரைப் பெருக்கும். மேக வெட்டை நோய்க்கு உதவும். இலைக்கா யத்தை அருந்த, காய்ச்சல் குணமாகும். இரத்தச்சீத பேதிக்கும் இக்கஷாயம் உதவும். விதை, பேதியை உண்டாக்கும். கார்க்கோரஸ் கேப்சுலாரிஸ் என்னும் செடியின் உலர்ந்த வேரும் காயும் சேர்ந்த கஷாயம் வயிற்றுப்போக்கு நோய்க்கு உதவும். இலைச் சாற்றைச் இரத்தச் சீதபேதி, காய்ச்சல், வயிற்றுமந்தம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம். சுல்லீரல் நோய்க்கும், மலத்தை இளக்கவும் இலைக் கஷாயம் உதவும். இலைக்குப் பசியைத் தூண்டும் தன்மை உண்டு. உடலுக்கு வலிமை தரும். குடல் பூச்சி களைக் கொல்லும். தோல்நோய், செரியாமை முதலிய வற்றிற்கும் உதவுகிறது. காய்கள் வீக்கத்திற்கும், சீழ்க்கட்டிக்கும் உதவும். சணல் இலையைக் குடிநீரிட்டு 24 - 48 மி.லி. வரை நாளும் இரு வேளை கொடுத்து வரக் காய்ச்ச லும் வளிநோயும், சூதக்கட்டும் போகும். வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க வயிற்று வலி நீங்கும். இதன் விதையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சித் தலைக்குத் தடவி வர மயிர் வளரும். கோ. அர்ச்சுணன் சே. பிரேமா நூலோதி. க.ச. முருகேச முதலியார், குண பாடம் (மூலிகை வகுப்பு). அரசினர் அச்சகம், Qarmar, 1951. சணல் கரடுத் துணிகள் சணல் கரடு இழையால் (flax tow yarn) நெய்யப் பட்ட கனமான, நெருக்கமான, பெரிய துணிகளே சணல் கரடுத் துணிகள் (tow fabrics) எனப்படும். ஊடையில் நெய்யப்படும்போது மென்மையாக நெய் யப்படுகின்றன.சிறந்த பயன்பாடுகளுக்கு ஏற்றவாறும் இவை அதிக உறிஞ்சும் தன்மை இருக்குமாறும் சணல் தார் இழைகள் 709 நெய்யப்படுகின்றன. வை துண்டுகள் தயாரிப் பதற்கே பெரிதும் பயன்படுகின்றன. சணல் துணிகள் ரா. சரசவாணி வை சணல் இழையால் நெய்யப்பட்ட துணியாகும். உப்பு, தானியங்கள், மாவு,பஞ்சு முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குச் சணல் துணிகள் (bag cloth) பயன்படுகின்றன. இவை எடை குறைந்து காணப்படு கின்றன. பொருள்கள் வெளியே வாராதவாறு சிறந்த முறையில் செய்யப்படுகின்றன. ழை இவை தடிமனான நூல் அல்லது சணல் யால் நெருக்கமாகத் தையல்களில்லாமல் நெய்யம் பட்ட துணியாகும். இவை ஓரங்களில் மட்டும் இணைக்கப்பட்டுக் குழாய் போன்ற வடிவத்துடன் காணப்படுகின்றன. காண்க: சணல் புரியிழை. சணல், நார் இழைகள் . இரா. சரசவாணி சணலிலிருந்து (flax) லினன் துணி தயாரிக்கும் முறை கி.மு.3400 ஆம் ஆண்டு எகிப்தில் ஒரு தொன்மை யான கலையாகப் பயிற்றுவிக்கப்பட்டது. கல்லறை களிலிருந்து மோட்டா வகை, சன்ன வகை ஆகிய துணி . ருவகை லினன் துணிகளும் கண்டெ டுக்கப்பட் டுள்ளன. சில பாதுகாக்கப்பட்ட பிணங்களில் (mummies) 900 மீட்டர் வரை சன்னமான லினன் சுற்றப்பட்டுள்ளது. விதைப்பதற்கு முன் மண்ணைத் தயார் படுத்துவதற்குத் தீவிர முறைகள் தேவைப்படுவதாலும், பெரிய அளவில் உரங்கள் வேண்டியிருப்பதாலும் சணல் பயிர் செய்தல் கடின மானது. பூசண நோய்த் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும் இப்பயிரின் முழு வாழ்காலம் மூன்று மாதமாகும். பயிரின் தண்டுப்பகுதியில் கீழிருந்து 2/3 பங்கு மஞ்சளாக மாறிய பின்பும், இலைகள் உதிர்ந்த பின்பும் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையைத் தாமதமாக்கினால் மரப்பொருள் (lignin) வேற்றம் நிகழத் தொடங்கும். நிலத்திலிருந்து செடி யைப் பறிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. ஏக்கருக்கு 200 -360 கி. கி வரை விளைச்சல் கிட்டும். செறி மரப்பட்டைக்கு அடியில் ஒருவகைக் கோந்துப் பொருளால் பிணைக்கப்பட்ட நிலையில் நாரிழைகள் உள்ளன. தண்டிலிருந்தும் காம்பிலிருந்தும் நார்ப் பொருளைப் பிரிக்கும் நோக்கத்துடன் இச்செடிகள் பறிக்கப்பட்ட பின்பு நீரிலோ (water-retting)