பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|||சணல்‌, நார்‌ இழைகள்‌ 711}

நெய்தலில் சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது; இழுக்கும் போது அறுந்து விடும். நெசவின்போதும் பாவுக் கம்பி கள் (heddles) உயர்த்தப்படும்போதும் தோன்றும் திரிபைத் தாங்குவதற்கு உதவியாக இந்நூல்கள் சுழலும் துருசுகளின்மீது செலுத்தப்படுகின்றன. லினன் நூல்கள் பொதுவாகப் பின்னல் அமைப்பு களுக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை. ஏனெனில், அவை விறைப்புத்தன்மை கூடுதலாக அமையப் பெற்றவையாகவும், நீள் வளையத் தோற்றுவிப்புக்கு ஏற்றவையாகவும் அமைந்துள்ளன. ஒரே சீராக மிக உயர் இழைச் சிணுக்கு எண் கொண்ட நூலை மாற்றுவதற்குச் சிறப்பான புறப்பரப்புச் சீர் செய் முறைகள் தேவைப்படுகின்றன. மேலும், சிறப்பு வகைப் பின்னல் எந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும். எனினும், ஆய்வுகளின் விளைவாக லினன் இழைகளைத் தொகுப்பு வகை இழைகளுடன் கலப்பினமாக நூற்புச் செய்தால், இந்நூல் பின்னல் வேலைகளுக்கு ஏற்றதாக இருப்பதுடன், இரு இழை களிலும் இடம் பெறும் நல்லியல்புகளையும் துணியில் பெறலாம். படம் 2. (ஆ) கிடைமட்டப் படம் லினன் துணிகளில் பெரும்பாலும் சதுர அமைப்பு {squared or balanced construction) அதாவது, பாவு நூல்களும் நிரப்பு நூல்களும் சம எண்ணிக்கையில் உள்ள அமைப்பு இடம் பெறுவதால், நூல் சிணுக்கு எண் (thread count) ஒற்றை எண்ணாகக் குறிப்பிடப் படுகிறது.வழக்கமாக மருத்துவமனைகளிலும், தங்கும் விடுதிகளிலும் அறைகலன்களாகப் {furnishings) பயன் படுத்தப்படும் போர்வை, படுக்கை விரிப்பு. தலை யணை உறை, துவாலை, மேசை விரிப்பு, துடைக்கும் துணி ஆகியன பல ஆண்டுகளுக்கு முன் பாக லினன் நூலிலேயே நெய்யப்பட்டன. கை லினனைச் சலவை செய்வதில் இரு உத்திகள் கையாளப்படும். புல்வெளிச் சலவை (grass bleaching) முறையில் லினன் துணியை வெட்டவெளி நிலத்தில் பரப்பிச் சூரிய ஒளிக்கு இலக்காகச் செய்தல் வேண்டும். இதனால் வெளுப்பாதல் மிக மெல்ல நிகழுமாயினும். பிறவகையில் இது லினன் து லினன் துணியைப் பாதிக்காது. சணல், நார் இழைகள் 71} . வேதிச் சலவை முறையில் சீர்செய்யப்பட்ட துணியின் திடம் குன்றுகிறது. வினனைச் சுண்ணாம்புக் கரை சலில் நனைத்து 8-10 மணி நேரம் வரை கொதிக்க வைத்தல் இம்முறையின் முதன்மைக் கட்டமாகும். இதன் விளைவாக மெழுகு வகை மாசுப் பொருள்கள் துணியிலிருந்து அகற்றப்படுகின்றன. பின்பு HCI அமிலக் கரைசலில் சலவை செய்து, நன்கு கழுவி, இறுதியாகச் சோடியம் ஹைட்ராக்சைடு கரை சலைக் கொண்டு HCI அமிலத்தை நடுநிலையாக்க லாம். சலவை செய்யப்படாத லினன் வலிவுமிக்கது: அதற்குப் பழுப்பு லினன் அல்லது சாம்பல் வினன் எனப்பெயர். கொத்தி இழுத்தல் (napping) முறைக்கு லினன் ஏற்றதன்று; கடினப் பரப்புக் கொண்ட நீண்ட வெட்டிழை வகை நூல்களுக்கு இச்சீர் செய்முறை தேவையுமில்லை. மடிப்புக் சுலையாத தன்மையை ஏற்றுகையில் லினனின் முதன்மைப் பண்பான வலிமை குறைகிறது. நூல் வடிவிலேயே சாயமேற்றும் முறை லினனில் பின்பற்றப்படுவதில்லை. இயற்கையில் தோன்றும் சணல் இழையின் பரப்பு கடினமான தாகவும், நுண்துளையற்றதாகவும் இருப்பதால் அதனுள் சாயம் புகாது. இழையின் செல்கள் இறுக்க மாகப் பிணைக்கப்பட்டுள்ளமையால், தீவிர வெளுப்பு முறையால் மட்டுமே இச்செல்கள் நொறுக்கப்படு கின் ன்றன. ஆழ்ந்த நிறமுடைய லினன்கள் சாயத்தை உட்கவர்வதற்கு வசதியாக முற்றிலும் வெளுக்கப். பட்டிருக்க வேண்டும். எனவே, ஆழ்ந்த நிறச் சாயத் தில் தோய்ந்த லினன் நீண்ட நாளுக்கு உழைப்ப தில்லை. இதன் காரணமாக வினனுக்கு எப்போதும் வெளிர் நிறச் சாயமே பயன்படுகிறது. லினன் உடை தயாரிப்புக்கு மட்டுமன்றி, மீன்பிடிக்கும் தையல் நூல், பை, கித்தான், தீயணைப்புக்கருவியில் பொருத்தப்படும் குழாய் ஆகியவற்றின் பிலும் பயனாகிறது. மேற்கு வலை. தயாரிப் வங்காளம், இந்தியச் சணல். வங்களாதேசம் இவற்றில் இச்சணல் பயிரிடப்படு கிறது. கார்கோரஸ் காப்சுலரிஸ் (Corchorus capsit- laris), கார்கோரஸ் ஒலிட்டோரியஸ் (Corchorus olitorius) எனும் இருவகைச் செடிகள் இந்நாரிழையை உள்ளடக்கியவை. பூக்கும் கட்டத்திலோ, விதைக் கூடு உருவாகும் தறுவாயிலோ அறுவடை செய்யப் படும். நிலத்திற்கு அருகில் உள்ள பகுதியில் செடியை வெட்டிச் சாய்த்தல் என்பது பரிந்துரைக்கப் பட்ட அறுவடை முறையாகும். பச்சைத் தண்டின் எடையில் 4.5-7.5% இழைப்பொருள் உள்ளது. லினன் துணியின் தோற்றுவாயான சணலைப் போன்றே இந்தியச் சணலும் நீரில் ஊறலைத்து இழைப் பிரிப்புச் செய்யப்படுகிறது. சணல் இழை களின் வண்ணம், பளபளப்பு. வலிமை ஊற வைத்